என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    வாலாஜாவில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

    • குடிநீர் விநியோகம் சரிவர இல்லை என புகார்
    • போக்குவரத்து பாதிப்பு

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. நகராட்சி ஆணையாளராக குமரி மன்னன் உள்ளார். தற்போது ஆணையாளர் விடுப்பில் சென்றுள்ளார்.

    இந்த நிலையில் சில நாட்களாக வார்டுகளில் முறையாக குடிநீர் வருவதில்லை எனவும் குப்பைகளை சரியாக வாருவதில்லை எனவும் நகர பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    மறியல்

    இந்த நிலையில் 19வது வார்டு பகுதியில் சுமார் 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் வாலாஜா எதிரே எம்.பி.டி. சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார், நகரமன்ற தலைவர் ஹரிணி, துணை தலைவர் கமலராகவன், நகர செயலாளர் தில்லை, நகரமன்ற உறுப்பினர்கள் இர்பான், ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் பாலாற்றில் உள்ள பம்பு ஹவுஸ்ல் காயில் பழுதடைந்துள்ளது இதனை சரிசெய்து 2 நாட்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகரமன்ற தலைவர் ஹரிணி உறுதி அளித்த பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் அரைமணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×