என் மலர்
ராணிப்பேட்டை
- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடக்கிறது
சோளிங்கர்:
சோளிங்கர் யோகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மாதத்தில் விசேஷம் என்பதன் காரணமாக 18.11.2022 முதல் 18.12.2022 வரை கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கான சுங்க வரி வசூலிக்க ஒப்பந்தம் விடப்பட்டு, ஒப்பந்தத்தின் அடிப்ப டையில் ஒரு மாத காலம் வாகனங்களுக்கான சுங்க வரி வசூல் செய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் முடிந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் தொடர்ந்து அப்பகுதியில் ஒப்பந்தம் எடுத்த நபர் வாகனங்களுக்கான வரிவசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் சோளிங்கர் நகராட்சி ஆணையா ளர் பரந்தாமன் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் ஒப்பந்த தாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு கொடுத்துள்ளார். புகார் கொடுத்து 8 நாட்களாகியும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. உடனடியாக ஒப்பந்தம் எடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து சுங்க வரி வசூல் செய்வதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வேலை கிடைக்காத விரக்தியில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜாவை அடுத்த திரும லைச்சேரி கிராம ரோடு தெருவை சேர்ந்தவர் அன்பழ கன். இவரது மகன் ராஜேஷ் (வயது 24). இவர் டிப்ளமோ படித்துவிட்டு, அரசு வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்துள்ளார், ஆனால் வேலை எதுவும் கிடைக்க வில்லை. இதனால் விரக்தி அடைந்த ராஜேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வாலாஜா . போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொலை செய்யப்பட்டாரா? விசாரணை
- வாலாஜா ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் கிராமத்தை சேர்ந்த வர் டில்லிபாபு (வயது 32). வெல்டிங் தொழிலாளி. கடந்த 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று டில்லிபாபு பிணமாக கிடந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக் குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து டில்லிபாபு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் ஏதாவது இருக்குமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆடுகளுக்கு தழை வெட்டியபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
கலவை:
கலவையை அடுத்தகுப்பிடிசாத்தம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 65). இவரது மனைவி குப்பம்மாள் (55). இவர் கடந்த 12-ந் தேதி காலையில் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது வேப்பமரத்தில் ஏறி தழை வெட்டி ஆடுகளுக்கு போடும்போது. தவறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகே இருந்தவர்கள் அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவம னையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து வாழைப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கத்தி, அரிவாள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று அரக்கோணம் திருவள்ளூர் ரோடு, சில்வர் பேட்டை, எக்கு நகர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சதி திட்டம்
அப்போது எக்கு நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 4 பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதை பார்த்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
விசாரணையில் அவர்கள் 4 பேரும் அரக்கோணம் பகுதியை சேர்ந்த ரியாஸ் அஹமது, மணிகண்டன், பூவரசன் மற்றும் ஆகாஷ் என்பதும், கொள்ளைடிப்பதற்காக திட்டம் தீட் டியதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொள்ளை சம்பவத்திற்காக வைத்திருந்த கத்தி, அரிவாளை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் அருகே பஸ் இன்று அதிகாலை 2 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
- ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
திருப்பத்தூர் மாவட்டம் சாவடி குப்பத்தில் இருந்து தனியார் பஸ் மூலம் 52 பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக மேல்மருவத்தூருக்கு நேற்று தனியார் பஸ் மூலம் சென்றனர்.
மேல்மருவத்தூரில் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் திருப்பத்தூருக்கு செல்வதற்காக ஆற்காடு வழியாக வந்து கொண்டிருந்தனர்.
ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் அருகே பஸ் இன்று அதிகாலை 2 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஆற்காடு-செய்யாறு நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரம் உள்ள பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த பக்தர்கள் அலறி கூச்சலிட்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சைக்கு பின்னர் பக்தர்கள் 52 பேரும் வேறொரு பஸ் மூலம் திருப்பத்தூருக்கு சென்றனர். விபத்து குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி நடந்தது
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் மணியம்பட்டு சபரி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
மண்டல பூஜை நிறைவு விழா முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வடதமிழ்நாடு மாநில செயல் செயல் தலைவரும் சிப்காட் ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவில் குருசாமியுமான வ.ஜெயச்சந்திரன் தலைமையில் நிர்மலாயம், கணபதி ஹோமம், உஷ பூஜை, கலச பூஜை, கலசாபிஷேசகம், உச்சகால பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று நடை சாத்தப்பட்டது.
18-ம் படி பூஜை விழா
இதனை தொடர்ந்து மீண்டும் நேற்று மாலை நடை திறக்கப்பட்டு குருசாமி ஜெயசந்திரன் தலைமையில் 18ம் படி பூஜை, தீபாராதனை நடந்தது.இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சபரி சாஸ்தா சமிதி குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து சிறப்பு அத்தாழை பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
- நோய் தடுப்பு குறித்து ஒத்திகை நடந்தது
- அனைத்து வசதிகளும் தயாராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்
வாலாஜா:
சீனா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று உருமாற்றம் அடைந்த பி.எப்.7 வகையில் உருவாகி அது வேகமாக பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அந்த வகையில் இந்த கொரோனா நெருக்கடி சவாலை சமாளிக்க நோய் தடுப்பு ஒத்திகையானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்து வமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று மூலமாக ஏற்படும் நெருக்க டிகளை சமாளிக்கும் வகையில் நோய் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைக்கு வருபவரை செவிலியர்கள் பாதுகாப்பு உடையில் மருத்துவரிடம் அழைத்து செல்லுதல் அங்கு மருத்துவர் பரிசோதனை செய்து நோய் தீவிரம் தெரிந்து கொள்ளுதல் இதர பாதிப்புகள் குறித்து அறிந்து கொண்டு அவரை வார்டுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின்படி செவிலியர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட நோயா ளிகளுக்கு முறையான ஆக்சிஜன் மற்றும் வெண்டி லேட்டர் படுக்கைகள் அல்லது சாதாரண கொரோனா வார்டில் அனுமதிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியானது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
மேலும் ஒத்திகை நிகழ்ச்சி குறித்து மருத்துவ மனை கண்கா ணிப்பாளர் மருத்துவர் உஷாநந்தினி கூறுகையில்:-
மருத்துவமனையில் மொத்தம் 230 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 24 ஐ, சி, யூ படுக்கைகள் 206 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தினமும் ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் உபகரணங்கள் வசதியும் உள்ளது.
ஆக்சிஜன் பிளாண்ட், 34 மற்றும் மருத்துவர்கள் 20 பேரும் ஆம்புலன்கள் அனைத்து வசதிகளும் தயாராக உள்ளது மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
- தாசில்தார் எச்சரிக்கை
- சான்றிதழ்களை பெற அதிகாரிகளை நேரடியாக அணுக அறிவுரை
அரக்கோணம்:
அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் சாதி, இருப்பிடம், பிறப்பு, இறப்பு, வாரிசு போன்ற சான்றிதழ்கள் பெற்று தருவதாக செயல் படும் இடைத்தரகர்கள் நட மாட்டம் அதிகமாக இருப்ப தாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இதுகுறித்து அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் கூறியதாவது:-
சான்றிதழ் கேட்டு வரும் பொதுமக்கள் இடைத்தரகர் களை நம்பாமல், சம்பந்தப் பட்ட கிராம நிர்வாக அலுவ லர்கள், வருவாய் ஆய்வாளர் கள் ஆகியோரை அணுகி சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அலுவலக ஊழியர்கள், இடைத்தரகர்களுக்கு துணை போவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இடைத்தரகர்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்தால் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.
- மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த முசிறி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50), மரம் வெட்டும் கூலி தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் ராஜேந்திரன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அப்பகுதியினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லஷ்மி வராஹருக்கு 1008 கலசாபிஷேகம்
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
வாலாஜா:
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி மூன்று நாட்கள் மூன்று அபிஷேகங்களும், இலவச ஔஷதம் வழங்கும் விழாவும் தொடங்கி நடைபெற்று வந்தது.
அதன்படி நேற்று முன்தினம் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு வேறு எங்குமே இல்லாத வகையில் மஹா அன்னாபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம், பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக ஓளஷத பிரசாதமாக வழங்கப்பட்டது.முன்னதாக கோ பூஜை மற்றும் கணபதி பூஜையுடன் ஸ்ரீ லஷ்மி வராஹர் ஹோமம் நடத்தப்பட்டு ஸ்ரீ லஷ்மி வராஹருக்கு சிறப்பு பூஜைகளுடன் 1008 கலசங்களில் நிரப்பபட்டிருந்த புனித நீர் மூலம் கலசாபிஷேகமும் நடைபெற்றது.
அபிஷேக பூஜைகளின் அபிஷேக தீர்த்தம், பால், அன்னாபிஷேக அன்னம் ஆகியவை உள்பட அபிஷேக பிரசாதங்கள் இலவச ஔஷத பிரசாதங்களாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லஷ்மி வராஹர் ஹோமம், கலசாபிஷேகம், மூலவர்ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் அன்னாபிஷேகம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியும் பெற்று சென்றனர்.
கடந்த 26-ம்தேதி முதல் இன்று 28-ம்தேதி முடிய ஸ்ரீ கார்த்தவீர்யார் ஜூனருக்கு கைவிட்ட சொத்துக்கள், களவு போன பொருள்கள், இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைக்கவும், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், தொலைந்த பொருள்கள் திரும்ப கிடைக்கவும் வேண்டி லட்ச ஜப மஹா யாகம் நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று மாலை ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கு 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
- நகர சபை கூட்டத்தில் தலைவர் அறிவுறுத்தல்
- பிளாஸ்டிக் விற்பனையை தடை செய்ய கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ஆற்காடு:
ஆற்காடு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் (பொறுப்பு) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவதம் வருமாறு:-
பொன். ராஜசேகர்:-
ஆற்காடு நகரில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்தீர்கள். சில நாட்களிலேயே அந்தக் கடை மீண்டும் திறக்கப்பட்டன. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். நகராட்சி அதிகாரிகள் வார்டுக்கு சென்று பார்வையிடுவதில்லை.
சுகாதார ஆய்வாளர் பாஸ்கர்:-
பிளாஸ்டிக் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதற்கு மேல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதில்லை என கடை உரிமையாளர் கடிதம் மூலம் எழுதிக் கொடுத்ததின் பேரில் மீண்டும் கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
ரவிச்சந்திரன்: கடந்த ஒரு வாரமாக என்னுடைய வார்டில் துப்புரவு பணிகள் நடைபெறவில்லை. காய்கனி மார்க்கெட்டில் கடையின் மேற்கூரையாக சிமெண்டு சீட்டுதான் போட வேண்டும். ஆனால் இரண்டு கடைகளுக்கு மட்டும் மேல் தளம் போடப்பட்டுள்ளது. யார் அனுமதி அளித்தது.
ஏற்க முடியாது
உதயகுமார்:-
என்னுடைய வாட்டில் தெருக்களில் சேர்ந்துள்ள மண்ணை அகற்றும் படி சென்ற கூட்டத்தில் தெரிவித்து இருந்தேன். இதுவரை அகற்ற வில்லை. அ.தி.மு.க. உறுப்பினர் என்பதால் எந்த பணிகளும் செய்வதில்லையா.
நகர மன்ற தலைவர்
அனைத்து உறுப்பினர்களையும் ஒரே மாதிரி நினைத்துதான் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தீர்கள்.
நகர மன்ற உறுப்பினர்கள் வாட்ஸ் அப்பில் தங்கள் வார்டில் உள்ள குறைகளை பதிவு செய்கிறீர்கள். அதனை ஏற்க முடியாது. முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
செல்வம்:-
எனது வார்டில் புதியதாக குழாய் இணைப்பு வேண்டி மனு கொடுக்கப்பட்டு, டெபாசிட் தொகையும் கட்டப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர் பணியை உடனடியாக செய்து தர வேண்டும்.
துர்நாற்றம்
லோகேஷ்:-
வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வைக்கின்றனர். குப்பை வண்டிகள் வராததால் அதை வீட்டிலேயே வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
கீதா சுந்தர்:-
சீரமைக்கப்பட்ட பூங்காவில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் வார்டு உறுப்பினர் எனது பெயர் இல்லை. அதில் நகர மன்ற உறுப்பினர் பெயரை எழுத வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






