என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்
- 26-ந்தேதி நடக்கிறது
- கலெக்டர் உத்தரவு
ராணிப்பேட்டை:
குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தவறாமல் கிராமசபை கூட்டம் கூட்டப்பட வேண்டுமென ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டத்தில், ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 முடிய கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட் டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஐல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி கிராம சபை கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக இருப்பார்கள்.
கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டி யன் தெரிவித்துள்ளார்.