என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பைக் மீது வேன் மோதி விபத்து
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 70), ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர், நேற்று காலை பைக்கில் ஆற்காடு வந்தார்.

    பின்னர் மீண்டும் விளாப்பாக்கம் நோக்கி செல்லும் போது தாஜ்புரா கூட்ரோடு அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றார்.

    அப்போது 'ஷூ' கம்பெனிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நடராஜ் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச் சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகள் ஆய்வு
    • குளிர்பானங்கள், உலர் பழங்கள் உள்ளிட்டவை சோதனை

    ஆற்காடு:

    ஆற்காடு 70 அடி சாலையில் குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் கடை உள்ளது. இந்த கடைக்கு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஐஸ்கிரீம் சாப்பிடுவது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று ராணிப்பேட்டையை சேர்ந்த முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தனது மகளுடன் இந்த ஐஸ்கிரீம் கடைக்கு சென்று உலர் பழ வகை ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார். அப்போது அதில் முந்திரி தூள்களுடன் புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் (பொறுப்பு) கந்தவேல், ஆற்காடு வட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி, வருவாய் ஆய்வாளர் பாரதி மற்றும் நகராட்சி அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் பார்வையிட்டு கடையில் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், உலர் பழங்கள் உள்ளிட்ட வற்றை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

    • கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றுவதாக தலைவர் உறுதி
    • கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் சுஜாதா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வார்டு 1 முதல் 30 வரை உள்ள தெருவிளக்குகளை மின்சார சிக்கன நடவடிக்கையாக எல்.இ.டி விளக்குகளாக மாற்றி அமைக்க மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம் 1,835 விளக்குகள் ரூ.262.33 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண். 145, நாள் 14-10-2022 அரசாணை வெளியிட்டுள்ளதை தொடர் நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் சென்னை அவர்கள் கடிதம் அனுமதி அளித்து வரப்பெற்றுள்ள கடிதம் மன்றத்தின் பார்வைக்கும் வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேபோல் 11 வார்டுகளில் பல லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சிறுபாலம் மழை நீர் வடிகால்வாய், நீர்மூழ்கி மின்மோட்டார்கள் கழிவு நீர் கால்வாய், சிமெண்ட் சாலை உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றுவது என்பது உள்பட 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் தி.மு.க.நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வார்டுகளில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.

    இதற்கு பதில் அளித்த தலைவர் சுஜாதா வினோத் கோரிக்கைகள் அனைத்தை யும் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

    • எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் பெரிய ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதப்பதாக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது‌.

    அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் யார் அவரை கொலை செய்து இங்கே வீசி சென்றனரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுகரும்பூர் அரசுமேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி குணசேகரன் தலைமை தாங்கினார். காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலை வர் அனிதா குப்புசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர். சக்தி, ஒன்றிக்குழு உறுப்பினர்கள் ஞானமணி அருளரசு, தீபா கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரம்ப சுகாதார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மோகன சுந்த ரம் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு மருத்துவ முகா மினை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    இதனை தொடர்ந்து 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகம், 5 பேருக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம், மருத்துவ அடையாள அட்டை ஆகியவற்றை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ வழங் கினார். பின்னர் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை எம். எல்.ஏவிடம் வழங்கினர்.

    இதில் டாக்டர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் சுகாதார ஆய்வாளர் குமார் நன்றி கூறினார்.

    • தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் - இச்சிபுத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே அரக்கோணம் ரெயில் மார்கத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடப்பதாக நேற்று காலை அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பிணமாகக் கிடந்த உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்த பெண் அரக்கோ ணம் அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியை சேர்ந்த விமலா (60) என்பதும், ரெயில் மோதி பலியானதும் தெரியவந்து. 

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • 468 ஏக்கர் பரப்பளவு கொண்டது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பெரிய ஏரி 468 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி தற்போது மழை காரணமாக நிரம்பி கடை வாசல் சென்றது. 3 ஆடி உயரமுள்ள வெட்டும் மதகுகள் வழியாக உபநீர் வெளியேறி வருகிறது.

    பொதுப்பணிதுறை சார்பில் கார்த்திகை மாதத்தில் உபரி நீர் வெளியேறாதவாறு வெட்டு மதகுகளில் தடுப்பு அமைத்து தண்ணீரை வெயில் காலங்களில் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்திற்காகவும் சேமிப்பது வழக்கம்.

    ஏரியின் 9 வெட்டுமத ஆனால் தற்போது சோளிங்கர் பெரிய குகளிலும் தண்ணீர் வீணாக வெளியேறிகிறது. தண்ணீரை சேமிக்கும் விதமாக கடை வாசல் பகுதியில் உள்ள வெட்டு மதகுகளில் தடுப்பு பலகை அமைத்து தண்ணீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • உறவினர்கள் சாலை மறியல்
    • சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கிருஷ்ணாவரம் கிராமம் ராமானுஜம் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் தனசேகரன் (35).

    இவர் சூரை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேற்பாா்வையாளராக பணி செய்து வந்தார்.இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு தனது வீட்டில் இருந்து பாணாவரம் ரெயில் நிலையத்திற்கு உறவினரை அழைத்து செல்ல தனது பைக்கில் சென்றார்.

    அப்போது ஆயல் ஏரிக்கரை மீது வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து ஏரிகரையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் தனசேகரன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனசேகரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

    இந்த நிலையில் ஆயல் ஏரிக்கரையில் மண் சரிவு ஏற்பட்டதால் தற்காலிகமாக தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு தடுப்பு சுவர் இருப்பது சரிவர தெரியவில்லை.

    இதனால்அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும். நேற்று இரவு நடந்த விபத்தில் வாலிபர் பலியானதாகவும் கூறப்படுகிறது. விபத்தில் பலியானவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில்:-

    ஆயல் ஏரிக்கரை குறுகிய சாலையாக உள்ளது. மேலும் வலது புறம் ஏரிக்கரையை ஒட்டி கிணறு ஒன்று உள்ளது. கிணற்றின் அருகே மண் சரிவு காரணமாக தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.

    இரவு நேரத்தில் வாகனங்களில் வருபவர்களுக்கு தடுப்பு சுவர் இருப்பது தெரியாததால் விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பாணாவரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • புத்தாடை அணிந்து கேக் வழங்கி கொண்டாடினர்
    • ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

    ராணிபேட்டை:

    ராணிபேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கேக் வழங்கி கொண்டாடினர். கிறிஸ்தவ ஆலயங்களில் ஓலைக்குடிசையில் இயேசு பிறப்பது போன்ற நிகழ்ச்சிகள் சித்தரித்து காட்டப்பட்டன. கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • குடிநீர் விநியோகம் சரிவர இல்லை என புகார்
    • போக்குவரத்து பாதிப்பு

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. நகராட்சி ஆணையாளராக குமரி மன்னன் உள்ளார். தற்போது ஆணையாளர் விடுப்பில் சென்றுள்ளார்.

    இந்த நிலையில் சில நாட்களாக வார்டுகளில் முறையாக குடிநீர் வருவதில்லை எனவும் குப்பைகளை சரியாக வாருவதில்லை எனவும் நகர பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    மறியல்

    இந்த நிலையில் 19வது வார்டு பகுதியில் சுமார் 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் வாலாஜா எதிரே எம்.பி.டி. சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார், நகரமன்ற தலைவர் ஹரிணி, துணை தலைவர் கமலராகவன், நகர செயலாளர் தில்லை, நகரமன்ற உறுப்பினர்கள் இர்பான், ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் பாலாற்றில் உள்ள பம்பு ஹவுஸ்ல் காயில் பழுதடைந்துள்ளது இதனை சரிசெய்து 2 நாட்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகரமன்ற தலைவர் ஹரிணி உறுதி அளித்த பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் அரைமணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • விபத்துக்குள்ளான வேன் மீது மற்றொரு வேன் மோதியது
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை சிப்காட்டில் இருந்து தனியார் கம்பெனி ஊழியர்கள் ஆரணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வீ.சி. மோட்டூர் எம்.பி.டி.சாலையில் வேன் சென்ற போது நடுவே அமைக்கப் பட்டு இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    அப்போது திருத்தணியிலிருந்து சபரிமலை நோக்கி வந்த அய்யப்ப பக்தர்கள் வந்த வேன், விபத்துக்குள்ளான வேன் மீது மோதியது.

    இந்த விபத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர் களை ஏற்றி வந்த வேன் தலை குப்புறக்கவிழ்ந்தது. அதில் இருந்த 13 பேரில் 9 பேர் காயம் அடைந்தனர்.

    அதேபோல் அய்யப்ப பக்தர்கள் வந்த வேனில் இருந்த 21 பேரில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    2 வேன்களிலும் காயம் அடைந்த 15 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

    அதில் படுகாயம் அடைந்த அய்யப்ப பக்தர் ஒருவர் மட்டும் வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வாலாஜா போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • பாண்டோகிராப் கருவி உடைந்ததால் கோளாறு
    • பயணிகள் 2 மணி நேரம் அவதி

    அரக்கோணம்:

    சென்னை சென்டிரலில் இருந்து கோவை வரை செல் லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 2.30-க்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

    ரெயில்திரு வள்ளூர் மாவட்டம் திருவா லங்காடு ரெயில் நிலையத்தை கடந்த போது என்ஜினின் மேல் பகுதியில் உயர் அழுத்த கம்பியில் உரசியவாறு வரும் மின்சாரத்தை சேகரிக்கும் 'பாண்டோகிராப்' என்ற கருவி உடைந்து சேதமானது. இதனால் ரெயில் இயங்கமுடியாமல் நடு வழியிலேயே நின்றது.

    இதனையடுத்து அரக்கோணத்தில் இருந்து ரெயில்வே மின்துறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-பெங்களூரூலால் பார்க் எக்ஸ்பிரஸ், சென்னை ஹூப்ளி வாராந்திர எக்ஸ் பிரஸ் ரெயில்கள் மற்றும் புறநகர் ரெயில்களும் ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்டன.

    2 மணி நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து ரெயில் புறப்பட்டு சென்றது. அதன்பின் மற்றரெயில்களும் புறப்பட்டன. இந்த தாமதத் தால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    ×