என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • அடிக்கல் நாட்டு விழா நடந்தது
    • ஒன்றிய குழு தலைவர் உள்பட பிரமுகர்கள் பங்கேற்பு

    நெமிலி:

    நெமிலி அடுத்த பள்ளூர் கிராமத்தில் ஸ்ரீஅரசாலையம்மன் மற்றும் வாராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் வாராகி அம்மனை வேண்டி விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரக்கூடிய அற்புத திருத்தலமாகும்.

    வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்னை, பெங்களூர், வேலூர் காஞ்சிபுரம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பூசணிக்காயில் விளக்கு ஏற்றி அம்மனை வழிப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோவில் முன்புறம் மண்டபம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனையடுத்து உபயதா ரர்களான திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், ராமச் சந்திரன், நாகுஷா, கந்தசாமி, கன்னியப்பன் உள்ளிட்ட உபயதார்களின் மூலம் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கோவில் முன்பு மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேல் மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

    அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உடனிருந்தனர்.

    • குறைதீர்வு கூட்டத்தில் குற்றச்சாட்டு
    • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தகவல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியர் பாத்திமா தலைமையில் விசாயிகள் மாதந்திர குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் நெமிலி, அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் திரளாக கலந்து கொண்ட விவசாயிகள் கூறும்போது:-

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகவும், வாடிக்கையாளர்களையும், விவசாயிகளையும் அலை கழிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

    நெமிலி வட்டம் கரியாக்குடல் பகுதியில் 5 ஏக்கரில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை பயிர்களை நள்ளிரவில் மான்கள் மேய்ந்து சேதப்படுத்துவதாகவும், மேலும் பல ஏக்கரில் பயிரி டப்பட்டுள்ள கேழ்வரகு, வெண்டை மற்றும் சிறுதானிய பயிர்களை மான்கள், காட்டுபன்றிகள், முள்ளம்பன்றிகள் சேதப்படுத்துவதாகவும் அவற்றை நள்ளிரவில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கட்டுபடுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகள் விவசாயிகளை வாரந்தோறும் சந்தித்து என்ன பயிர்களை பயிரிட வேண்டும், பூச்சி தாக்குதலுக்கு என்ன மருந்து தெளிக்க வேண்டுமென ஆலோசனை வழங்க கிராமங்களுக்கு யாரும் வருவதில்லையெனவும் குற்றஞ்சாட்டினர்.

    காப்பீட்டு நிறுவ னங்களுக்கு பயிர்களுக்கான உரிய காப்பீட்டு தொகை செலுத்தியும் பயிர்கள் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுப்பதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் புதிய சாலை மற்றும் சாலை விரிவாக்க பணிகளுக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் அளவிற்கு அதிகமான மண் எடுக்கப்படுவதாகவும் அதிகளவில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதாகவும் அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர் ஏலியம்மா ஆபிரகாம், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, வேளாண்மை அலுவலர் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசிலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் பாத்திமா தெரிவித்தார்.

    • குடிபோதையில் அட்டூழியம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த குப்பிடி சாத்தம் கிராமத்தில் பஸ் நிலையம் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்தராஜி என்பவரது மகன் ஆறுமுகம் (வயது 22) என்பவர் குடிபோதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொது மக்களை அவதூறாக பேசினார்.

    இது குறித்து கலவை போலீஸ் நிலையத்தில் புகார் செய் யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சென்று ஆறுமுகத்தை கைது செய்தனர். ஏற்கனவே இவர் மீது கஞ்சா வழக்கு நிலு வையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • பொதுமக்களிடம் இருந்து 222 மனுக்கள் பெறப்பட்டன
    • மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு


    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 222 மனுக்கள் பெறப்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக் கள் மற்றும் மாற்றுத்திறனா ளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறை களை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, கூட்டுறவு கடனு தவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக

    வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், கிராம பொதுப்பிரச்சனை கள், குடிநீர்வசதி, வேலை வாய்ப்பு வேண்டிஉள்ளிட்ட குறைகள் மற்றும் கோரிக்கை கள் அடங்கிய 222 மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களி டம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற் கொண்டு தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட் டார்.

    தொடர்ந்து, பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும், ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித்

    திட்டம் மூலம் ராணிப் பேட்டை மாவட்ட திட்ட அலுவலகத்தின் கீழ் ஜி.ஆர். பேட்டை குழந்தை மைய பணியாளர் ராணி என்பவர் பணியில் இருக்கும்போது இறந்ததால், அவரது வாரிசு தாரர் தமிழரசி என்பவருக்கு கருணை அடிப்படையில் அரக்கோணம் வட்டாரம், விஸ்வநாதபுரம் குழந்தைகள் நல மையத்தில் குழந்தை மையப்பணியாளராக பணி நியமன ஆணையினை கலெக் டர் வழங்கினார்.

    கூட்டத்தில் துணை கலெக்டர் தாரகேஸ்வரி, பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபா னைமையினர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையாளர் சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு
    • அதிகாரிகள் உடனிருந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார்.

    அப்போது கோப்புகளை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ்வரய்யா (தலைமையிடம்), சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜாகுமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • 200-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது
    • முதல் பரிசாக ரூ.1.10 லட்சம் வழங்கப்பட்டது

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் நந்தியாலம் ஊராட்சிக்குட்பட்ட மாங்குப்பம் கிராமத்தில் பொன்னியம்மன் திருவி ழாவை முன்னிட்டு 44-வது ஆண்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. விழாவை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மிக குறைந்த நேரத்தில் ஓடி எல்லையை கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.85 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.73 ஆயிரம் உள்ளிட்ட 56 பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தேசிய பிராணிகள் பாதுகப்பு நலவாரிய உறுப்பின ரும், ஜல்லிக்கட்டு மேற்பார்வை யாளருமான எஸ்.கே.மிட்டல் மற்றும் வருவாய்துறை அதிகாரி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன் னிட்டு பலத்த போலீஸ் பாது காப்பு போட்டப்பட்டிருந்தது. வேலூர், திருப்பத்தூர், திருவண் ணாமலை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200- க்கும் மேற்பட்ட எருதுகள் போட்டியில் கலந்து கொண் டன. எருதுகளை அடக்க முயன்ற வாலிபர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

    • ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் நரைகுளம் பார்க்தெரு பகுதியை சேர்ந்தவர் குமாரி. இவரது மகள் திவ்யா (வயது 21). இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து சோளிங்கர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திவ்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திவ்யா தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணத்திற்கு முறையான ஆவணம் இல்லாததால் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    வெளி மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் அரக்கோணத்தில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    நேற்று மதியம் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து சென்னை சென்டிரல் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை செய்தனர்.

    பொது பெட்டியில் சோதனை செய்த போது ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஜீலான் (வயது 45) என்பவர் வைத்திருந்தபையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது பணத்திற்கு சரியான கணக்கு இல்லை.

    அதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்து சரிபார்த்தபோது அதில் ரூ.47 லட்சத்து 26 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

    அந்தபணத்தை சென்னை வருமான வரி அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

    அந்த பணத்திற்கு முறையான ஆவணம் இல்லாததால் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமைச்சரின் உதவியாளர் ராஜசேகரன் (62) காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அமைச்சரை மிரட்டும் தொனியில் பேசிய 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    நெமிலி:

    கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை சென்று விட்டு தனது காரில் ராணிப்பேட்டை நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தார்.

    அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர், தான் வக்கீல் என்றும், தன்னிடம் ராணிப்பேட்டையை சேர்ந்த ஒருவர் பணம் வாங்கியுள்ளார். அதை நீங்கள் தான் உடனடியாக வாங்கித்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    சிறிது நேரம் கழித்து மீண்டும் போனில் தொடர்புகொண்ட அந்த நபர், அமைச்சரை தொந்தரவு செய்யும் வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அமைச்சரின் உதவியாளர் ராஜசேகரன் (62) காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தீவிரமாக விசாரித்த போலீசார், செல்போன் சிக்னலை வைத்து 2 வாலிபர்களை பிடித்தனர்.

    அவர்களிடம் விசாரித்தபோது, சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த கோகுல்(25), கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த பாலாஜி(31) என்றும் தெரிய வந்தது.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அமைச்சரை மிரட்டும் தொனியில் பேசிய 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    • மயிலேறு நிகழ்ச்சியின்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • கிரேன் விபத்து தொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரோக்கணம் நெமிலி தாலுகா கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சுமார் 8-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்களை புன்னை மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் பணப்பாக்கத்தை சேர்ந்த கிரேன் ஓட்டுநர் முருகன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • குடிபோதையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 39), கட்டிட மேஸ்திரி இவர் கடந்த 17-ந் தேதி குடிபோதையில் தனது வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார் .

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சம்பத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரக்கோ ணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கன்டெய்னர் லாரி- பஸ் மோதல்
    • போக்குவரத்து பாதிப்பு

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் சோளிங்கர் - அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் சாலை ஓரம் கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    அப்போது சோளிங்கரில் இருந்து அரக் கோணத்தை நோக்கி தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் திடீரென கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது .

    இந்த விபத்தில் தனியார் கம்பெனி பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது . கன்டெய்னர் லாரி மீது பஸ் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    அவர்கள் 108 ஆம் புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அனுப்பி வைக் கப்பட்டனர். பஸ் டிரைவர் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்த்திருந்த நபர் தலையில் பலத்த காயங்களுடன் திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர் .

    அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து அந்த போலீசார் சாலையில் குறுக்கே நின்ற பஸ்சை அப்பு றப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர் .

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×