என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ஆய்வுகள் முறையாக நடைபெறுகிறாதா என சோதனை
    • எராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாமக சோளிங்கர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் இடையூர் கேசவன், சமூக முன்னேற்ற இணை செயலாளர் ஜெகதீஷன் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுகள் முறையாக நடைபெறுகிறாதா என பாமக கவுரவத்தலைவர் ஜிகே மணி ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் கிராமங்கள் தோறும் கிளைகழகங்களை மேம்படுத்துதல், வாக்குசாவடி தோறும் களப்பணியாளர்கள் அமைத்தல் கிராமங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றுதல், கிளைகழகங்கள் தோறும் திண்ணை பிரசாரங்கள், மாதந்திர கூட்டங்கள் நடத்தி பாமக கொள்கைகளை மக்களுக்கு எடுத்து கூறி கட்சி நிரந்தர வாக்காளர்களை சேர்த்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாசை முதலமைச்சராக ஆக்க அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அப்போது மாவட்ட தலைவர் அ.ம. கிருஷ்ணன், மாநில சமூக நீதிப் பேரவை துணை செயலாளர் சக்கரவர்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் ரஜேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், மாவட்ட முன்னாள் வன்னியர் சங்க செயலாளர் மோகன், ஒன்றிய தலைவர் சம்பத், ஒன்றிய அவைத் தலைவர் கேசவன், கிளை கழக தலைவர்கள் மனோகரன் ஆதிகேசவன் விஜயன், தம்பிப்படை திலீப்பவித்ரன் மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    • குடிப்பழக்கத்திற்கு ஆளானதை கணவர் கண்டித்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த அமராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் குப்பன் (வயது 30). அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் ஓச்சேரி அருகே உள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன் மகள் சுகந்தி (25) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

    இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் (5), சூரியா (2) என நான்கு பிள்ளைகள் உள்ள னர். கணவன், மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. சுகந்தி அதிகமான குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், கணவர் மீண்டும் கண்டிதுள்ளதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த சுகந்தி நேற்று முன்தினம் மதுவில் கொக்கு மருந்து (விஷம்) கலந்து குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

    இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது தாய் மல்லிகா அவளூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறப்பு தீபாராதனை நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவில் வளாகத்தில் 18 அடி உயரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் எழுந்தருளி உள்ளார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நேற்று அனுமன் ஜெயந்தி விழா முன்னிட்டு காலை அஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில் வளாகத்தில் 18 அடியில் அமைந்துள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது. பூமாலை, 1008 வடமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவித்து பல்வேறு வண்ண மலர்களால் பூஜை செய்து சந்தன காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தி மஹா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது
    • ெஜயிலில் அடைப்பு

    அரக்கோணம்:

    நெமிலியை அடுத்த பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் தாமோதரன். இவர் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் நெமிலி போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

    கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி தாமோதரன் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம், இனி தான் எந்த ஒரு குற்ற செயல்க ளிலும் ஒரு ஆண்டு காலத்திற்கு ஈடு பட மாட்டேன் என்று பிணை பத்தி ரம் எழுதி கொடுத்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி மீண்டும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதால் நெமிலி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதன் காரணமாக பிணையை மீறியதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் அறிவுறுத்தலின் படி, அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் க்ரிஷ் அசோக் பரிந்து ரையின் படி, தாமோதரனுக்கு 8 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா உத்தரவிட்டுள்ளார்.

    • 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை
    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த சாலை கிராமம் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு 300 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீர்வரிசை வழங்கினார்.

    அரக்கோணம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணி அலுவலர்கள் தான்யா, அம்சபிரியா, ஒன்றிய குழு தலைவர்கள் நிர்மலா சவுந்தர், பெ.வடிவேலு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா பாபு, சுந்தராம்பாள் பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் சவுந்தர், தமிழ்ச்செல்வன், பெருமாள், பசுபதி, நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி, நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி, துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பணியை தொடங்கி வைத்தார்
    • 1,345 மீட்டர் நீளத்திற்கு கட்டப்படுகிறது

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் மற்றும் அத்திப் பட்டு ஆகிய 2 ஊராட்சிகள் உள்ளது. இப்பகுதிகளி லிருந்து காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, காவேரிப் பாக்கம், சுமைதாங்கி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருப்பாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.48 கோடி மதிப்பீட்டில், 1,345மீட்டர் நீளத்திற்கு கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.

    இந்த திட்டத்தின் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயர்ந்து கூடுதலாக தண்ணீர் கிடைக்க பெறும்.

    மேலும் விவசாய கிணறுகள், மற்றும் குடிநீர் ஆழ்துளை கிணறுகளுக்கும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற் பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் மெய்யழகன் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள், காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி, பேரூராட்சி செயலாளர் நரசிம்மன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சிறப்பு ஹோமம்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 3 நாட்கள் அபிஷேகங்களும், இலவச ஔஷதம் விழாவும் நடைபெற்று வருகிறது.

    அதன்படி தன்வந்திரி பீடத்தில் இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை தன்வந்திரி பீடத்தில் 9 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும், 1008 ஜாங்கிரிகள், வடைகள், எலுமிச்சம்பழம், வெற்றிலை, வாழைப்பழங்களால் மாலைகளும், வெண்ணெய், துளசி சாற்றி சிறப்பு அலங்காரத்தில் அனுமந்த ஹோமம் நடைபெற்றது.

    நேற்று மாலை பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரருக்கு 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகளுடன் சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது. இந்த கலசாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகத்திற்கு தங்கள் கைகளாலேயே கலசங்களை எடுத்து கொடுத்து, ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரரை மனமுருக வழிபட்டு, பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியும் பெற்று சென்றனர்.

    முன்னதாக காலை தன்வந்திரி பீடத்திற்கு வந்த மலேசியா சங்கரமடம், அண்ணாமலையார் தேவஸ்தானத்தை சேர்ந்த ஜகத்குரு சங்கராச்சார்ய சத்குரு ஸ்ரீஸ்ரீ ஜெயப்பிரகாஷேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளுக்கு, பீடத்தின் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சகஸ்ர கலசாபிஷேகம், அனுமன் ஜெயந்தி, அன்னாபிஷேகம் ஆகியவற்றிற்கான பூர்வாங்க ஹோம, பூஜைகளை தொடங்கி வைத்து, தன்வந்திரி பீடத்தில் தரிசனம் செய்து ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று சென்றார். அப்போது ஈரோடு சுந்தரேச சிவாச்சாரியார் உள்பட பலர் உடன் இருந்தனர். மேலும் வருகிற 26ம்தேதி பகல் 12 மணிக்கு மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    • ரெயிலில் கடத்த பதுக்கி வைத்திருந்தனர்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கா் ெரயில் நிலையத்தில் மா்மகும்பல் அடிக்கடி ரேசன் அரிசியை கடத்தி வருகின்றனா்.

    இந்நிலையில் சோளிங்கா் ெரயில் நிலையத்திற்கு மாலை 5 மணிக்கு வரும் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் விரைவு ெரயிலில் ரேசன் அரிசி கடத்துவதாக அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோளிங்கா் ெரயில் நிலையத்தில் நடைமேடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

    அப்போது நடைமேடை அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி மூட்டைகளை மர்கும்பல் ெரயிலில் ஏற்ற முயன்றனா். அப்போது ெரயில்வே பாதுகாப்பு படைவீரர்களை கண்டதும் அந்த கும்பல் நடைமேடையிலேயே அரிசி மூட்டைகளை போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

    இதனையடுத்து 15-மூட்டைகள் கொண்ட சுமாா் 400 கிலோ எடை கொண்ட ரேசன் அரிசியை பறிமுதல் செய்து அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்புபடை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிக்கினார்
    • தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய லட்சுமி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீ சார் அரக்கோணம், புளியமங்க லம் மற்றும் மோசூர் ஆகிய ரெயில் நிலையங்களிளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புளியமங்கலம் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த 2 வாலிபர்கள் போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்த னர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் அரக்கோ ணம் பழனிபேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் வசந்த ராஜ் (வயது 30), என்பதும், ரெயில் பயணிகளிடம் செல் போன் திருட்டில் ஈடுபட்டு வந்த தும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து செல் போன் மற்றும் ரூ.1000 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • திமிரியில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    திமிரியில் மின்சார ஊழியர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஆற்காடு மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். திமிரி உதவி செயற்பொ றியாளர் சாந்தி பூஷன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் சங்கர் கலந்து கொண்டு மின்சார வாரியத்தில் வேலை செய்யும் பணியா ளர்கள் வேலையின் போது எவ்வாறு பாதுகாப்புடன்வேலை செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கினார்.

    நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் ஆற்காடு தன லட்சுமி, மாம்பாக்கம் மெகபு உசேன், கலவை சித்ரா மற்றும் அனைத்து பிரிவு பொறியாளர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திமிரி கிழக்கு உதவி பொறியாளர் யுவராஜ் நன்றி கூறினார்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் காந்தி பரிசு, சான்றிதழ் வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுதிறனாளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ், பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ், 63 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 38 ஆயிரத்து 960 மதிப்பிலான உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.

    • கோவிலுக்கு சென்று திரும்பியபோது கைவரிசை
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையை சேர்ந்தவர் விமலா (வயது 58). இவரது உறவினர் குமாரி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை திருத்தணி முருகன் கோவிலுக்கு ஸ்கூட்டரில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அரக்கோணம் மங்கம்மாபேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் இரவு 8.30 மணியளவில் வந்த போது இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விமலா அணிந்திருந்த 3½ பவுன் தாலி செயினை திடீரென பறித்தனர். அப்போது அதிர்ச்சி அடைந்த விமலா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் விமலா புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×