தை அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் குளக்கரையில் நடந்தது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
லட்சுமி நரசிம்மர் கோவில் தக்கான் குளக்கரையில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்த போது எடுத்த படம்.
லட்சுமி நரசிம்மர் கோவில் தக்கான் குளக்கரையில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்த போது எடுத்த படம்.
Published on

சோளிங்கர்:

பித்ரு தர்ப்பணம் செய்வதால் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைந்து குடும்பத்திற்கு ஆசி வழங்குவதாகவும் குடும்பம் தழைக்கும், செல்வம் பெருகும், கடன் பிரச்சினை தீரும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும், வம்சம் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்ம தீர்த்தம் என்கின்ற தக்கான் குளக்கரையில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்தனர்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com