என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த சித்தஞ்சி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ஜோதி (வயது 50). இவர்களுக்கு அரிகிருஷ்ணன், கணேஷ், என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் இவரது மூத்த மகன் அரிகிருஷ்ணன் மற்றும் அவரது தாயார் ஜோதி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அமர்ந்திருந்த ஜோதி தவறி கீழே விழுந்ததில் பின் பக்க தலையில் பலத்த காயம் அடைந்தார்.

    படுகாயம் அடைந்த அவரை உடனடியாக 108 ஆம்பூலன்ஸ் மூலம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு பரிசோதித்தபோது டாக்டர்கள் ஜோதி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விபத்து குறித்து ஜோதியின் மகன் கணேஷ் (23) அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவேரிப்பாக்கம் அருகே கார் பழுதாகி நின்றது
    • சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ் சாலையில் சாலை விரிவாக்க பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    இதனால் ஒரு சில இடங்களில் ஒரு வழி பாதையாக வாகனங்கள் செல்கிறது மேலும் மேம்பாலம் கட்டும் பணிகளும் ஒரு சில இடத்தில் நடைபெற்ற வருவதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர்

    இந்நிலையில் நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற கார் ஒன்று திடீரென பழுதாகி நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் வரிசை கட்டி ஒரே இடத்தில் நின்றது. காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்

    இதனால் வாகனங்கள் சாலையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக அணிவகுத்து நின்றது.

    எனவே சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
    • ெஜயிலில் அடைப்பு

    வாலாஜா:

    வாலாஜாப்பேட்டை தென்கடப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளமுள்ளுவாடி கிராமத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    அப்போது வழியில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, பேனா வாங்குவதற்காக கடைக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.ஏரிக்கரை ஓரமாக உள்ள சாலையில் சிறுமி சைக்கிளில் வருவதை கண்ட மணிகண்டன், அவரை நிறுத்தி தனது நண்பனின் வீட்டிற்கு செல்ல விலாசம் கேட்டுள்ளார்.சிறுமி சைக்கிளை நிறுத்தி விட்டு கீழே இறங்கி விலாசம் கூறுகையில், திடீரென மணிகண்டன், சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் சிறுமி கூச்சலிட்டதால் இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்றார். அப்போது அந்த வாகனத்தில் பதிவு எண்ணை சிறுமி குறித்து வைத்துள்ளார்.இது பற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள், இளைஞர் மீது புகார் கொடுக்க வந்த போது சாலையில் அதே வாகனத்தை கண்டதால் அந்த வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தும்படி கூறியபோது, இளைஞர் அவர்களை கண்டதும் மின்னல் வேகத்தில் வாகனத்தை ஓட்டியுள்ளார்.

    விடாமல் பெற்றோர்களும் அதிவேகமாக சுமார் 2 கிமீ தூரம் துரத்தி சென்ற நிலையில், அந்த இளைஞர் லாவகமாக தப்பி சென்றுள்ளார்.

    இதனை வீடியோ பதிவு செய்து சிறுமியின் பெற்றோர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    இருசக்கர வாகனத்தின் பதிவு எண் உதவியோடு மணிகண்டனை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக இருந்து மாறுதலாகி வந்துள்ளார்
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பொறுப்புகளை ஒப்படைத்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டராக வளர்மதி நேந்று பொறுப்பேற்றார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார்.

    அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டராக வளர்மதி நியமிக்கப்பட்டார்.அவர் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

    அவரிடம் திருப்பத்தூருக்கு மாறுதலாகி செல்லும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பொறுப்புகளை ஒப்படைத்து, பூங்கொத்து வழங்கினார்.

    புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள வளர்மதி சென்னை மாவட்டத்தில் பிறந்தவர்.2003-ம் ஆண்டு துணை கலெக்டராக வேலூரில் பயிற்சியில் சேர்ந்தார்.2005-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை சென்னை தலைமையிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்தார்.

    பின்னர் 2006-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை திருவண்ணா மலை மாவட்ட வருவாய் கோட்டாட்சி யராகவும், 2007-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை தர்மபுரி கோட்டாட்சி யராகவும், 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சிறப்பு அலுவலராக பணிபுரிந்தார்.

    2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராகவும், 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணை இயக்குனராகவும் பணிபுரிந்து 2016-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி முதுநிலை பட்டியலில் பதவி உயர்வு பெற்றார்.

    2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் துணை செயலாளராகவும், 2021-ம் ஆண்டு முதல் இணைச்செயலாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக இருந்து மாறுதலாகி வந்துள்ளார்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த கும்பினிப்பேட்டை கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட இளைஞர் சங்க செயலாளரும் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவருமான கலைச்செழியன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன்,மாவட்ட தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான அ.மா.கிருஷ்ணன், மாநில இளைஞர் சங்க செயலாளர் தீனதயாளன், மாணவர் சங்கம் மாநிலச் செயலாளர் பிரபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    வருகின்ற மே 5-ந் தேதி சித்திரை திருவிழாவின் போது அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் வன்னியர் சங்க மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக ஐம்பதாயிரம் இளைஞர்கள் கலந்து கொள்ள சங்க கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.

    சித்தேரி ஊராட்சியில் இயங்கும் அல்ட்ராடெக் தனியார் சிமெண்டு நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட இளைஞர் சங்க தலைவர் சாரதி, பாட்டாளி சங்கம் மாவட்ட தலைவர் ஏழுமலை,மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர்கள் தனசேகர், ராமன், ஜெகன், ஷோபன் பாபு, அன்பு மற்றும் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட இளைஞர் சங்க துணைச் செயலாளர் வி.விஜி நன்றியுரை கூறினார்.

    • சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம

    ஆற்காடு:

    ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சனிக்கி ழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதையொட்டி, வள்ளி - தேவசேனா உட னுறை சுப்பிரமணிய சுவாமிக்கு வாசனை திரவி யங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. சுவாமிக்கு மகா தீபாராதனை நடை பெற்றது.

    தொடர்ந்து பகல் உச்சிகால பூஜையும், மாலையில் ஏக தின லட்சார்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில், உபயதாரர்கள், ரத்தினகிரி மற்றும் சுற் றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

    • 80 பேர் பயனடைந்தனர்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ் நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.44 லட் சத்து 50 ஆயிரம் மதிப்பி லான கடனுதவிகள் வழங்கப்பட்டு சிறுபான் மையினர் மக்கள் பயன டைந்துள்ளனர்.

    இது தொடர்பாகமாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டி யன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதா வது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்ச ளாக மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு மே 7-ந்தேதி பொறுப் பேற்றவுடன் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்ப த்தும் வகையில் பல்வேறு றைகளின் வாயிலாக புதிய ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். சமுதாயத் தில் சிறுபான்மையின சமூகத் தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கில் பல் வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முக்கியத்துவம் அளித்து வருகின்றார்.

    சிறுபான்மையின மக்க ளின் உரிமைகளை பாதுகாப் பதிலும், கல்வி, வேலை கிறது. வாய்ப்பு மற்றும் பொருளா தார நலன்களில் அவர்களுக் குரிய பங்கீடு கிடைப்பதை உறுதிசெய்வதில் தமிழ்நாடு மாநிலமானது நாட்டிற்கே முன்னோடியாக விளங்கு கிறது. சமுதாயத்தில்பல்வேறு பிரிவினரிடையே மத நல்லி ணக்கத்தை பேணுவதற்கு முதல்-அமைச்சர் தலைமை யிலான றது. அரசு செயல்படுகின்றது.

    தமிழ்நாடு சிறுபான்மையி னர்பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் சிறு பான்மையினரான இஸ்லாமி யர்கள், கிறித்துவர்கள், சீக்கி யர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள் மற்றும் சமணர்கள் ஆகியோர்கள் பயன் பெறும் வகையில் சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுத லுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகள் வழங்கி வருஅதன் படி ராணிப் பேட்டை மாவட்டத்தில் 2022-23 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதாரமேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தற் போது வரையில் 5 மகளிர் குழுக்களைச் சார்ந்த 78 பயனாளிகளுக்கும், 2 தனிநபர்க ளுக்கும் ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடனுத விகள் வழங்கப்பட்டு சிறு பான்மையினர் மக்கள் பயன டைந்துள்ளனர்.

    இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    • அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
    • ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் அமைக்கப்படுகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை மைதானத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022-23 கீழ் ரூ.11கோடியே 52லட்சம் மதிப்பீட்டில் 8.30 ஏக்கர் பரப்பளவில் தினசரி நாளங்காடி கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணை தலைவர் ரமேஷ் கர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு கட்டுமான பணிக்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    இதில் நகராட்சி பொறியாளர் ரூத்ரகோட்டி, நகர செயலாளர் பூங்காவனம், நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், நரேஷ், நகராட்சி துப்புறவு அலுவலர், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் வாலாஜா ஒன்றியம் விசி.மோட்டூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ரூ.90லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கு அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன், விசி.மோட்டூர் ஊராட்சிமன்ற முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடையை திறக்க பைக்கில் சென்றபோது விபத்து
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாவை அடுத்த அனந்தலை விவேகானந்தர் நகரில் உள்ள சோளிங்கர் ரோட்டில் வசிப்பவர் குப்பன். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 41). டீ கடை நடத்தி வந்தார்.

    இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் டீக்கடையை திறப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மஞ்சு நகர் அருகில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த நெல் அறுவடை செய்யும் எந்திர வாகனம் இவரது மோட் டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் ஈஸ்வரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப் பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூடி வைக்க வேண்டும். எனவே நாளை மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.

    உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால்சம்மந்தப்ப ட்டடாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள் விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யும் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்த போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 108 ஆம்புலன்சில் உயிரிழந்த பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த வளவனூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி, விவசாயி.இவரது மனைவி கல்பனா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 12 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கல்பனா தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.

    கல்பனாவுக்கு அடிக்கடி வலிப்பு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை கல்பனாவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

    அவரை உடனடியாக புதுப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது வழியிலேயே கல்பனா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்பனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • மன உளைச்சலில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 38). இவர் மின்னல் கிராமத்தின் வி.ஏ.ஓ. ஆக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்யும்போது அது வேறு ஒருவரின் பெயருக்கு மாறி உள்ளது.

    சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் இது சம்பந்தமாக அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமாவிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முகமது இலியாஸிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பட்டாவை மாறுதல் செய்து கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதனால் மன உளைச்சலில் முகமது இலியாஸ் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை திடீரென்று பாத்ரூமில் சத்தம் கேட்டது.

    அப்போது அக்கம்பக்க த்தனர் ஓடிச் சென்று பார்த்தபோது இலியாஸ் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இலியாசை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து இலியாஸ் எதற்காக தற்கொலை செய்ய முயற்சி செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×