என் மலர்
ராணிப்பேட்டை
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகையையொட்டி தீவிரம்
- ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது
அரக்கோணம்:
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து காட்பாடிக்கு ரெயில் மூலம் வரு கிறார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்குப்பட்ட பகுதிகளில் உள்ளரெயில் தண்டவாளம் மற்றும் ரெயில் நிலையங்களில் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டுயாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் சலோமோன் ராஜா, தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் ஷெரிப், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன், தாசன் மற்றும் சுமார் 300 போலீசார் துப்பாக் கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது.
- மேல்விஷாரம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
- நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
மேல்விஷாரம் நகராட்சியில் நகரமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் எஸ்.டி.முஹமது அமீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குல்ஜார் அஹமது, பொறியாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:- இம்தியாஸ்அஹமது: நகரில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நகரில் சீரமைக்க ஜபர்அஹமது பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.
ஜமுனா ராணிவிஜி:
நகர்மன்றக் கூட்டத்துக்காக எத்தனை நாளைக்கு முன்பு உறுப்பினர்களுக்கு கடிதம் தர வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும்.
தலைவர்:
இனிமேல் 5 நாள்களுக்கு முன்பாக கடிதம் வழங்கப்படும்.
லட்சுமி:
சலீம் நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும், தொடர்ந்து கொசு மருந்து அடிக்க வேண்டும்.
தலைவர்:
கொசு மருந்து அடிக்கப்படும். கொசு மருந்து அடிக்கும் போது அந்தப் பகுதி வார்டுநகராட்சி உறுப்பினர்களிடம் கையொப்பம் வாங்கப்படும். இதில், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
- மேல்விஷாரம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
- நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
மேல்விஷாரம் நகராட்சியில் நகரமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் எஸ்.டி.முஹமது அமீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குல்ஜார் அஹமது, பொறியாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:- இம்தியாஸ்அஹமது: நகரில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நகரில் சீரமைக்க ஜபர்அஹமது பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.
ஜமுனா ராணிவிஜி:
நகர்மன்றக் கூட்டத்துக்காக எத்தனை நாளைக்கு முன்பு உறுப்பினர்களுக்கு கடிதம் தர வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும்.
தலைவர்:
இனிமேல் 5 நாள்களுக்கு முன்பாக கடிதம் வழங்கப்படும்.
லட்சுமி:
சலீம் நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும், தொடர்ந்து கொசு மருந்து அடிக்க வேண்டும்.
தலைவர்:
கொசு மருந்து அடிக்கப்படும். கொசு மருந்து அடிக்கும் போது அந்தப் பகுதி வார்டுநகராட்சி உறுப்பினர்களிடம் கையொப்பம் வாங்கப்படும். இதில், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
- 3 நாட்கள் நடக்கிறது
- கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்
சோளிங்கர்:
சோளிங்கர் லட்சுமி நர சிம்மர் கோவிலில் தை தெப்ப உற்சவம் நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
சோளிங்கரில் அமைந் துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டுதோ றும் தை தெப்ப உற்சவம் மலையடிவாரத்தில் உள்ள தக்கான் குளத்தில் 3 நாட்களுக்கு நடைபெறு வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை தெப்ப உற்சவம் நாளைதொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
முதல் நாள் தெப்ப உற்சவத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பக்தோசித பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 3 சுற்றுக்கள் வலம் வந்து அருள்பாலிக்கிறார். 2-ம் நாளில் 5 சுற்றுக்களும், 3ம் நாளில் 7 சுற்றுக்களும் தெப்பத்தில் வலம் வந்து சுவாமி அருள்பாலிக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்த தகவலை கோவில் உதவி ஆணையர் ஜெயா தெரிவித்துள்ளார்.
- முருகருக்கு வெள்ளி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
- லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பிரசித்திபெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது.
இந்த கோவி லில் நேற்று தை கிருத் திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு அபி ஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார். கிருத்திகை முன்னிட்டு வெள்ளிவேல் மற்றும் சேவல் கொடியுடன் வெள்ளி அங்கி அணிந்து சிறப்பு அலங்காரத் தில் வள்ளி, தெய் வானை சமேத முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவில் திரளான பக்தர் கள் கலந்துகொண்டு அரோகரா பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு பகு திகளில் இருந்து பக் தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதேபோல் ரத்தின கிரி பாலமுருகன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
- விவசாயிகள் வலியுறுத்தல்
- ராணிப்பேட்டையில் குறைதீர்வு கூட்டம் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டைமாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந் தது. மாவட்ட வருவாய் அலு வலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கூட் டத்தில், மாவட்டம் முழுவதி லும் இருந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைக ளுக்கு பதில் அளித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
கீழ்வெங்கடாபுரம் கிராமத் தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண் டும். புன்னை சுகாதார நிலை யத்தை தலைமையகமாக மாற்ற வேண்டும். கால்நடை மருத்துவமனையில் மருத்து வர் நியமனம் செய்ய வேண் டும். கறியாகுடல் கிராமத்தில் உள்ள ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
உயர் அழுத்த மின்கோபுரங் கள் அமைத்ததற்கு இழப்பீடு,
பயிர் காப்பீடு வழங்க வேண் ம்.தோல் பதனிடும் தொழிற் சாலைகள் மூலம் கழிவுகள் அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவேண் டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர். அதற்கு உரிய நடவ டிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் வடலை,
துணை இயக்குனர் விஸ்வநா தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவ ணன், வேளாண்மை அலுவ லர் த.பாபு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- 212 மனுக்கள் பெறப்பட்டன
- நடவடிக்கை எடுக்க அதிகாரி உத்தரவு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலககூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத் துவத்துறை, கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் பொதுநலன் குறித்த மனுக் கள் என 212 மனுக்கள் பெறப்பட்டன.
அந்த மனுக்களை சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தர விட்டார்.
கூட்டத்தில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்துறை) தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையி னர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையாளர் சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் ஸ்டெல்லா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங் கில், மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு, தொழு நோய் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும்நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தார கேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையாளர் சத்யபிர சாத், மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது
- விவசாயிகள் மகிழ்ச்சி
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பனப்பாக்கம் காவேரிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில் காலை 10:30 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே அறிவித்தபடி வரும் இரண்டு நாட்களில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திடீரென பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- போலீசார் பேச்சுவார்த்தை
- அமைதி கமிட்டி கூட்டம் அமைப்பதாக உறுதி
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சனகிரி மலையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவன் கோயில் உள்ளது.
இந்த கோவிலில் லாலாப்பேட்டையை சேர்ந்தவர்கள் நிர்வாகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முகுந்தராயபுரம் ஊராட்சிமன்ற தலைவர் காஞ்சனகிரி மலைக்கோயில் எங்கள் பஞ்சாயத்திற்கு உட்பட்டது எனவும் இனி நாங்கள் தான் நிர்வாக செய்வோம் என தெரிவித்தாக லாலாப்பேட்டை பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனை கண்டித்து நேற்று லாலாப்பேட்டை ஊராட்சி பொது மக்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் முகுந்தராயபுரம் ஊராட்சிமன்ற தலைவரை கண்டித்து ஆர்பாட்டம் மற்றும் கடையடைப்பு செய்தனர்.
இதனையடுத்து காஞ்சனகிரி மலையடிவாரத்தில் லாலாப்பேட்டை பொதுமக்கள் ஒன்றுகூடி இன்று கலெக்டரிடம் மனு கொடுப்பதாக முடிவு செய்து பின்னர் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் 2-வது நாளாக லாலாப்பேட்டை கிராம பொதுமக்கள் லாலாப்பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வினோத்குமார், தாசில்தார் நடராஜன், டி.எஸ்.பிக்கள் பிரபு, ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் ஆகியோர் லாலாப்பேட்டை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்துனர்.
இதனை அனைத்தும் கேட்ட கோட்டாட்சியர் வினோத் குமார் பேசியதாவது:-நீங்கள் அனைவரும் தெரிவித்த குற்றச்சாடுகளுக்கு அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் பீஸ் கமிட்டி கூட்டம் அமைத்து இதற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
மேலும் லாலாப்பேட்டை ஊராட்சியை மறுவரையறை செய்ய பொதுமக்கள் நீங்கள் மனுக்களாக கொடுங்கள் அது அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- பாணாவரம் அருகே அறையில் சிறை வைப்பு?
- 2 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள மேல்வீராணம் பகுதியில் தனியார் இரும்பு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் சுமார் 35-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்ளுக்கு 2 மாதமாக மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் மாத ஊதியம் கேட்டால் வெளி ஆட்களை கொண்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது.
வடமாநில தொழிலாளர்களில் 5 பேர் நேற்று மாலை காய்கறி வாங்க வெளியே சென்றிருந்த போது மீதம் இருந்த 27 தொழிலாளர்களை தொழிற்சாலையின் உள்ளே அடைத்து வைத்து பூட்டி வைத்துள்ளதாகவும் அவர்களை வெளியே அனுப்ப மறுப்பதாவும், மேலும் வெளியே சென்ற தொழிலாளர்களை தொழிற்சாலையின் உள்ளே செல்ல அனுமதிக்காமல் மிரட்டி வெளியேற்றியதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாணாவரம் ேபாலீசில் வடமாநில தொழிலாளர்கள் புகார் அளித்தனர்.
தொழிற்சாலை நிர்வாகம் தரவேண்டிய ஊதியத்தையும், தொழிற்சாலையின் உள்ள அடைத்து வைத்திருக்கும் 25-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.
- குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் திரவுபதி அம்மன் மற்றும் மண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பொங்கல் பண்டிகை முடிந்து, கடந்த 22 -ந் தேதி இரவு மயிலேறு திருவிழா நடைபெற்றது.
இதில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கிரேன் மூலமாக தொங்கியபடி வந்து, அம்மனுக்கு மாலை அணிவிக்க வந்தனர்.
அப்போது, கிரேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் பெரப்பேரி காலனியை சேர்ந்த சின்னசாமி (வயது 73), கீழ்வீதி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த முத்துகுமார் (42), கீழ்வீதியைச் சேர்ந்த ஜோதிபாபு (17), கீழ்ஆவாதம் பகுதியைச் சேர்ந்த பூபாலன் (48) ஆகியோர் இறந்தனர்.
இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் டிரைவர் பனப்பாக்கத்தை சேர்ந்த முருகன் என்பவரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.
மேலும், இந்த வழக்கில் கிரேன் உரிமையாளர் அருண் (27) மற்றும் விழாக்குழுவினர் சதீஷ் (21), படையப்பா (24), ராமதாஸ் (32), கண்ணன் (28), கலைவாணன் (26) ஆகிய 6 பேர் தேடப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






