மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது பரிதாபம்போலீசார் விசாரணை
மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
Published on

காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கத்தை அடுத்த முசிறி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50), மரம் வெட்டும் கூலி தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் ராஜேந்திரன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அப்பகுதியினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com