என் மலர்
ராணிப்பேட்டை
- அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு நவல்பூர் மணியக்கார தெரு கங்கையம்மன் கோவில் அருகே பொது மக்களுக்கான 24 மணி நேர குடிநீர் வசதிக்கான அம்ரூத் 2.0 குடிநீர் திட்டத்தில் ரூ.33கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டும் விழா இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி முன்னிலை வகித்தார்.ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 24 மணி நேர குடிநீர் வசதிக்கான அம்ரூத் 2.0 திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
நிகச்சியில் நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகரமன்ற துணை தலைவர் ரமேஷ்கர்ணா, நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட விவசாய அணி வெங்கடேசன், நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத், குமார் மற்றும் நகராட்சி பொறியாளர், அலுவலக பணியாளர்கள், திமுக பிரதிநிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைதொடர்ந்து நவல்பூர் கிரேட் நகர் 5-வது வார்டில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பொழுது போக்கிற்காக ரூ.60லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்காவினை அமைச்சர் காந்தி திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
- சுதர்சன யாகம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வாலாஜா:
வாலாஜா வெங்கட்ரமண பாகவதர் தெருவில் 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி பெருந் தேவி தாயார் சமேத வரத ராஜ பெருமாள் கோயில் உள்ளது . சங்கீத மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள் இந்த கோயிலுக்கு நேரில் வந்து சில நாட்கள் தங்கி, பல கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை பாடியுள்ளார்.
அவரின் பிரதான சீடர் வாலாஜாபேட்டை வெங்கட்ராமன் பாகவதரும் இந்த பெருமாள் மீது பாடல்களை இயற்றியுள்ளார் . இதற்கிடையே , இந்த கோயிலில் ஆண்டுதோறும் மகா சுதர்சன யாகம் நடை பெறும் .
அதன்படி 20-ம் ஆண்டு தை திருவோணத் திருவி ழாவை முன்னிட்டு மகா சுதர்சனம் யாகம் கோயில் மகாமண்டபத்தில் நேற்று நடந்தது . காலை பகவத் திருவாதனம் , வேதாரண்யம் பிரபந்த கோஷ்டியினரின் தமிழ் வேதம் கலச ஸ்தாபனம் நடந்தது . பின்னர் பரிவார யாகம் மற்றும் மகா சுதர்சன யாகம் நடைபெற்றது . தொடர்ந்து கும்பம் புறப்பாடு நடந்தது .
மேலும் , மூலவர் மற்றும் அலங்கரிக்கப்பட்ட உற்சவ ருக்கு மஹா தீபாராதனை நடந்தது . இதில் , ஏராளமான பக் தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர் . முன்னதாக மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு பால் , தயிர் , தேன் குங்கு மம் , மஞ்சள்பொடி அபி ஷேக பொடி , உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடந்தது .
- கிரேன் விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- மக்கள் அதிகமாக கூடும் திருவிழா போன்ற இடங்களில் அவசர சிகிச்சை ஊர்தியும் மருத்துவ குழுவும் அனுப்பி வைக்கப்படும்.
நெமிலி:
வேலூர் டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் கிரேன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
பின்னர் டி.ஐ.ஜி. முத்துசாமி கூறுகையில்:-
இதுபோன்ற விபத்துக்கள் எதிர்வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க கிரேன் போன்றவற்றை பயன்படுத்த தடை விக்கப்படும்.
மக்கள் அதிகமாக கூடும் திருவிழா போன்ற இடங்களில் அவசர சிகிச்சை ஊர்தியும் மருத்துவ குழுவும் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.
- கதிர், சின்னசாமி ஆகியோர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
- விபத்து குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நெமிலி கீழவீதி கிராமத்தில் மாவடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் மயிலார் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலர் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அலகு குத்தி வந்தனர்.
அப்போது கிரேனில் தொங்கியபடி அம்மனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கிரேனில் பக்தர்கள் பறந்து வந்தபோது மேடு பள்ளமான இடத்தில் நிறுத்தப்பட்டதால் திடீரென கிரேன் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த கீழவீதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஜோதி பாபு (வயது 17) கீழே விழுந்து இறந்தார்.
மேலும் நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து (42) அருகே நின்று ஐஸ் வியாபாரம் செய்து கொண்டிருந்த கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் ஆகியோர் மீது கிரேன் விழுந்ததால் சம்பவ இடத்தில் இறந்தனர்.
இதனைக் கண்ட அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் திருவிழா கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் திருத்தணியை சேர்ந்த கதிர் (19), பெரப்பேரியை சேர்ந்த சின்னசாமி ஒரு பெண் குழந்தை உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். நெமிலி போலீசார் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் கதிர், சின்னசாமி ஆகியோர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதில் சின்னசாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. மற்றவர்கள் அரக்கோணத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரேன் கீழே விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு
- அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு
அரக்கோணம்:
அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 5-வது பேட்ச் 273 ஆண் மற்றும் 17 பெண் உதவி சப்-இன்ஸ்பெக் டர்கள் என 290 பேருக்கு 26 வார பயிற்சி நடைபெற்றது.
அதேபோல் 46-வது பேட்சில்
296 ஆண் மற்றும் 32 பெண்கள் என 328 காவலர்களுக்கு 43 வாரங்கள் பயிற்சி நடந்தது. இதன் நிறைவு விழா பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய முதல்வரும் டி.ஐ.ஜி.யுமான சாந்தி ஜி.ஜெய்தேவ் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை, ஏற்றுக் கொண்டு வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் வீரர், வீராங்க னைகளின் பல்வேறு வீரதீர செயல்கள், சாகசங்கள் நடை பெற்றன. நிகழ்ச்சியில் அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் பயிற்சி மைய துணை முதல்வர் கவு ரவ் தோமர் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு யாகம் பூஜைகள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வாலாஜா:
வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் தினந்தோறும் பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி மாதாந்தோறும் அமாவாசையில் ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் கொண்டு யாகம் நடைபெற்று வருவதும் வழக்கம்.
இந்த நிலையில் நேற்று தை அமாவாசை முன்னிட்டு சகலவிதமான சாப தோஷங்கள், பித்ரு தோஷங்கள் நீங்கிட வேண்டி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு (1000 கிலோ மிளகாய் வற்றல்) ஆயிரக்கணக்கான மிளகாய் தட்டுகளுடன், சௌபாக்கிய பொருட்கள், மூலிகைகள் கொண்டு சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து முரளிதர ஸ்வாமிகள் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு வஸ்திர தானமும், அன்னதானமும் வழங்கி ஆசிர்வதித்தார்.
தை அமாவாசையை ஒட்டி நடைபெற்ற ஹோமங்கள், பூஜைகள் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மேலும் இன்று முதல் வருகிற 30-ம்தேதி திங்கள் கிழமை முடிய தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளியுள்ள ராஜயோகம் தரும் ராஜ மாதங்கிக்கு, சியாமளா நவராத்திரி முன்னிட்டு காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
- மகளிர் கூட்டம் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே அனந்தலை அடுத்த எடக்குப்பம் கிராமத்தில் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் மகளிர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தனியார் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் எடக்குப்பம் கிராமத்தில் தேசிய சிறுதானிய ஆண்டு முன்னிட்டு மகளிர் கூட்டத்தில் சிறுதானிய பலன்கள் மற்றும் அதில் செய்ய கூடிய உணவுகள் பற்றியும் அது மட்டும் இன்றி சிறுதானிய வளர்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தோட்டக்கலை பயிர் செய்வதின் முக்கியத்துவம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவிகள் மு.கனிமொழி, மு.கார்த்திகா, சு.கீர்த்தனா, பெ.கவுசிகா, நா.லோகேஸ்வரி, பொ.லோகேஸ்வரி ஆகியோர் இந்த கூட்டத்தை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை
- விரைவாக பணிகளை முடிக்க அறிவுறுத்தல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நேற்று நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி உள்ள மக்களின் 10 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிடும் 10 மனுக்களின் பணிகளை தனி கவனம் செலுத்தி அவற்றினை நிறைவேற்றிட துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இக்கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத் தலைமை தாங்கினார்.
மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் செயல்படுத்தி வரும் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்தும், அப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் பிரச்சனைகள் நிலுவைகள் குறித்தும், நேரடியாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மாநில பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் வி.சம்பத் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பின்னர் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் ஆற்காடு நகராட்சியில் உணவுகள் வழங்கப்பட்டு வரும் விவரங்கள் மற்றும் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் உணவின் தரம் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களின் கருத்துக்கள் குறித்தும் கிடைக்கப்பெறுகிறதா என கேட்டு அறிந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை மேலும் பள்ளிகளுக்கு விரிவு படுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். ஆகவே இத்திட்டம் முறையாக செல்வதை கண்காணிக்க வேண்டும்.
மேலும் நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை வழங்குவது குறித்தும், அதில் புதிதாக சேர்க்கைகள் சேர்ப்பது குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண்மை தரிசனம் மேம்பாட்டு திட்டங்கள் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். வங்கியின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுவதும் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்படுவது குறித்தும், நிலுவையில் உள்ள வங்கிகள் அதனை உடனடியாக முடிக்கவும் உத்தரவிட்டார்.
நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குடிநீர் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தங்கள் தொகுதியின் முக்கிய பத்து மக்களின் பிரச்சினைகளை தீர்த்திட அதற்கான திட்ட அறிக்கையினை வழங்கிட உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி அதனை நிறைவேற்றிட மனுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.
இத்திட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அரசு தலைமைச் செயலாளருடன் நேரடியாக விவரங்களை கேட்டு அறிந்து வருகின்றனர். ஆகவே சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ள கோரிக்கைகளை ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலர்களும் நேரடியாக கண்காணித்து அதற்கான ஆய்வு பணிகளையும் அதனை நிறைவேற்றிட தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இதில் எவ்வித தொய்வு இருக்கக் கூடாது விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, இணை இயக்குநர் வேளாண்மை வடமலை, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் முத்துசாமி உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 26-ந்தேதி நடக்கிறது
- கலெக்டர் உத்தரவு
ராணிப்பேட்டை:
குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தவறாமல் கிராமசபை கூட்டம் கூட்டப்பட வேண்டுமென ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டத்தில், ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 முடிய கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட் டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஐல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி கிராம சபை கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக இருப்பார்கள்.
கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டி யன் தெரிவித்துள்ளார்.
- நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது
- வேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்து விளக்கம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிடிஓ அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையம் சார்பில் நெமிலி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கிராம பகுதிகளுக்கு சென்று தொழில் மையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார், ஒன்றிய குழு துணைத் தலைவர் தீனதயாளன், பிடிஓ வேதமுத்து ஆகியோர் மு்னிலை வகித்தனர்.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குனர் கோமதி கலந்துகொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தொழில் மையம் சார்பில் வழங்கக்கூடிய திட்டங்கள் குறித்து கூறுகையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
மேலும் ஒன்றிய குழு தலைவர் வடிவேலு பேசுகையில் தமிழ்நாடு அரசால் வழங்கக்கூடிய தொழில் மையம் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வதற்காக வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் தொழில்ம யத்தினை பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
தொழில் மையம் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் குளக்கரையில் நடந்தது
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
சோளிங்கர்:
பித்ரு தர்ப்பணம் செய்வதால் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைந்து குடும்பத்திற்கு ஆசி வழங்குவதாகவும் குடும்பம் தழைக்கும், செல்வம் பெருகும், கடன் பிரச்சினை தீரும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும், வம்சம் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்ம தீர்த்தம் என்கின்ற தக்கான் குளக்கரையில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்தனர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
- பஸ் படிக்கட்டுகளில் அபாயகரமான பயணம் செய்வதை தவிர்க்க வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பெரிய கிராமம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காவேரிப்பாக்கம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பஸ் படிக்கட்டுகளில் அபாயகரமான பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் ஒழிப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தலைமைக் காவலர் பாஸ்கர் தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜன் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.






