என் மலர்
நீங்கள் தேடியது "Ranipet Market Ground"
- அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
- ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் அமைக்கப்படுகிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை மைதானத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022-23 கீழ் ரூ.11கோடியே 52லட்சம் மதிப்பீட்டில் 8.30 ஏக்கர் பரப்பளவில் தினசரி நாளங்காடி கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணை தலைவர் ரமேஷ் கர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு கட்டுமான பணிக்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
இதில் நகராட்சி பொறியாளர் ரூத்ரகோட்டி, நகர செயலாளர் பூங்காவனம், நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், நரேஷ், நகராட்சி துப்புறவு அலுவலர், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் வாலாஜா ஒன்றியம் விசி.மோட்டூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ரூ.90லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கு அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன், விசி.மோட்டூர் ஊராட்சிமன்ற முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






