என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் 10 பேர் படுகாயம்
    X

    விபத்தில் 10 பேர் படுகாயம்

    • கன்டெய்னர் லாரி- பஸ் மோதல்
    • போக்குவரத்து பாதிப்பு

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் சோளிங்கர் - அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் சாலை ஓரம் கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    அப்போது சோளிங்கரில் இருந்து அரக் கோணத்தை நோக்கி தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் திடீரென கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது .

    இந்த விபத்தில் தனியார் கம்பெனி பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது . கன்டெய்னர் லாரி மீது பஸ் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    அவர்கள் 108 ஆம் புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அனுப்பி வைக் கப்பட்டனர். பஸ் டிரைவர் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்த்திருந்த நபர் தலையில் பலத்த காயங்களுடன் திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர் .

    அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து அந்த போலீசார் சாலையில் குறுக்கே நின்ற பஸ்சை அப்பு றப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர் .

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×