search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் மையம் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி வகுப்பு
    X

    தொழில் மையம் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி வகுப்பு

    • நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது
    • வேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்து விளக்கம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிடிஓ அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையம் சார்பில் நெமிலி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கிராம பகுதிகளுக்கு சென்று தொழில் மையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார், ஒன்றிய குழு துணைத் தலைவர் தீனதயாளன், பிடிஓ வேதமுத்து ஆகியோர் மு்னிலை வகித்தனர்.

    இதில் ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குனர் கோமதி கலந்துகொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தொழில் மையம் சார்பில் வழங்கக்கூடிய திட்டங்கள் குறித்து கூறுகையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

    மேலும் ஒன்றிய குழு தலைவர் வடிவேலு பேசுகையில் தமிழ்நாடு அரசால் வழங்கக்கூடிய தொழில் மையம் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வதற்காக வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் தொழில்ம யத்தினை பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    தொழில் மையம் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×