என் மலர்
நீங்கள் தேடியது "மாணவிகள் விழிப்புணர்வு"
- தூய்மை பாரத இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம், வேளாண் கல்லூரி களப்பயிற்சி மாணவிகளால் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டாரம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமப்புறப் பகுதிகளில், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்த ஊரக வளர்ச்சித் துறையின் தூய்மை பாரத இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம், வேளாண் கல்லூரி களப்பயிற்சி மாணவிகளால் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைக் குறைத்தல், துணிப்பைகளை பயன்ப
டுத்துதல், மக்கும் மற்றும் மக்காக் குப்பைகளைப் பிரித்துக் கொட்டுதல், கழி வறைகளை பயன்படுத்துதல், சுகாதாரமான ஊராட்சியை உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- மகளிர் கூட்டம் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே அனந்தலை அடுத்த எடக்குப்பம் கிராமத்தில் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் மகளிர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தனியார் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் எடக்குப்பம் கிராமத்தில் தேசிய சிறுதானிய ஆண்டு முன்னிட்டு மகளிர் கூட்டத்தில் சிறுதானிய பலன்கள் மற்றும் அதில் செய்ய கூடிய உணவுகள் பற்றியும் அது மட்டும் இன்றி சிறுதானிய வளர்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தோட்டக்கலை பயிர் செய்வதின் முக்கியத்துவம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவிகள் மு.கனிமொழி, மு.கார்த்திகா, சு.கீர்த்தனா, பெ.கவுசிகா, நா.லோகேஸ்வரி, பொ.லோகேஸ்வரி ஆகியோர் இந்த கூட்டத்தை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






