என் மலர்
ராணிப்பேட்டை
- ராணிப்பேட்டை கலெக்டர் எச்சரிக்கை
- பொதுமக்கள், வர்த்தகர்கள் தங்கள் அனைத்து பரிவர்த்தனைகளிலும் ரூ.10 நாணயங்களை எந்தவிதத் தயக்கமுமின்றி வாங்க வேண்டும்
ராணிப்பேட்டை:
ராணிப் பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ரூ.10 நாணயம் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக் கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரூ.10 நாணயங்களின் உண்மைத் தன்மை குறித்த சந்தேகம் காரண மாக பல இடங்களில் வர்த்தகர்கள், பொதுமக்கள் அவற்றைப் பெற தயக்கம் காட்டுவது கவனத்துக்கு வந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி இந்த நாணயங்களை அச்சிட்டு புழக்கத்தில் விடுகிறது. இந்த நாணயங்களை வாங்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
ரூ.10 நாணயங்கள் பொருளாதார, சமூக, பண்பாட்டு விழுமியங்களின் பல்வேறு கருப்பொருள் களை பிரதிபலிக்கும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன.
இந்த நாணயங்களின் நீண்ட கால பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு, வெவ்வேறு வடிவங்களில் ஒரே நேரத்தில் சந்தையில் புழக்கத்தில் உள்ளன.
இதுவரை ரிசர்வ் வங்கி 14 விதமான ரூ.10 நாணயங்களை வெளி யிட்டுள்ளது. பொதுமக்கள், வர்த்தகர்கள் தங்கள் அனைத்து பரிவர்த்த னைகளி லும் ரூ.10 நாணயங்களை எந்தவிதத் தயக்கமுமின்றி வாங்க வேண்டும். வங்கிகளும் பரிவர்த்தனை மற்றும் பரிமாற்றத்து க்காக ரூ.10 நாணயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். ரூ.10 நாணயங்களை ஏற்க மறுக்கும் பொதுமக்கள், வர்த்தகர்கள், பஸ் கண்டக்டர்கள், வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
- பொங்கலை முன்னிட்டு நடந்தது
- வழக்கமாக 11 மணிக்கு முடியும் சந்தை 1 மணி வரை நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கி ழமை சந்தை நடைபெற்று வருகிறது.
சூடு பிடித்த ஆட்டு சந்தை
இங்கு காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், கீரைகள், கடலை, தினை வகைகள் என விதவிதமான பொருட்கள் விற்பனை செய்யப்படும். நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த பொருட்களை இங்கு எடுத்து வந்து விற்பனை செய்வார்கள்.
குறிப்பாக ராணிப் பேட்டை ஆட்டுச்சந்தை மிக வும் பிரபலமானது. ராணிப்பேட்டையை சுற்றியுள்ள கிராம மக்கள் விற்பனைக்காக ஆடுகளை சந்தைக்கு கொண்டு வருவார்கள். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி, காஞ்சீபு ரம், திருவள்ளூர், செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடு களை வாங்க வருவார்கள். பண்டிகை காலங்களில் இந்த ஆட்டுச்சந்தை மிகவும் பரபரப்புடன் காணப்படும்.
வழக்கம்போல நேற்று ஆட் டுசந்தை நடந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஆட்டுச்சந்தை மிகவும் பரபரப்புடன் காணப்பட் டது. வழக்கத்தை விட அதிக மான ஆடுகள் மினி லாரி, வேன்களில் அதிகாலையிலேயே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள், ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடுகளின் எடை, தரத்திற்கு தகுந்தபடி பேரம் பேசி போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். குட்டி ஆடுகள் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5,000 வரை விலைபோனது. நடுத்தர ஆடுகள் ரூ.7 ஆயிரத் தில் இருந்து ரூ.10,000 வரையி லும், பெரிய ஆடுகள் அதிக பட்சமாக ரூ.15,000 வரையி லும் விலை போனதாக வியா பாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இந்த ஆட்டுச் சந்தையில் வழக்கமாக ரூ.50 லட்சம் வரை வியாபாரம் நடைபெ றும். ஆனால் நேற்று ரூ.1கோடியே 25 லட்சம் வரை வியாபாரம் நடந்தது. சுமார் 1,500 ஆடுகள் விற்பனையானது.
- பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
- ரூ.18.80 லட்சத்தில் மழை நீர் கால்வாய் பணிகள் மேற்கொள்ள முடிவு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல்நிலை பேரூராட்சி சாதாரணக் கூட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.18 லட்சத்தில் தொடக்கப் பள்ளி இரு வகுப்பறை கட்டிடங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல்நிலை பேரூராட்சி சாதாரணக் கூட்டம் நேற்று அதன் தலைவர் சங்கீதா மகேஷ் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் உஷாராணி அண்ணாதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி இளநிலை உதவியாளர் மனோகரன் வரவேற்றார். கூட்டத்தில் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் விவரம் வருமாறு:-
இந்த சாதாரண கூட்டத்தில் அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதியதாக 2022-2023 ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தில் ரூ.18 லட்சத்தில் இரு வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவது.மேலும் அம்மூர் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் ரூ.7.95 லட்சம் மதிப்பீட்டில் வின்ட்ரோ பிளாட்பாரம் மற்றும் மேற்கூரை அமைப்பது.
மேலும் பேரூராட்சி பொது நிதியில் ரூ.18.80 லட்சத்தில் மழை நீர் வடிகால்வாய் கல்வெட்டு பணிகள் மேற்கொள்வது. அம்மூர் பேரூராட்சி பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பது, பல்வேறு பகுதிகளில் தெரு மின்விளக்குகள் தெருக்களுக்கு பெயர் உடன் கூடிய பலகைகள் வைப்பது, அம்மூர் பேரூராட்சியில் உள்ள ரயில்வே பாலத்தின் மூலம் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் எதிர்கா லத்தின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை போக்க மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட கலெக்டர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது, மழைநீர் வடிகால்வாய் அமைத்தல் சுடுகாடு பாதைக்கு வேலி அமைத்தல் சிறு பாலம் அமைத்தல், பைப் லைன் அமைத்து சிறு மின்விசை பம்பு அமைத்தல், சாலை அமைத்தல் சுகாதார வளாகம் சீரமைத்தல் தெருவிளக்குகள் அமைத்தல் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
அரக்கோணம்:
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை தலைமை ஒருங்கினைப்பாளர் கௌதமசன்னா அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடுபௌத்தர்கள் சங்கப்பேரவை விகார் கவுன்சில் செயற்குழு கூட்டம் மேல்மருவத்தூர் அசோகா புத்த விகாரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு விகார் கவுன்சில் மகா சங்க செயலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
சங்க பொருளாளர் கோவி.பார்த்திபன், தமிழ்நாடு அரசு மாவட்ட சிறுபான்மை உறுப்பினர்கள் அவை செயலாளர் போதிசந்திரன், பௌத்த இளையோர் கழக செயலாளர் தம்மதேவா, கள்ளக்குறிச்சி மாவட்ட சிறுபான்மை நலக்குழு உறுப்பினர் தம்மதர்மேந்திரா, பௌத்த பெண்கள் கழக துணை செயலாளர் ஆர்.டி.லட்சுமிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மகா சங்காதிபதி பிக்கு தம்மசீலர், மகா துணை சங்காதிபதி பிக்கு நாகராஜா ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.
பிக்குகளுக்கு விகார்களை நிர்வகிக்கும் சங்கரத்தினர்களுக்கு அரசிடம் உதவித் தொகை பெற வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழர் திருநாளாம் தை பொங்கலை கொண்டாடும் விதமாக சமத்துவ பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தமிழர் பாரம்பரிய முறையில் பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் திருவிழாவினை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் ஏ.கே.முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், திமுக பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக தயாரித்த போது பரிதாபம்
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெடி விபத்து குறித்து ஆய்வு
ஆற்காடு:
ஆற்காடு அடுத்தகிளைவ் பஜார் பகுதியில் 8-க்கும் மேற் பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் முருகன் (வயது 41) தொழிலாளி. காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக தனது வீட்டில் சட்ட விரோதமாக நாட்டு வெடி குண்டுகள் தயார் செய்ததாக கூறப்படுகிறது. நேற்று நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது திடீரென வெடித்துள்ளது.
இதில் முருகன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மகன் பகவதி (21) படுகாயம் அடைந்தார். அவரை ஆற்காடு அரசு மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச் சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் முருகனின் வீடும் சேதமானது.
இது குறித்த தகவல் அறிந்ததும் ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் ஆற்காடு தீயணைப்புத் துறையின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெடி விபத்து குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- சாலை மறியலிலும் ஈடுபட்டனர்
- அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக புகார்
சோளிங்கர்:
சோளிங்கர் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன் வரவேற்றார்.
கூட்டத்தில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இ-டெண்டர் விடப்பட்டது. இதில் அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி கவுன்சிலர்கள் 17 பேரும் திடீரென்று சோளிங்கர் - சித்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். பின்னர் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இ- டெண்டர் முறையில் அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என கூறி கூட்டத்தில் இருந்து தலைவர் கலைக்குமாரும் வெளிநடப்பு செய்வதாக கூறி விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை
- பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டது
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் பள்ளிக்கு செல்லாத மாணவ, மாண விகள் இருப்பதை அறிந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று அப்பகுதிக்கு நேரடியாக சென்று அங்கிருந்த நரிக்குறவர் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
தொடர்ந்து 5-ம் வகுப்புவரை படித்து பின்னர் பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்ற அனுஷ்கா, நதியா, நயன்தாரா, வைஷாலி என 4 மாணவிகள் மற்றும் சந்தோஷ் என்ற மாணவன் என 5 பேருக்கும், பாட புத்தகங்கள். சீருடைகள் வழங்கி வீட்டிலிருந்து நேரடியாக அழைத்து வந்து அங்குள்ள அரசினர் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்த்தார்.
தொடர்ந்து மாணவர்களுக்கும் கல்வியின் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், தணிகைபோளுர் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் வெங்கடேசன், பாஸ்கரன், சுரேஷ் சவுந்தர்ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- அம்மூர் காப்பு காடு பகுதியில் இருந்து தவறி வந்தது
- தீயணைப்பு துறையினர் மீட்டு காட்டுப் பகுதியில் விட்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் காப்புக்காடு பகுதியில் இருந்து புள்ளி மான் ஒன்று வழி தவறிராணிப்பேட்டைமாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடத்தில் நுழைந்தது.
பதற்றத்தில் அங்கும் இங்குமாக ஓடிய அந்த மான் கட்டிடத்தின் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது. உடனடியாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் மானை மீட்டு, காட்டுப் பகுதியில் விட்டனர்.
- வெளியே சென்று வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 70) ஓய்வு பெற்ற போஸ்ட் மேன்.
இவர் நேற்று பால் வாங்கி கொண்டு வீடு திரும்பும் போது பொன்னையில் இருந்து லாலாப்பேட்டை நோக்கி வந்த பைக் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த பத்மநாபனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் கன்னிகாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி நித்யா (வயது 26) இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
நித்யாவிற்கு சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நித்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சைல்டு லைன் குறித்தும் விளக்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் குப்பிடிச்சாத்தம் ஊராட்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு சமூக பணியாளர் நிரோஷா, கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு உறுதிசெய்தல், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து
அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தடுப்பு குறித்து சைல்டு லைன் 1098 செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.
இதில், காவல் துறையினர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.






