என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness to Farmers"

    • விவசாயிகளுக்கு வாகன பிரச்சார ஊர்தி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • துண்டு பிரசுரங்கள் மூலமும் விவசாயிகளுக்கு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    வீரபாண்டி :

    மத்திய மாநில அரசுகள் வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தபடுத்தி வருகின்றன . திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு வாகன பிரச்சார ஊர்தி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருப்பூர் வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர்கள் சமரசம் மற்றும் தமிழ்ச்செல்வி கூறியதாவது:- வேளாண் பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களான டிராக்டர் வாடகை திட்டம்,சூரிய கூடார உலர்த்திகள் திட்டம், வேளாண் இயந்திரமாக்குதல், மின்சக்தி மோட்டார் திட்டம், பழைய மின் மோட்டார் மாற்றும் திட்டம், அறுவடைக்குப் பின் தொழில்நுட்பம் சார்ந்த திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    விழிப்புணர்வு பலகையுடன் கூடிய விழிப்புணர்வு வாகன பிரச்சார ஊர்தி விவசாயிகள் அறியும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் கிராமங்களான கரைப்புதூர்,கணபதிபாளையம் ,வடுகபாளையம், மாணிக்கபுரம், பூமலூர், புளியம்பட்டி,மல்லேகவுண்டம்பாளையம் மற்றும் பருவாய் ஆகிய ஊராட்சிகளில் இந்த வாகன பிரச்சார ஊர்தி சென்று ஒலிபெருக்கியின் மூலமும் துண்டு பிரசுரங்கள் மூலமும் விவசாயிகளுக்கு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முன்னதாக கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் விவசாயிகளுக்கு இத்திட்டங்கள் குறித்து ஒலிபெருக்கியின் மூலமும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள திருப்பூர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மற்றும் உதவிசெயற்பொறியாளர் ஆகியோரை 0421-2217574 மற்றும் 0421-2211580 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுவது குறித்து விளக்கம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கட்டளை ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர்.

    மேலும் வாழை மரத்திற்கு ஏற்படும் நோய் மற்றும் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி கையாள வேண்டும் என ஆதிபராசக்தி கல்லூரி மாணவிகள் தர்ஷினி, டில்லி வந்தனா, திவ்யபாரதி, திவ்யஸ்ரீ, ஹரிணி, செ.ஹரிணி.

    அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வாழை மரத்துக்கு ஊசி செலுத்தி நோய் தாக்கத்திலிருந்து எப்படி காப்பாற்ற வேண்டுமென செய்முறை விளக்கம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் விவசாயிகள் முருகேசன் முனுசாமி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூரில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • சமீப காலமாக இயற்கை விவசாயம் குறித்த ஈடுபாடு விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூரில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சமீப காலமாக இயற்கை விவசாயம் குறித்த ஈடுபாடு விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக செயற்கை உரங்களை கைவிட்டு தமக்கு தேவையான உரங்களை தாமே இயற்கை முறையில் தயாரித்து கொள்கின்றனர். ஆனால் பல விவசாயிகள் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் அதிக செயற்கை உரங்களை நிலத்தில் இட்டு மண்வளத்தை குறைத்து விளைச்சலை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர்.

    இந்த நிலை மாற பி.ஜி.பி வேளாண் கல்லூரி

    மாணவர்கள் விவசாயி களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வீட்டுக் கழிவு களை வைத்து இயற்கை உரம் தயாரிக்கும் முறை குறித்து செயல் விளக்கம் காண்பித்தனர்.

    ஆர்கானிக் கம்போஸ்ட் எனப்படும் கரிம உரம் மற்றும் அதை தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினர். மேலும் இதன் பயன்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்தும், இயற்கை உரம் தொடர்பாக விவசாயிகளுக்கு மாண வர்கள் செயல் விளக்க மளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    • கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்


    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஈச்சம் தாங்கள் கிராமத்தில் தனியார் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் பூச்சிகளை கட்டுப்படுத்த பொறி (மஞ்சள் நிற ஒட்டும் பொறி, நீல நிற ஒட்டும் பொறி, இன கவர்ச்சி பொறி) வைப்பது குறித்து அப்பகுதியில் உள்ள தோட்ட பயிர்களை பயிடும் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் செய்து விளக்கினர்.

    பின்னர் தோட்டக்கலை விவசாயிகள் வெள்ளரி இன காய்கறிகளில் வரும் பூச்சிகளை கட்டுப்படுத்த பொறிகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாட்டான்மை தாரர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் கனிமொழி மு. கார்த்திகா, மு.கீர்த்தனா, சு.கௌசிகா, பெ.ந.லோகேஸ்வரி, பொ.லோகேஸ்வரி ஆகியோர் இருந்தனர்.

    ×