என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Camp"

    • அம்மூர் காப்பு காடு பகுதியில் இருந்து தவறி வந்தது
    • தீயணைப்பு துறையினர் மீட்டு காட்டுப் பகுதியில் விட்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் காப்புக்காடு பகுதியில் இருந்து புள்ளி மான் ஒன்று வழி தவறிராணிப்பேட்டைமாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடத்தில் நுழைந்தது.

    பதற்றத்தில் அங்கும் இங்குமாக ஓடிய அந்த மான் கட்டிடத்தின் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது. உடனடியாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் மானை மீட்டு, காட்டுப் பகுதியில் விட்டனர்.

    ×