என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீண்ட தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
- காவேரிப்பாக்கம் அருகே கார் பழுதாகி நின்றது
- சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ் சாலையில் சாலை விரிவாக்க பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இதனால் ஒரு சில இடங்களில் ஒரு வழி பாதையாக வாகனங்கள் செல்கிறது மேலும் மேம்பாலம் கட்டும் பணிகளும் ஒரு சில இடத்தில் நடைபெற்ற வருவதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர்
இந்நிலையில் நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற கார் ஒன்று திடீரென பழுதாகி நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் வரிசை கட்டி ஒரே இடத்தில் நின்றது. காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்
இதனால் வாகனங்கள் சாலையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக அணிவகுத்து நின்றது.
எனவே சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்






