என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனம்
- பூஜை நடைபெற்று நடை சாத்தப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் கடந்த 14-ந் தேதி மாலை நடைபெற்றது.
மகர ஜோதியை முன்னிட்டு காலையில் நடைதிறக்கப்பட்டு கலச பூஜை, கணபதி ஹோமம், உச பூஜை, நெய் அபிஷேகம் உச்சி கால பூஜை நடைபெற்றது. இதனைதொடர்ந்து மாலையில் நடை திறக்கப்பட்டு சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வடதமிழ்நாடு செயல் தலைவரும் கோவில் குருசாமியும்மான வ.ஜெயசந்திரன் தலைமையில் மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து நவசபரி அய்யப்பன் ராஜ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து மஹா தீபாராதனை, மஹா புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ சபரி சாஸ்தா சமிதி குழுவினர்களின் பஜனை நடைபெற்றது. பக்கத ர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சபரி நகர், சிப்காட், மணியம்பட்டு, புளியங்கண்ணு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அய்யப்ப சுவாமியை வழிபட்டு சென்றனர்.
இதனையடுத்து அத்தாழை பூஜை நடைபெற்று நடை சாத்தப்பட்டது.






