என் மலர்
ராணிப்பேட்டை
- பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
- அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கிரிகெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தின் சினிமா படபிடிப்பு சூட்டிங் நடை பெற்று வருகிறது.
இதனால் இன்று அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் வரும் பயணிகளை வேறு வழியாக ரெயில் நிலையத்திற்குள் போலீசார் அனுப்பி வருகின்றனர்.
இந்த படப்பிடிப்பில் சினிமா மூத்த நடிகர்கள் பாக்கியராஜ் மற்றும் பாண்டியராஜன் மகன்கள் நடிப்பதாகவும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படப்பிடிப்பு தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற உள்ளதாக படப்பிடிப்பை ேசர்ந்தவர்கள் தெரிவித்தனர் .
இதனால் அரக்கோணம் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
- விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்
- விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அல்லா ளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வரதன் (வயது 70). இவர், வீட்டில் பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கலவை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவண மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற போது தவறி விழுந்தார்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர், கடந்த 24-ந்தேதி மாடுகளை ஓட்டிக்கொண்டு நிலத்திற்கு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை ஆற்காட்டை அடுத்த தாழனூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் பிரபு பிணமாக கிடப்பதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் தலைமையில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ஆற்காடு ஒன்றியம் மாங்காடு ஊராட்சியில் 74வது குடியரசுதினத்தை யொட்டிநடைபெற்ற கிராமசபை கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் கண்ணகி தலைமையில் நேற்று நடைபெற்றது
ராணிப்பேட்டை கோட்டாச்சியர் வினோத்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சி) குமாா், ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட ஊராட்சி க்குழு உறுப்பினர் காந்திமதி பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதில் தாசில்தார் சுரேஷ், சமூக பாதுகாப்பு தாசில்தார் செ.ரவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்பிரபாகரன், அண்ணாமலை, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் சரன்ராஜ், கஜபதி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறுதுறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- ரோந்து பணியின் ேபாது சிக்கினர்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் தடுத்த ரங்காபுரம் ஜங்ஷன் அருகே போலீசார் ரோந்து பணியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.
பின்னர் வாலிபர்களை விரட்டி சென்று பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
பின்னர் தீவிர விசாரணையில் அவர்கள் மேட்டுத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (35 ) மற்றும் பாராஞ்சி கிராமத்தை சேர்ந்த விஜய் (22) என்பதும், இவர்கள் பல்வேறு இடங்களில் பைக் திருடியதும் தெரிய வந்தது.
மேலும் 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வெளியூர் சென்றிருந்த போது துணிகரம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த அன்வர்த்திகான் பேட்டை சின்னத் தெருவை சேர்ந்தவர் சிவக்குமாரி (வயது 61). பூட்டு வியாபாரி . இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிக் கொண்டு சென்னையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
2 வீடுகளில் கொள்ளை
இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து சிவகுமாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதனால்
அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குவந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை திருட்டு போயிருந்தது. இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் இணைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மற் றொரு இடத்தில் ரூ.23,000 பையில் மறைத்து வைத்திருந்ததை மர்ம கும்பல் விட்டு சென்றது தெரிய வந்தது.
அதே ஊரில் பெரிய தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி (65). இவர் கடந்த வாரம் தனது வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இவரது வீட்டின் பின்பக்க கதவு நேற்று காலை உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. தகவலறிந்த ஜெயந்தி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இந்த 2 கொள்ளை சம்பந்தமாக அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- குடியரசு தின விழாவையொட்டி நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வாலாஜா:
வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் பக்தர்கள் அனைவரும் வணங்கி சென்றிடும் வகையில் பாரத மாதாவிற்கு தனி சன்னதி அமைக்க ப்பட்டுள்ளது.
4 அடி உயர பீடத்தில் பின்புறத்தில் பாரத நாட்டின் உருவத்துடன், கையில் தேசிய கொடி மற்றும் சிம்ம வாகனத்துடன் 4 அடி உயரத்தில் பாரதமாதாவிற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தனி சன்னதி கொண்டுள்ள இந்த பாரத மாதாவிற்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில் தேசிய கொடி ஏற்றி ஹோமம், அபிஷேகமும், முக்கிய தினங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருவது வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் தேசிய கொடி ஏற்றி, சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.
பின்னர் ஸ்வாமிகள் பாரத மாதாவிற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
இந்த ஹோமம் மற்றும் பூஜை, தேசிய கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இனிப்பு வழங்கி, பாரத மாதாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது குறித்தும், பாரத மாதாவை வழிபட வேண்டியதின் அவசியம் குறித்தும் பேசினார்.
- 2 பேர் கைது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் பகுதியில் அதிகளவு ஹான்ஸ் உள்ளிட்ட போதை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கடையில் போலீசார் சோதனை நடத்தினர். 6, 250 போதைப்பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அச நெல்லி குப்பத்தைச் சேர்ந்த அருண் (21), குருவராஜபேட்டையைச் சேர்ந்த ரமேஷ் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் எங்கிருந்து போதை பொருட்களை வாங்கி வருகிறார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த பள்ளூர் கிராமம் வாட்டர் பம்ப் ஹவுஸ் அருகே தொடர்ந்து மர்ம கும்பல் மணல் கடத்துவதாக அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு டிராக்டரில் மண்ணை திருட்டுத்தனமாக நிரப்பி கொண்டு இருந்தனர்.
பின்னர் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது டிராக்டர் டிரைவர் மற்றும் உடனிருந்த நபர்கள் டிராக்டரை விட்டு விட்டு தப்பி ஓடினர். இந்த நிலையில் அங்கிருந்த டிராக்டர், 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
- கலெக்டர் கொடியேற்றினார்
- 826 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாகலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து 221 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே14லட்சத்து 30ஆயிரத்து 190 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 826 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
21 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். பள்ளி மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் ராணிப்பேட்டை கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா, தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி, ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருஉருவ சிலைக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- இருக்கைகளை அகற்றிவிட்டதாக குற்றச்சாட்டு
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 25-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.
இந்த கடைகள் குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்து பயணிகள் அமர்வதற்காக வைக்கப்பட் டிருந்த இருக்கைகளை அகற்றிவிட்டு வைத்துள்ளனர். இத னால் பயணிகள் அமர்வதற்கு கூட இடமில்லாமல் தவிக் கின்றனர்.
முறையாக குப்பைகளை அகற்றுவது இல்லை. இரவு நேரங்களில் பாலூட்டும் தாய்மார்கள் அறை குடிமக்க ளின் கூடாரமாக மாறி உள்ளது.
மேலும் பஸ் நிலையத்தில் அடிக்கடி பயணிகளின் செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போவதால், இங்கு மின்விளக்கு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக் கையும் எடுக்கவில்லை.
எனவே பயணிகளுக்கு பயன்படும் வகையில் அடிப்படை வசதி முழுமையாக செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- மனஉளைச்சலில் விபரீதம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அல்லி முத்து தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் பாலாஜி (வயது 28). திருமண மாகாத இவர் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






