என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • டெங்கு கொசு பரவலை தடுக்க நடவடிக்கை
    • ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அடுத்த ஈராளச்சேரி பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக கொசுக்களின் உற்பத்தியை ஒழிக்கும் நோக்கில் எவர்கிரீன் என்ற தனியார் நிறுவனத்தின் உதவியோடு மேற்கொண்டனர்.

    இந்த பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் வீதிவீதியாக சென்று கழிவுநீர் தேங்கும் இடங்கள், அங்கன்வாடி மையம், மற்றும் இதர பகுதிகளில் மருந்துகளை தெளித்தனர்.

    இந்த பணியை ஊராட்சிமன்ற தலைவர் திவ்யபாரதி தினேஷ், எவர்கிரீன் நிறுவன உரிமையாளர் மதன்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    • காரசார வாக்குவாதத்தால் வாரச்சந்தை ஏலம் ஒத்திவைப்பு
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை வாரச்சந்தை செயல்பட்டுவருகிறது.

    30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் இச்சந்தைக்கு வருகின்றனர். இந்த சந்தையின் குத்தகை ஏலம் நேற்று பேரூராட்சி செயலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.இதில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    பின்பு அரசு நிர்ணயித்த ஏலத்தொகை அதிகமாக உள்ளதாக கூறி யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

    இதனால் ஏலம் நிறுத்தப்படுவதாக பேரூராட்சி செயலர் சரவணன் அறிவித்தார். இந்த ஏலத்தின்போது எந்தவிதமான பிரசினையும் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சப் இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள் அவதி
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, பனப்பாக்கத்திலிருந்து உளியநல்லூர் செல்லும் சாலை கடந்த 2 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது.

    பனப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தினமும் இந்த வழியாக பனப்பாக்கம் அரசு மேல்நிலை ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் படித்து வரும் பள்ளி, மாணவர்கள் மற்றும் காஞ்சிபுரம், வாலாஜா செல்லும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இந்த வழியாக சென்று வருகின்றனர்.

    வேலைக்கு செல்வோர் விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் விளைந்த பொருட்களை பனப்பாக்கம், காஞ்சிபுரம் எடுத்து செல்ல இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.

    அதிகமாக மக்கள் சென்றுவரும் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    • 100 நாள் திட்ட பணியாளர்கள் இருதரப்பினரிடையே மோதல்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த ஆட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெண்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் திட்ட பணியாளர்கள் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு 100 நாள் திட்ட பணியாளர் தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரு தரப்பினற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு தரப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் நெமிலி- அரக்கோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் நெமிலி சேந்தமங்கலம் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெமிலி போலீஸ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து ஆகியோர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

    • ராணிப்பேட்டை கலெக்டர் எச்சரிக்கை
    • விபத்துகள் அதிகரிப்பை தடுக்க நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் மொத்த சாலை விபத்துக்களில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களால் ஏற்படுகின்றன. இதில் அநேக விபத்துகளில் தலையில் அடிபடுவதால் பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுகிறது.

    எனவே, இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் முதலில் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள். 2வது முறையாக தலைக்கவசம் அணியாமல் இருச்சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு மோட்டார் வாகன சட்டம் 194 (D) -ன் படி ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

    3-வது முறையாக தலைக்கவசம் அணியாமல் இருச்சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், 18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனத்தை ஓட்டிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் சிறார்களிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

    மேலும் பெற்றோர்களுக்கு ரூ.25,000 ஆயிரம் அபராதமும் 3 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும். பெற்றோர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுத்திட வேண்டும்.

    ஆகவே, அனைவரும் பாதுகாப்பாக, வாகனத்தை விபத்தின்றி இயக்கி ராணிப்பேட்டை மாவட்டத்தை மோட்டார் வாகன விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற வேண்டுமென ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி கேட்டுக்கொண்டார்.

    • கடன் கேட்பதுபோல் சென்று கைவரிசை
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்,

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நீலகண்டராயப்பேட்டை கால னியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி கல்பனா (வயது 45). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி கல்பனா வீட்டுக்கு சென்று ரூ.1,000 கடன் கேட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது கல்பனா பணம் இல்லை என்று கூறிவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து மறுபடியும் கல்பனாவின் வீட்டுக்கு வாலிபர் சென்றார். கல்பனாவுக்கு சிறிது கண்பார்வை தெரியாததால், வீட்டின் பின்பக்கமாக சென்று பீரோவில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மற்றும் 1 பவுன் நகை ஆகியவற்றை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வாலிபரின் உறவினர்களிடம் கல்பனா கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் வாலிபர் வெளியூர் சென்று விட்டதாகவும், வந்தவுடன் நகை, பணத்தை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளனர்.

    ஆனால் அந்த வாலிபர் வராததால் நேற்று கல்பனா சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், ரவி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத் தகராறில் விபரீதம்
    • உதவி கலெக்டர் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த அனந்தலை கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மாவதி. இவரது மகள் சந்தியா (வயது 26). இவரது கணவர் ஸ்ரீதர் ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் வீடு திரும்பிய ஸ்ரீதருக்கும், சந்தியாவிற் கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சந்தியா. படுக்கை அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் வழங்கினார்
    • சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தினை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாதத்தின் முதல் வார செவ்வாய்கிழமை தோறும் மாவட்ட கலெக்டரின் தலைமையில் மாற் றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    நேற்று நடைபெற்ற இம்முகாமில் கலந்த கொண்ட 406 நபர்களில், கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் 88 நபர்களுக்கும், காது கேளாதோர்க்கான 44 நபர்களுக்கும், கண் பாதிக்கப்பட்டவர் 32 நபர்களுக்கும்,

    மனவளர்சி குன்றிய 54 நபர்களுக்கும், மற்றும் 34 நபர்களுக்கும் சம்மந்தப்பட்ட மருத்துவர்களால் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பெற மருத்துவ சான்றுகள் கலெக்டர் தலைமையில் வழங்கப்பட்டது.

    மாற்றுத்திறனாளி களுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 134 நபர்களுக்கும் முதமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் 64 நபர்களுக்கு பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான பராமரிப்பு நிதி உதவித்தொகை வேண்டி 45 நபர்களுக்கும், வங்கி கடன் 24 நபர்களுக்கும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 6 நபர்களுக்கும், சக்கர நாற்காலி வேண்டி 9 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    மேலும் 3 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள், 2 நபர்களுக்கு -ரூ.18,000 மதிப்பில் சக்கர நாற்காலி 8 நபர்களுக்கு ரூ.-84.000 மதிப்பில் மற்றும் காதொலி கருவி, 2 நபர்களுக்கு ரூ.9,000 ஆக மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.1,11,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெற்று கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

    • நில அளவையர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவர் நெமிலியில் நில அளவையராக பணி செய்து வருகிறார்.

    நேற்று காலை இவருக்கும் எதிர் வீட்டில் இருக்கும் கருணாகரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கருணாகரனை, அருள் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயம் அடைந்த கருணாகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும், இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அருள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    இந்த தகராறை அங்கு இருந்தவர்கள் செல்போன் வீடியோ மூலம் பதிவு செய்துள்ளனர். இதனை சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளனர். தற்போது வீடியோ வைரலாகி வருகிறது.

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • தனிப்படை விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தக்கோலம் காந்தி நகர் பகு தியை சேர்ந்தவர் உமா (வயது 50). முருங்கை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள் ளியில் ஆசிரியையாகவேலை செய்து வருகிறார்.

    இவரது கணவர் ஜான்சன்.சென்னை யில் குடிநீர் வடிகால் வாரியத் தில் வேலை செய்து வருகி றார். நேற்று காலை ஆசிரியை உமா வழக்கம் போல் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றார்.

    பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப் பட்டு அதிலிருந்த சுமார் 30 பவுன் நகை மற்றும் பணம் ரூ.1,000 திருட்டு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து தக்கோலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • கலெக்டர் பாராட்டு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பாக மாவட்ட அளவில் கலைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலைத் திருவிழாவில் முதல் இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா நிகழ்ச்சியில் 8 அரசு பள்ளிகளை சார்ந்த 16 மாணவ மாணவிகள் பங்கெடுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பெற்று வந்துள்ளனர்.

    இந்த மாணவ மாணவிகள் தங்கள் பெற்ற பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை மாவட்ட கலெக்டர் வளர்மதியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மாணவ மாணவிகள் மேலும் தங்கள் திறமைகளை வளர்த்து விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டுமென வாழ்த்தினார். மேலும் மாணவ மாணவிகள் ஊட்டச்சத்து சாப்பாடுகளை சாப்பிட வேண்டும். ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் இல்லாமல் மாணவிகள் வளர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    மாநில அளவில் நரசிங்கபுரம், மின்னல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 9 மாணவிகள் பாவனை நடிப்பில் முதலிடத்திலும், அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ராமகிருஷ்ணன் நாதஸ்வரம் இசையில் முதலிடத்தையும், சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவன் முகேஷ் எக்காளம் இசையில் 2-ம் இடத்தையும், கொடைக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பன்னகசயனன் மிருதங்கம் இசையில் 2-ம் இடத்தையும், பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஹேமாவதி காகித வேலைப்பாடு கலையில் 2-ம் இடத்தையும், வள்ளுவம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் கோகுல கிருஷ்ணன் கோண கொம்பு கலையில் 3-ம் இடத்தையும், பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிசவிதா டிஜிட்டல் ஆர்ட் கலையில் 3-ம் இடத்தையும், அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலை ப்பள்ளி தாமரைப்பாக்கம் சூர்யா சங்கு முழக்குதல் போட்டியில் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.இவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் பெற்றோர்களை வாழ்த்து தெரிவித்து அனைவரையும் கலெக்டர் வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி, மாவட்ட கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மகளிர் திட்ட இயக்குநர் நாநிலதாசன், உதவி திட்ட அலுவலர் பள்ளி கல்வித்துறை துரைவேல் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • மருத்துவமனைக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பனப்பாக்கம் அடுத்த தென் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் (வயது70) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரண த்தினால் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு தனது பைக்கில் மருத்துவமனைக்கு சென்று பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது காவேரிப்பாக்கம் அடுத்த கல்கத்தா காளியம்மன் கோவில் அருகே வரும்போது பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கங்காதரன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் கங்காதரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×