என் மலர்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் நெமிலி ஆகிய ஒன்றியங்களுக்கு 2ம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது.
நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேலபுலம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் மேலபுலம் புதூர், மோட்டூர், ராமாபுரம், நங்கமங்கலம், எம்.ஜி.ஆர். நகர், அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.
இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகளில் 6000 வாக்காளர்கள் உள்ளனர்.ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக 2 பெண் பேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலபுலம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையத்தில் ஓட்டுபதிவு நடந்தது.
இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் ஒரு தரப்பு வேட்பாளரின் உறவினர் என கூறப்படுகிறது. அவர் அந்த வேட்பாளருக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்தது.
மேலும் முதியவர்கள், பெண்கள் வாக்காளர்கள் வாக்கு அளித்த வாக்கு சீட்டினை சரியாக மடிக்காமல் தலைகீழாக 2 சின்னங்களில் முத்திரை பதியும்படி வாக்கு சீட்டினை மடித்துள்ளார் என மற்றோரு வேட்பாளர் தரப்பினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இப்படி வாக்குசீட்டினை மடித்தால் அந்த வாக்கு செல்லாத வாக்கு ஆகும் என ஒரு தரப்பினர் வாக்கு அளிப்பதை நிறுத்தினர்.
மேலும் ஓச்சேரி பனப்பாக்கம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ், அவளூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் (பொறுப்பு) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் மற்றொரு தரப்பு வேட்பாளர் மத்தியில் 6,8 வார்டுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் டி.எஸ்.பி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாமல் மறு தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் ஆணையத்திலிருந்து அதிகாரிகள் வர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தேர்தல் வாக்கு பெட்டிகளை எடுத்து செல்ல விடாமல் மேலப்புலம் அரசு மேல்நிலைபள்ளி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இரவு 12 மணி வரை சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
மேலும் விடிற்காலை 3மணியளவில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அரக்கோணம் ஆர்.டி.ஓ மற்றும் அரக்கோணம் டி.எஸ்.பி ஆகியோர் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் எதிர் தரப்பு வேட்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகிய 3 பேர் மீது அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மறு வாக்கு பதிவு நடப்பதற்கு சாத்தியகூறு இல்லை.
12-ந்தேதி வாக்கு எண்ணும் நாளான்று நீங்கள் சொல்லிய குற்றசாட்டு உறுதி செய்யப்பட்டால் சம்மந்தபட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி, எதிர்தரப்பு வேட்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதிகாலையில் வாக்கு பெட்டிகளை எடுத்து சென்றனர்
இதையடுத்து அதிகாலை 4 மணியவில் மறியலை கைவிட்டனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அதிகாலையில் வாக்கு பெட்டிகளை ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சின்னகுக் குண்டி கிராமத்தை சேர்ந்தவர் தரணி (வயது 57). விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை நிலத்திற்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று மதியம் சின்னகுக் குண்டி ஆற்று தண்ணீர் செல்லக்கூடிய கால்வாயில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கால்வாயில் தண்ணீர் அதிகமாக செல்வதால் கால்வாயில் தவறிவிழுந்து அடித்துச் சென்று உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தரணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதையொட்டி, அக்டோபர் 4-ந் தேதியிலிருந்து 9-ந்தேதி வரை தொடர்ச்சியாக 6 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நாளான 12-ந்தேதியும், டாஸ்மாக் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பாணாவரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு பாணாவரம்-நெமிலி சாலையில் உள்ள கூத்தம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 411 மது பாட்டில்கள் இருந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க மொத்தமாக வாங்கிச் சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்த குப்பம்மாள் (வயது 70), பாணாவரம் நெமிலி ரோட்டை சேர்ந்த ராஜேஷ் (30) ஆகிய 2 பேரை கைது செய்து, ஆட்டோ மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அரக்கோணத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா இருக்கும் இடத்தை தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் செய்துவிட்டார். இருந்தாலும் இப்போது 1 லட்சம் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. அதேபோல் மருத்துவ ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தில் இதுவரை 26 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர்.
போக்குவரத்து துறைக்கு 1,450 கோடி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.






