search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரி, கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும்
    X

    ஏரி, கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும்

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • ராணிப்பேட்டையில் குறைதீர்வு கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டைமாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந் தது. மாவட்ட வருவாய் அலு வலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கூட் டத்தில், மாவட்டம் முழுவதி லும் இருந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைக ளுக்கு பதில் அளித்தனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    கீழ்வெங்கடாபுரம் கிராமத் தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண் டும். புன்னை சுகாதார நிலை யத்தை தலைமையகமாக மாற்ற வேண்டும். கால்நடை மருத்துவமனையில் மருத்து வர் நியமனம் செய்ய வேண் டும். கறியாகுடல் கிராமத்தில் உள்ள ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

    உயர் அழுத்த மின்கோபுரங் கள் அமைத்ததற்கு இழப்பீடு,

    பயிர் காப்பீடு வழங்க வேண் ம்.தோல் பதனிடும் தொழிற் சாலைகள் மூலம் கழிவுகள் அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவேண் டும்.

    இவ்வாறு விவசாயிகள் பேசினர். அதற்கு உரிய நடவ டிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.

    கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் வடலை,

    துணை இயக்குனர் விஸ்வநா தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவ ணன், வேளாண்மை அலுவ லர் த.பாபு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×