என் மலர்
ராணிப்பேட்டை
- விவசாயிகள் பயனடைந்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
நெமிலி அடுத்த கீழ்வெண்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.
உதவி தோட்டக்கலை அலுவலர் தமிழரசு தலைமை தாங்கினார். துணை தோட்டக்கலை அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தோட்டக்கலை துணைஇயக்குநர் லதா மகேஷ், கீழ்வெண்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி முருகவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் உதவி தோட்டக்கலை அலுவலர் சுமீதா, கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் உள்ளிட்ட விவசாயிகளும் கலந்துகொண்டனர்.
- உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜாவில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஜோபு (வயது 60). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் மனம் உடைந்த ஜோபு, வீட்டில் யாரும் இல்லாத போது தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியிலும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் அனு மதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கவர்னரை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் மாநில பொது செயலாளர் ராஜ்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காங்கிரசார், அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு தமிழக கவர்னரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அவர் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜம்பு ஜவகர்பால் மஞ்சு மாநிலத் தலைவர் நரேஷ் குமார் தக்கோலம் காங்கிரஸ் தலைவர் காந்தி எட்வின் ராஜ் பரிதா உலகநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகள் வேதனை
- நெல்லின் விலை உயராமல் உள்ளதாக புகார்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பனப்பாக்கம் மற்றும் காவேரிப்பாக்கம் அது சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பான்மையானோர் விவசாயத்தை நம்பி உள்ளனர்.
பகுதியில் அதிகமாக நெற்பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு சில நெல் ரகங்களில் அதிகமான மூடுபனி காரணமாக நெற்பயிரில் சிவப்பு பூஞ்சை நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
தனால் நெற் பயிர்கள் வளர்ச்சி காணாமல் குன்றி காணப்படுகிறது. மேலும் பச்சையாக இல்லாமல் சிவப்பு ரகமாக காணப்படுகிறது.
இந்த புதிய வகை நோய் தாக்கத்தால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஏற்கனவே நெற்பயிர்களை சாகுபடி செய்வதற்கு உண்டான உர செலவு இடு பொருட்கள் செலவுகள் அதிகமாக உள்ளதாகவும் அதற்கேற்றார் போல் நெல்லின் விலை உயராமல் குறைவாக உள்ளதாகும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் புதிய நோய் தாக்கத்தால் மேலும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
- கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஈச்சம் தாங்கள் கிராமத்தில் தனியார் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் பூச்சிகளை கட்டுப்படுத்த பொறி (மஞ்சள் நிற ஒட்டும் பொறி, நீல நிற ஒட்டும் பொறி, இன கவர்ச்சி பொறி) வைப்பது குறித்து அப்பகுதியில் உள்ள தோட்ட பயிர்களை பயிடும் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் செய்து விளக்கினர்.
பின்னர் தோட்டக்கலை விவசாயிகள் வெள்ளரி இன காய்கறிகளில் வரும் பூச்சிகளை கட்டுப்படுத்த பொறிகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாட்டான்மை தாரர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் கனிமொழி மு. கார்த்திகா, மு.கீர்த்தனா, சு.கௌசிகா, பெ.ந.லோகேஸ்வரி, பொ.லோகேஸ்வரி ஆகியோர் இருந்தனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் பாப்பான்கு ளம் பகுதியை சேர்ந்தவர் அப் துல்லா. கூலி தொழிலாளி. இவரது மனைவி ஷர்மிளா (வயது 30). இவர் நேற்று காலை ஜெய்பீம் நகர் பகுதி யில் உள்ள ரெயில்வே தண்ட வாளத்தை கடக்க முயன்ற போது அந்தவழியாக வந்த ரெயில் மோதியதில் ஷர்மிளா சம்பவ இடத்திலேயே பரி தாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலை மையிலான போலீசார், ஷர் மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
- கலெக்டர் பாராட்டு
- கூட்டம் கூடுவதை தவிர்த்து டோக்கன் வழங்கி விநியோகிக்கப்பட்டது
திருப்பத்தூர்:
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங் கியதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.சரஸ்வதி கூறியதாவது:-
தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங் கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரொக்கம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, கடந்த 9-ந் தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
- வழிவிடாததால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டைமாவட்டம் ரத்தினகிரியை அடுத்த மாங் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிபாபு (வயது 31), லாரி மெக்கானிக்.
இவர் நேற்று முன்தினம் இரவு மாங் குப்பம் கிராமத்திற்கு மோட் டார் சைக்கிளில் சென்றுள் ளார்.
அப்போது முன்னால் சென்ற பஸ் வழிவிடவில்லை என தெரிகிறது. மாங்குப்பத் தில் உள்ள டாக்டர் குடியி ருப்பு அருகே பஸ்சை டிரைவர் நிறுத்தியுள்ளார்.
அப்போது பஸ் டிரைவர் திருவண்ணாமலை மாவட் டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த மாதவனிடம், ஜோதி பாபு தகராறு செய்துள்ளார்.
இது குறித்து மாதவன் ரத்தின கிரி போலீசில் புகார் செய் தார். அதன் பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து ஜோதிபாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
- 2 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
திருவண்ணாமலை மாவட் டம் ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த வர் ராமு (வயது 19) கல்லூரி மாணவர். இவரது நண்பர்கள் அதேப்பகுதியை சேர்ந்த ஹரி தாஸ் (26), குமரேசன் (22). இவர்கள் மூன்று பேரும் செய் யாறு அடுத்த சேராம்பட்டு கிராமத்தில் உள்ள எல்லை யம்மன் கோவிலுக்கு ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்கள். பின்னர் செய் யாறில் இருந்து ஆரணி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த தட்டச்சேரியில் ஆரணி - செய் யார் சாலையில் உள்ள வளை வில் வந்தபோது, போளூரை அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (50) என்ப வர் ஓட்டிவந்த காரும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்டன.
இதில் மோட்டார்சைக்கி ளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் கல்லூரி மாணவர் ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த மற்ற 2 பேரும் செய்யார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாழப்பந்தல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, ராமு உடலை பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் ராணிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஆ.இளங்கோ வரவேற்றார்.ஒன்றிய செயலாளர் சபரிகிரிசன், பரத், தேவேந்திரன், கண்ணதாசன், சரவணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் எம். கே.முரளி, மாநில பொதுகுழு உறுப்பினர் கிரிகுமரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நெடுமாறன், எஸ்.பி.சண்முகம், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் புல்லட் ராதாகிருஷ்ணன், இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் பகவான் கார்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எல்.எஸ்.மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் பூண்டி மோகன், ரஜினி சக்ரவர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வருகிற 23-ம் தேதி திங்கட்கிழமை அன்று ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எம். கே.முரளி இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது ஆற்காடு பஜார் வீதியில் கால்வாய் மேல் கல்வெட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் உயரமாக போடப்பட்டுள்ள கல்வெட்டு அதன் உயரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் ஞானசெளந்தரி நன்றி கூறினார்.
- வேகத்தடை மீது ஏறி இறங்கியபோது கீழே விழுந்தார்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராமலிங்கம் அடிகள் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுதா (வயது 32), இவர் ஆற்காடு பஸ் நிலையத்தில் பூக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பிரபாகரன் சுதாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு திமிரியை அடுத்த வரகூர் கிராமத்திற்கு சென்றார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு நோக்கி வந்தனர்.
எலாசி குடிசை கூட்ரோடு அருகே வந்தபோது சாலையில் இருந்த வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 60 பேர் பயனடைந்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை (செல்ப்) காப்பாளர் ச.வேலாயுதம் ஆலோசனையின்படி செல்ப் அறக்கட்டளை சார்பில் உயர்கல்வி பயிலும் இருளர் பழங்குடி மாணவர்கள் 60 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் புனித அன்னாள் கல்விச்சுடர் மையத்தில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு லூசினா தலைமை தாங்கினார். ஆசிரியர் பொன்.மாரி வரவேற்றார். பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க தலைவி சிவகாமி, பொதுச்செயலர் ஆறுமுகம், பொருளாளர் நாகராஜ், துணைத்தலைவர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை செயலாளர் கோவி.பார்த்திபன், பொருளாளர் ச.கருணாகரன், திண்டிவனம் தாய் தமிழ் பள்ளி தலைவர் பேராசிரியர் கல்வி மணி, அரக்கோணம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கவுதம், அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவன தலைவர் ஐ.டி.தேவாசீர்வாதம், செல்ப் அறக்கட்டளை துணை செயலர் இமயன், பழங்குடி இன விதவைகள் சங்கத் தலைவர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பழங்குடி இருளர் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்த சங்கீதாரா ஜேஷ், ராஜிநாராயணன், டாக்டர்.விஜிஆனந்த், சாந்திசுந்தர், டாக்டர் நந்தகுமார், ரம்யாராஜேஷ் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனை வருக்கும் இருளர் பழங்குடி மாணவர்கள் சார்பில் ராஜேஷ் நன்றி கூறினார்.






