என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக்- கார் மோதி கல்லூரி மாணவர் பலி
- 2 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
திருவண்ணாமலை மாவட் டம் ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த வர் ராமு (வயது 19) கல்லூரி மாணவர். இவரது நண்பர்கள் அதேப்பகுதியை சேர்ந்த ஹரி தாஸ் (26), குமரேசன் (22). இவர்கள் மூன்று பேரும் செய் யாறு அடுத்த சேராம்பட்டு கிராமத்தில் உள்ள எல்லை யம்மன் கோவிலுக்கு ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்கள். பின்னர் செய் யாறில் இருந்து ஆரணி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த தட்டச்சேரியில் ஆரணி - செய் யார் சாலையில் உள்ள வளை வில் வந்தபோது, போளூரை அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (50) என்ப வர் ஓட்டிவந்த காரும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்டன.
இதில் மோட்டார்சைக்கி ளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் கல்லூரி மாணவர் ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த மற்ற 2 பேரும் செய்யார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாழப்பந்தல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, ராமு உடலை பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.






