என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் 18-ம்படி பூஜை விழா
- மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி நடந்தது
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் மணியம்பட்டு சபரி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
மண்டல பூஜை நிறைவு விழா முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வடதமிழ்நாடு மாநில செயல் செயல் தலைவரும் சிப்காட் ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவில் குருசாமியுமான வ.ஜெயச்சந்திரன் தலைமையில் நிர்மலாயம், கணபதி ஹோமம், உஷ பூஜை, கலச பூஜை, கலசாபிஷேசகம், உச்சகால பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று நடை சாத்தப்பட்டது.
18-ம் படி பூஜை விழா
இதனை தொடர்ந்து மீண்டும் நேற்று மாலை நடை திறக்கப்பட்டு குருசாமி ஜெயசந்திரன் தலைமையில் 18ம் படி பூஜை, தீபாராதனை நடந்தது.இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சபரி சாஸ்தா சமிதி குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து சிறப்பு அத்தாழை பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






