என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒப்பந்த காலம் முடிந்தும் சுங்கம் வசூல் செய்தவர் மீது போலீசில் புகார்
- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடக்கிறது
சோளிங்கர்:
சோளிங்கர் யோகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மாதத்தில் விசேஷம் என்பதன் காரணமாக 18.11.2022 முதல் 18.12.2022 வரை கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கான சுங்க வரி வசூலிக்க ஒப்பந்தம் விடப்பட்டு, ஒப்பந்தத்தின் அடிப்ப டையில் ஒரு மாத காலம் வாகனங்களுக்கான சுங்க வரி வசூல் செய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் முடிந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் தொடர்ந்து அப்பகுதியில் ஒப்பந்தம் எடுத்த நபர் வாகனங்களுக்கான வரிவசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் சோளிங்கர் நகராட்சி ஆணையா ளர் பரந்தாமன் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் ஒப்பந்த தாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு கொடுத்துள்ளார். புகார் கொடுத்து 8 நாட்களாகியும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. உடனடியாக ஒப்பந்தம் எடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து சுங்க வரி வசூல் செய்வதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






