என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜா தன்வந்திரி பீடத்தில் பாரத மாதாவிற்கு ஹோமம், அபிஷேகம்
    X

    பாரத மாதாவிற்கு சிறப்பு அபிஷேகம் செய்த காட்சி.

    வாலாஜா தன்வந்திரி பீடத்தில் பாரத மாதாவிற்கு ஹோமம், அபிஷேகம்

    • குடியரசு தின விழாவையொட்டி நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வாலாஜா:

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் பக்தர்கள் அனைவரும் வணங்கி சென்றிடும் வகையில் பாரத மாதாவிற்கு தனி சன்னதி அமைக்க ப்பட்டுள்ளது.

    4 அடி உயர பீடத்தில் பின்புறத்தில் பாரத நாட்டின் உருவத்துடன், கையில் தேசிய கொடி மற்றும் சிம்ம வாகனத்துடன் 4 அடி உயரத்தில் பாரதமாதாவிற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    தனி சன்னதி கொண்டுள்ள இந்த பாரத மாதாவிற்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில் தேசிய கொடி ஏற்றி ஹோமம், அபிஷேகமும், முக்கிய தினங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருவது வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் தேசிய கொடி ஏற்றி, சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.

    பின்னர் ஸ்வாமிகள் பாரத மாதாவிற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    இந்த ஹோமம் மற்றும் பூஜை, தேசிய கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இனிப்பு வழங்கி, பாரத மாதாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது குறித்தும், பாரத மாதாவை வழிபட வேண்டியதின் அவசியம் குறித்தும் பேசினார்.

    Next Story
    ×