என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர் வசதிக்கான அடிக்கல் நாட்டு விழா"
- அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு நவல்பூர் மணியக்கார தெரு கங்கையம்மன் கோவில் அருகே பொது மக்களுக்கான 24 மணி நேர குடிநீர் வசதிக்கான அம்ரூத் 2.0 குடிநீர் திட்டத்தில் ரூ.33கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டும் விழா இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி முன்னிலை வகித்தார்.ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 24 மணி நேர குடிநீர் வசதிக்கான அம்ரூத் 2.0 திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
நிகச்சியில் நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகரமன்ற துணை தலைவர் ரமேஷ்கர்ணா, நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட விவசாய அணி வெங்கடேசன், நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத், குமார் மற்றும் நகராட்சி பொறியாளர், அலுவலக பணியாளர்கள், திமுக பிரதிநிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைதொடர்ந்து நவல்பூர் கிரேட் நகர் 5-வது வார்டில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பொழுது போக்கிற்காக ரூ.60லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்காவினை அமைச்சர் காந்தி திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.






