என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிணை பத்திரத்தை மீறியவருக்கு 8 மாதம் ஜெயில்
- ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது
- ெஜயிலில் அடைப்பு
அரக்கோணம்:
நெமிலியை அடுத்த பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் தாமோதரன். இவர் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் நெமிலி போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி தாமோதரன் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம், இனி தான் எந்த ஒரு குற்ற செயல்க ளிலும் ஒரு ஆண்டு காலத்திற்கு ஈடு பட மாட்டேன் என்று பிணை பத்தி ரம் எழுதி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி மீண்டும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதால் நெமிலி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் காரணமாக பிணையை மீறியதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் அறிவுறுத்தலின் படி, அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் க்ரிஷ் அசோக் பரிந்து ரையின் படி, தாமோதரனுக்கு 8 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா உத்தரவிட்டுள்ளார்.






