என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பிளாஸ்டிக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு
    • 5 கி.மீ. வரை நடந்தது

    நெமிலி:

    நெமிலியில் உள்ள நேரு யுகேந்திரா சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து மினி மாரத்தான் போட்டிநடைபெற்றது.

    இதில் நெமிலி ஒன்றிய தலைவர் பெ.வடிவேலு, அரக்கோணம் போலீஸ் துணைசூப்பிரண்டு கிரிஷ் யாதவ் அசோக்ஆகியோர் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, பின்னர் மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து மினி மாரத்தான் போட்டியிலும் கலந்து கொண்டனர்.

    சுமார் 5 கிலோ மீட்டர் வரை நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு நெமிலி மேற்கு ஒன்றிய தி.மு.க மாவட்ட பிரதிநிதி, காட்டுப்பாக்கம். தணிகைவேல் பரிசை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய துணைப் பெருந்த லைவர் ச.தீனதயாளன், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர், பவானி வடிவேலு, அசநெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்சேகர், ஒன்றிய குழு உறுப்பினர்சங்கீதா கதிரவன், நெமிலி பேரூராட்சி மன்ற தலைவர்ரேணுகாதேவி சரவணன், நெமிலி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், ஆசிரியர்.வேதையா, கவுன்சிலர்.சேகர், எம்.பி.பாபு, அப்துல் நசீர் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் தரிசனம்

    வாலாஜா:

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரிஆரோக்ய பீடத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 4 இன்ச் உயரத்தில் தங்கத்தினால் ஆன சொர்ண (தங்க) சனீஸ்வரராக 20 அடி அகலம், 27அடி நீளத்தில், 10 அடி ஆழ பாதாளத்தில் ஸ்ரீ பாதாள சொர்ண (தங்க) சனீஸ்வரராகவும், ஒன்றரை அடி உயரத்தில் நீலா தேவியுடன், கையில் ஊன்று கோலுடன் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரராகவும் தனித்தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிந்து வரும் சனீஸ்வரர்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

    முன்னதாக சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் நடைபெற்றது.யாகத்தில் பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சனிப்பெயர்ச்சி மஹா யாகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி டாலர் மற்றும் அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக உழவர் திருநாளான நேற்று ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். மேலும் இன்று ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் பூர்த்தி விழா, வருகிற 23-ந் தேதி 41அடி உயர சக்கரத்தாழ்வார் ஸ்தூபி பூமி பூஜை விழா, 27-ந்தேதி 21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் பகவானுக்கு முதலாமாண்டு வருஷாபிஷேக விழா, 28-ந் தேதி ரத சப்தமியை முன்னிட்டு 7 குதிரைகள் கொண்டு அஸ்வமேத பூஜை விழா, 29-ந் தேதி லக்ஷ அஸ்வாரூடா ஜப ஹோமம், மஹா பூர்ணாஹூதி விழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    • நாளை நடக்கிறது
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை இணைந்து வட்டார அளவில் மாற்றுத்திறனாளிகள் நல முகாம் நடக்கவுள்ளது.

    நாளை (வியாழக்கிழமை) ஆற்காடு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி முகாம் நடக்கிறது. 20-ந் தேதி அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியி லும், 24-ந் தேதி காவேரிப்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம் நடக்கிறது.

    25-ந்் தேதி நெமிலி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 27-ந் தேதி சோளிங்கர்அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 31-ந் தேதி ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது.

    பிப்ரவரி 1-ந் தேதி வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள் ளியிலும், 2-ந் தேதி திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மாற் றுத்திறனாளிகள் நலத்திட்ட முகாம் நடக்கவுள்ளது.முகாம்களில் காலை 10 மணி முதல் மாலை 2 மணிவரை அந்தந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்தி றனாளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

    முகாமுக்கு வரும் போது ஆதார் அட்டை நகல், 6 போட்டோ, குடும்ப அட்டை நகல், பழைய தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

    இம்முகாமில் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அட்டை, பராமரிப்பு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள், பஸ் பயண சலுகை அட்டை, முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை, பெற்றோர்க ளுக்கான வங்கிக்கடன் ஆகிய திட்டங்களில் பயன் வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்து ள்ளார்.

    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு கிளைவ்பஜார் பகுதி நரிக்குறவர் இனத்தைச்சேர்ந்த வர் முருகன் (வயது 42). இவ ரது மகன் பகவதி (21). இவர்கள் கடந்த 12-ந் தேதி பன்றிகளை வேட்டையாடுவதற்காக வீட் டில்நாட்டுவெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கள் தயாரித்த நாட்டு வெடி குண்டு வெடித்து விபத்து ஏற் பட்டது.

    இதில் முருகன் சம் பவ இடத்திலேயே உயிரிழந் தார். பகவதி படுகாயம் அடைந்து ஆற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு பகவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந் தார். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யார்? என தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    திருத்தணி - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில், பந்தி குப்பம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 51 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடப்ப தாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆனந் தன் தலைமையிலான போலீ சார் பிணத்தை மீட்டு அரக் கோணம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக் குப் பதிவு செய்து இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.

    • பூஜை நடைபெற்று நடை சாத்தப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் கடந்த 14-ந் தேதி மாலை நடைபெற்றது.

    மகர ஜோதியை முன்னிட்டு காலையில் நடைதிறக்கப்பட்டு கலச பூஜை, கணபதி ஹோமம், உச பூஜை, நெய் அபிஷேகம் உச்சி கால பூஜை நடைபெற்றது. இதனைதொடர்ந்து மாலையில் நடை திறக்கப்பட்டு சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வடதமிழ்நாடு செயல் தலைவரும் கோவில் குருசாமியும்மான வ.ஜெயசந்திரன் தலைமையில் மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து நவசபரி அய்யப்பன் ராஜ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து மஹா தீபாராதனை, மஹா புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ சபரி சாஸ்தா சமிதி குழுவினர்களின் பஜனை நடைபெற்றது. பக்கத ர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சபரி நகர், சிப்காட், மணியம்பட்டு, புளியங்கண்ணு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அய்யப்ப சுவாமியை வழிபட்டு சென்றனர்.

    இதனையடுத்து அத்தாழை பூஜை நடைபெற்று நடை சாத்தப்பட்டது.

    • காரில் 15 மூட்டைகளாக கட்டி வைத்து கடத்தல்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா போலீசார் சென்னை - பெங்களூரு சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . சென்னை நோக்கி வந்த காரை போலீசார் சோதனையிட்டனர்.

    அதில் 15 மூட்டைகளில் 150 கிலோ ஹான்ஸ் புகையிலை, குட்கா இருந்தன.இவை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்திச்செல்லப்படுவது தெரிய வந்தது . இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் பாலிமார் மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவரான கோபால்சிங் மகன் மகாவீர் சிங் ( வயது 24 ) , ராஜஸ்தான் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த ராம்சோடா மகன் சந்திரராம் ( 23 ) ஆகியோரை கைது செய்து காருடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.கைப்பற்றப்பட்ட புகையிலை , குட்கா பொருட்களின் மதிப்பு ரூ .1.50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    • உடல் உறுப்புகள் தானம்
    • இதயம், கிட்னி சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35) கட்டிடவேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காவேரிப்பாக்கம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் அவர் மீது மோதியது.

    இதில் ஆறுமுகத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு ஆறுமுகத்திற்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். ஆறுமுகத்தின் கல்லீரல் மற்றும் கண்கள் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கும் இதயம், கிட்னி சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கும் தானமாக பெறப்பட்டது.

    ஆறுமுகத்திற்கு ரேவதி என்ற மனைவி, நிவேதா (14) என்ற மகள் பரத் (11) என்ற மகன் உள்ளனர்.

    • தன்வந்திரி பீடத்தில் நடந்தது
    • நாளை சனிப்பெயர்ச்சி மகா யாகம் நடக்கிறது

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 18-வது ஆண்டாக சமத்துவ பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவை ஒட்டி 16 புதுப்பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.பின்னர் ஸ்வாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு பகவத் கீதை உள்பட சமய நூல்களுடன், பொங்கல் பிரசாதமும், ஆசிகளையும் பீடாதிபதி டாக்டர். ஸ்ரீ முரளிதர சுவாமிகள் வழங்கினார்.

    மேலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டகால மகா பைரவர், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர்க்கு சிறப்பு ஹோமம், அபிஷேகமும், ஸ்ரீ அஷ்ட கால மகா பைரவருக்கு வடை மாலை சாற்றியும் பூஜைகள் நடைபெற்றது.ஸ்ரீ லஷ்மி குபேர ஹோமத்துடன், கணபதி, காயத்ரி ஹோமங்க ளும் நடைபெற்றது.

    சனிப்பெயர்ச்சி திருக்கணிதப்படி ஜனவரி 17-ந்தேதி நாளை சனிப்பெ யர்ச்சி நடைபெறுகிறது.

    இந்த பெயர்ச்சியில் சனி பகவான் மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.சனிப்பெ யர்ச்சியில், சனி பகவான் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி ஆகியவையாக வரும் காலங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே பக்தர்கள் ஏழரை சனி, விரையசனி, ஜென்மசனி, பாதசனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி போன்ற தோஷங்கள் அகலவும், சனிதிசை மற்றும் சனி புக்தி நடைபெறும் போது தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்து கொள்வதும் அவசியம் ஆகும்.தற்போதைய சனிப்பெயர்ச்சியை ஒட்டி ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும், சனி திசை மற்றும் சனி புக்தி நடப்பவர்களும் பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியம் ஆகிறது.தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 4 இன்ச் உயரத்தில் தங்கத்தினால் ஆன சொர்ண (தங்க) சனீஸ்வரராக காட்சி தருகிறார்.

    நாளை சனிப்பெயர்ச்சி யொட்டி மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும், சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெறுகிறது.பக்தர்கள் இந்த யாகம், அபிஷேக, பூஜைகளில் பங்கேற்று சங்கல்பம் செய்து கொண்டு பயன் பெறலாம்.

    சனிப்பெயர்ச்சி மஹா யாகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி டாலர் மற்றும் அருட் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் மேலும் அன்றே உழவர் திருநாள் என்பதால் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளதாக தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

    • இன்று முதல் 10 நாட்கள் நடக்கிறது
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஓயா உழைப்பின் ஓராண்டு என்ற தலைப்பில் புகைப்படக்கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அமைக்கப்பட்டு உள்ளது.

    கண்காட்சியில் அரசின் சாதனைகள் மற்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பல்வேறு துறைகளில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்த 75 புகைப்படங்களும், ராணிப்பேட்டைமாவட்டத்தில்கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பல்வேறு துறைக ளின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கிய நலத்திட்டங்கள் மற்றும் தொடங்கி வைத்த திட்டங்கள் குறித்த 25 புகைப்ப டங்களும் என மொத்தமாக 100 புகைப்படங்கள் காட்சிப்ப டுத்தப்பட உள்ளது.

    இந்த கண்காட்சி இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 23-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. அமைச்சர் ஆர். காந்தி இன்று மாலை 4 மணி அளவில் திறந்து வைத்து கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து பயனாளிக ளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது.

    இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித் துள்ளார்.

    • போலீசார் ரோந்தில் சிக்கினார்
    • 200 கிராம் பறிமுதல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்சால மோன் ராஜா தலைமையி லான போலீசார் கிரு பில்ஸ்பேட்டை, பெருமுச்சி, செய்யூர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது செய்யூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தே கிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபர் பிடித்து விசாரித்தனர். அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    • கலெக்டர் தகவல்
    • திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டதில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), மதுபானக் ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் வருகின்ற 16.01.2023 (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினம் அன்றும் மற்றும் குடியரசு தினமான 26.01.2023 (வியாழக்கிழமை) அன்றும் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கலெக்டர் உத்தரவின்படி மேற்படி இந்நாட்களில் ராணிப்பேட்டை மாவட்டதில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், அரசு மற்றும் தனியார் மதுகூடங்கள் இயங்காது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். அன்றைய தினங்களில் மது பார்கள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

    ×