என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட காட்சி.
வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
- விவசாயிகளுக்கு வாகன பிரச்சார ஊர்தி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- துண்டு பிரசுரங்கள் மூலமும் விவசாயிகளுக்கு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வீரபாண்டி :
மத்திய மாநில அரசுகள் வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தபடுத்தி வருகின்றன . திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு வாகன பிரச்சார ஊர்தி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து திருப்பூர் வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர்கள் சமரசம் மற்றும் தமிழ்ச்செல்வி கூறியதாவது:- வேளாண் பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களான டிராக்டர் வாடகை திட்டம்,சூரிய கூடார உலர்த்திகள் திட்டம், வேளாண் இயந்திரமாக்குதல், மின்சக்தி மோட்டார் திட்டம், பழைய மின் மோட்டார் மாற்றும் திட்டம், அறுவடைக்குப் பின் தொழில்நுட்பம் சார்ந்த திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
விழிப்புணர்வு பலகையுடன் கூடிய விழிப்புணர்வு வாகன பிரச்சார ஊர்தி விவசாயிகள் அறியும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் கிராமங்களான கரைப்புதூர்,கணபதிபாளையம் ,வடுகபாளையம், மாணிக்கபுரம், பூமலூர், புளியம்பட்டி,மல்லேகவுண்டம்பாளையம் மற்றும் பருவாய் ஆகிய ஊராட்சிகளில் இந்த வாகன பிரச்சார ஊர்தி சென்று ஒலிபெருக்கியின் மூலமும் துண்டு பிரசுரங்கள் மூலமும் விவசாயிகளுக்கு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் விவசாயிகளுக்கு இத்திட்டங்கள் குறித்து ஒலிபெருக்கியின் மூலமும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள திருப்பூர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மற்றும் உதவிசெயற்பொறியாளர் ஆகியோரை 0421-2217574 மற்றும் 0421-2211580 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






