என் மலர்
ராணிப்பேட்டை
- மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு மற்றும் எலி காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
- 3 நாட்களுக்கு டெங்கு கொசுக்களை ஒழிக்க மருந்துக்கள் தெளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி 19-வது வார்டு ஜோதி நகர் பாலசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது40). இவரது மனைவி தேவி (35). தம்பதியின் மகன் ஹரிஹரன் (14). அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 13-ந்தேதி சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் சிறுவனை அருகில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 23-ந்தேதி சிறுவனுக்கு கடுமையான வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர் சிறுவனை சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தபோதும், உடல்நிலை மோசமானது. உடனடியாக 24-ந் தேதி சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு மற்றும் எலி காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனை தொடர்ந்து, ராணிப்பேட்டை சுகாதாரத்துறை சார்பில் இன்று முதல் அப்பகுதியில் தூய்மை மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும், 3 நாட்களுக்கு டெங்கு கொசுக்களை ஒழிக்க மருந்துக்கள் தெளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கிரேன் மூலமாக தொங்கியபடி வந்து, அம்மனுக்கு மாலை அணிவிக்க வந்தனர்.
- நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் டிரைவர் பனப்பாக்கத்தை சேர்ந்த முருகன் என்பவரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் திரவுபதி அம்மன் மற்றும் மண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பொங்கல் பண்டிகை முடிந்து, கடந்த 22-ந் தேதி இரவு மயிலேறு திருவிழா நடைபெற்றது.
இதில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கிரேன் மூலமாக தொங்கியபடி வந்து, அம்மனுக்கு மாலை அணிவிக்க வந்தனர்.
அப்போது, கிரேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் பெரப்பேரி காலனியை சேர்ந்த சின்னசாமி (வயது73), கீழ்வீதி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த முத்துகுமார் (42), கீழ்வீதியைச் சேர்ந்த ஜோதிபாபு (17), கீழ்ஆவாதம் பகுதியைச் சேர்ந்த பூபாலன் (48) ஆகியோர் இறந்தனர்.
இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் டிரைவர் பனப்பாக்கத்தை சேர்ந்த முருகன் என்பவரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.
மேலும், இந்த வழக்கில் கிரேன் உரிமையாளர் அருண் (27) மற்றும் விழாக்குழுவினர் சதீஷ் (21), படையப்பா (24), ராமதாஸ் (32), கண்ணன் (28), கலைவாணன் (26) ஆகிய 6 பேர் தேடப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தடுமாறி விழுந்த பரிதாபம்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜாவை அடுத்த வள்ளுவம்பாக்கம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் சுபாஷ் (வயது 31). கட்டிட மேஸ்திரி.
இவர் நேற்று மாலை வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் பைக்கில் வள்ளுவம் பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாலாஜாவை நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சுபாஷ் ஓட்டி வந்த பைக்கில் இருந்து தடுமாறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கி கொண்டார். பின்னர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் சுபாஷ் செய்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர், மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் பேச்சுவார்த்தை
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே மாங்காட்டுசேரிகிராமம் ஆதி திராவிடர் பகுதியை சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் உடல் களை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பாதை வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சஞ்சீவி அம்மாள் (வயது 90) என்பவர் வயது மூப்பு காரணமாக மர ணம் அடைந்தார். அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல தனி நபரின் விவசாய நிலம் வழியாகதான் செல்ல வேண்டும்.
இதனால் சுடுகாட்டுக்கு தனியாக பாதை வேண்டும் என கூறி திடீரென செல்லும் தக்கோலம் கூட் ரோட்டில் பிணத்தை வைத்து 60-க்கும் மேற்பட்ட பெண் களும், ஆண்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், வாலாஜா ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் செல்வி, அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், வருவாய் ஆய்வாளர் பிள்ளையார், கிராம நிர்வாக அலுவ லர்கள் திவாகர், நெடுஞ்செழி யன் மற்றும் தக்கோலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழ னிவேல், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களி டம் பேச்சு வார்த்தை நடத்தி னர். அப்போது பாதை அமைக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதனையடுத்து மறியலை கைவிட்டு பிணத்தை கொண்டு சென்றனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- காட்பாடியை சேர்ந்தவர்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
காட்பாடி அடுத்த தேம்பள்ளி அருகே ஸ்ரீபாதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 35), இவர் அவரது மாமாவிடம் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ராணிப்பேட்டை, சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனி தொழிலாளர்களை காரில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளார்.லாலாபேட்டை அருகே பொன்னை சாலை ரெண்டாடி கூட்ரோட்டில் தொழிலாளர்களை இறக்கிவிட்டு விட்டு பிறகு காரில் மேல்பாடி வழியாக ஸ்ரீபாதநல்லூருக்கு பொன்னை சாலையில் சென்றார்.
குமணந்தாங்கல் அருகே வரும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனிற்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து அருளின் அண்ணன் ஸ்டான்லி, சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்டுப் பாட்டை இழந்து பாலத்தில் மோதியது
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜா அருகே நீலகண்ட ராயன்பேட்டை சோளிங்கர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் துர்காபிரசாத் (வயது 33) இவ ருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் தனக்கு சொந்தமான காரை ஓட்டிக்கொண்டு வாலாஜா -சோளிங்கர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த துர்கா பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.ம.மு.க. சார்பில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நேற்று மாலை ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வசந்த்குமார் ஜெயின் தலைமை தாங்கினார்.
வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்
நகர செயலாளர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அணி தலைவர் என்.ஜி.தமிழ்செல்வன், மாவட்ட மாணவரணி தலைவர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துக் குமார் வரவேற்றார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தேர்தல் பிரிவு செயலாளரும் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான என்.ஜி.பார்த்திபன், தலைமை கழக பேச்சாளர் காரை கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட இணை செயலாளர் சுந்தரி ராமநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆதம், சரளா தினகரன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் டி.ஜி.மணி, சிட்டிபாபு, ராஜாமணி, மணிவண்ணன், நகர செயலாளர்கள் கண்ணதாசன், முத்துமுஹம்மத் யூனூஸ், சீனிவாசன், ஐயப்பன் உள்பட மாவட்ட பிற அணி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், பிற அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர மாணவரணி செயலாளர் பரத் நன்றி கூறினார்.
- லாலாபேட்டையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் மலை அடிவாரத்தில் திரண்டுள்ளனர்.
- போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சனகிரி மலையில் 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் சுற்றுவட்டார பகுதிகளான அக்ராவரம், லாலாபேட்டை, நெல்லிக்குப்பம், மோட்டூர், டெல்லி குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
லாலாபேட்டையில் 7000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். முகுந்த ராயபுரம் மற்றும் லாலாபேட்டையை சேர்ந்தவர்கள் கோவிலை நிர்வகித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிவன் கோவில் முகுந்தராயபுரம் ஊராட்சியில் உள்ளதால் கோவில் சார்பில் அறக்கட்டளை தொடங்கி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அறக்கட்டளை நிர்வாகிகள் முகுந்தராயபுரத்தை சேர்ந்தவர்களாக மட்டும் இருப்பார்கள் என்றும் லாலாபேட்டை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் லாலாபேட்டையை சேர்ந்தவர்களின் விவசாய நிலங்கள் முகுந்தராயபுரம் பகுதியில் உள்ளதால் அங்குள்ள 4 ஏரிகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்தக்கூடாது.
சுடுகாடுகளை பயன்படுத்தக் கூடாது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த லாலாபேட்டை பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி பிரமுகர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் லாலாபேட்டை பஸ் நிலையம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று காலை திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் லாலாபேட்டையில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வைத்தனர்.
மேலும் அறக்கட்டளை நிர்வாகிகள் இன்று தேர்வு செய்யப்பட உள்ளதால் லாலாபேட்டையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் மலை அடிவாரத்தில் திரண்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு மீண்டும் பள்ளியில் சேர்ந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- செல்போன் எண் பதிவுகள் மூலம் சிறுமியையும், சுந்தர்ராஜையும் கொடைக்கானலில் கண்டுபிடித்து போலீசார் அழைத்து வந்தனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பாரதி நகர் காட்டன் பஜார் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(28). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். சுந்தர்ராஜுக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சுந்தர்ராஜ் பணிபுரியும் நிறுவனத்தில் ராணிப்பேட்டை அருகே ஒரு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் பணியாற்றி உள்ளார். அப்போது, சுந்தர்ராஜ் மற்றும் சிறுமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு மீண்டும் பள்ளியில் சேர்ந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதற்கிடையே, கடந்த 13-ந்தேதி சுந்தர்ராஜ் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காணாமல் போன சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் செல்போன் எண் பதிவுகள் மூலம் சிறுமியையும், சுந்தர்ராஜையும் கொடைக்கானலில் கண்டுபிடித்து போலீசார் அழைத்து வந்தனர். கொடைக்கானலில் அறை எடுத்து மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வாசுகி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்து வேலூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம்
- ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழ கம் (தாட்கோ) சார்பில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் மாணவர்களுக்கு பல் வேறு திறன் அடிப்படையி லான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சி யாக தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியினை பெற 1 அரசு மற்றும் அரசு உதவிபெ றும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்ப டிப்பில் இறுதியாண்டு படிக் கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் கான கால அளவு 3 மாதமா கும். அனைத்து செலவுகளும் தாட்கோவால் வழங்கப் படும்.
தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம். தகுதியுள்ள ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதள மான www.tahdco.com என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரி வித்துள்ளார்.
- வருகிற 30-ந் தேதி நடக்கிறது
- ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி திங்கட்கிழமை அன்று மாலை 3 மணியளவில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், ராணிப்பேட்டை, பாரதி நகரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள்.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சினைகளை களைத்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
- 2022- 2023-ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
- ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
பருவ மழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும் போது விவசாயிகளின் வாழ்வா தாரத்தையும் வருமா னத்தையும் பாதுகாத்திடும் வகையில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு 2022- 2023-ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவரை பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் 31/01/2023, தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்திரி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் 31.01.2023, வெண்டைபயிறுக்கு கடைசி நாள் 15.02.2023 மற்றும் கரும்பு பயிருக்கு கடைசி நாள் 31/03/2023 ஆகும்.
விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும் போது ஒரு சர்வே எண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்தாலோ, சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை விட கூடுதலாக பதிவு செய்தாலோ, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட வழிகாட்டுதல் அடிபடையில் தவறான பதிவுகள் என்று நீக்கம் செய்யப்படும்.
விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / இ-அடங்கல் /விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகலுடன், பயிர் காப்பீட்டுத் தொகையில், 1.5 சதவீதத் தொகையையும், ஓராண்டு பயிர்கள் மற்றும் வணிகப் பயிர்களுக்கு 5 சதவீத தொகையையும் விவசா யிகளின் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
நவரை பருவ நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.495 பயிர் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.கரும்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2730 பயிர் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும், இதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்படி பயிர்களை சாகுபடி செய்துவரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களையோ அணுகுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.






