என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறிப்பு
- கோவிலுக்கு சென்று திரும்பியபோது கைவரிசை
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையை சேர்ந்தவர் விமலா (வயது 58). இவரது உறவினர் குமாரி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை திருத்தணி முருகன் கோவிலுக்கு ஸ்கூட்டரில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அரக்கோணம் மங்கம்மாபேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் இரவு 8.30 மணியளவில் வந்த போது இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விமலா அணிந்திருந்த 3½ பவுன் தாலி செயினை திடீரென பறித்தனர். அப்போது அதிர்ச்சி அடைந்த விமலா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் விமலா புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story






