என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Participation of Councilors"

    • மேல்விஷாரம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
    • நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    மேல்விஷாரம் நகராட்சியில் நகரமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் எஸ்.டி.முஹமது அமீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குல்ஜார் அஹமது, பொறியாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:- இம்தியாஸ்அஹமது: நகரில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நகரில் சீரமைக்க ஜபர்அஹமது பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    ஜமுனா ராணிவிஜி:

    நகர்மன்றக் கூட்டத்துக்காக எத்தனை நாளைக்கு முன்பு உறுப்பினர்களுக்கு கடிதம் தர வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும்.

    தலைவர்:

    இனிமேல் 5 நாள்களுக்கு முன்பாக கடிதம் வழங்கப்படும்.

    லட்சுமி:

    சலீம் நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும், தொடர்ந்து கொசு மருந்து அடிக்க வேண்டும்.

    தலைவர்:

    கொசு மருந்து அடிக்கப்படும். கொசு மருந்து அடிக்கும் போது அந்தப் பகுதி வார்டுநகராட்சி உறுப்பினர்களிடம் கையொப்பம் வாங்கப்படும். இதில், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    ×