என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடை நின்ற 5 நரிக்குறவ மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு
    X

    இடை நின்ற 5 நரிக்குறவ மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை
    • பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டது

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் பள்ளிக்கு செல்லாத மாணவ, மாண விகள் இருப்பதை அறிந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று அப்பகுதிக்கு நேரடியாக சென்று அங்கிருந்த நரிக்குறவர் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    தொடர்ந்து 5-ம் வகுப்புவரை படித்து பின்னர் பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்ற அனுஷ்கா, நதியா, நயன்தாரா, வைஷாலி என 4 மாணவிகள் மற்றும் சந்தோஷ் என்ற மாணவன் என 5 பேருக்கும், பாட புத்தகங்கள். சீருடைகள் வழங்கி வீட்டிலிருந்து நேரடியாக அழைத்து வந்து அங்குள்ள அரசினர் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்த்தார்.

    தொடர்ந்து மாணவர்களுக்கும் கல்வியின் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், தணிகைபோளுர் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் வெங்கடேசன், பாஸ்கரன், சுரேஷ் சவுந்தர்ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×