என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர்- கவுன்சிலர்கள் வெளிநடப்பு
- சாலை மறியலிலும் ஈடுபட்டனர்
- அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக புகார்
சோளிங்கர்:
சோளிங்கர் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன் வரவேற்றார்.
கூட்டத்தில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இ-டெண்டர் விடப்பட்டது. இதில் அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி கவுன்சிலர்கள் 17 பேரும் திடீரென்று சோளிங்கர் - சித்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். பின்னர் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இ- டெண்டர் முறையில் அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என கூறி கூட்டத்தில் இருந்து தலைவர் கலைக்குமாரும் வெளிநடப்பு செய்வதாக கூறி விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






