என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஆற்காடு:

    ஆற்காடு அருகே லப்பபேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று மதியம் லப்பபேட்டையில் இருந்து ஆற்காடு வரும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்டது
    • ஒன்றியகுழு தலைவர் வடிவேல் திறந்து வைத்தார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தேரி கிராமத்தில், ஊராட்சி ஒன்றியத்தின் 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 18,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேநீர் தேக்கத்தொட்டியை ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    இதனால் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • ஜோதி தரிசனம் காட்டப்பட்டது
    • எராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, கீழ்வீதி கிராமத்தில் ஸ்ரீ அய்யப்ப சுவாமிக்கு 10-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது.

    இக்கிராமத்தில் செயல்பட்டுவரும் ஸ்ரீ மணிகண்ட பக்த பஜனை சபாவின் ஏற்பாட்டில் பூஜை நடைபெற்றது.

    விழாவுக்கு சிவா குருசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செல்வம் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீ அய்யப்பனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் 18 படிகள் அமைத்து பஜனை குழுவினர் பக்தி பாடல்கள் பாடினார்.

    பின்பு ஜோதி தரிசனம் காட்டும்போது சுவாமியே சரணம் அய்யப்பா என்று கூறியவறு சாமி தரிசனம் செய்தனர். இதில் விக்டல் குருசாமி, குமார், மதியழகன், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • மதுபோதையில் அட்டகாசம்
    • 3 பேருக்கு வலைவீச்சு

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த ரெண்டா டியை சேர்ந்தவர் தீனன் (வயது 51). இவர் சோளிங்கர் பணிம னையில் வேலூர் திருத்தணி செல்லும் பஸ்சில் கண்டக்ட ராக பணியாற்றி வருகிறார். டிரைவராக பெருங்காஞ்சியை சேர்ந்த பாலன் உள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு வேலூரில் இருந்து சோளிங்கர் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 9.45 மணிக்கு திருத்த ணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சோளிங்கர் பஸ் நிலையத்தில் மதுபோதையில் ஏறிய 3 பேர் பாட்டிகுளம் பகுதியில் செல்லும்போது வெள்ளாத் தூரில் பஸ் நிறுத்த வேண்டும் என்று கூறினர்.

    இது விரைவு பஸ் என்பதால் அங்கு நிற் காது என கண்டக்டர் தீனன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கண்டக்டரையும், டிரைவரையும் ஆபாசமாக திட்டி, பயணிகள் முன்னிலையில் சரமாரியாக தாக்கினார்.

    பின்னர் இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் தீனன் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் என்னையும், டிரைவரையும் தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர். போலீசார் 3 பேரை தேடி வருகின்றனர்.

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பெண்கள் பாடசாலை தெருவை சேர்ந்தவர் தயாள பாபு என்பவரது மனைவி அகிலா (வயது 46).

    திமிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றிருந்தார்.

    அந்த நேரத்தில் மர்ம நபர்கள் இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அகிலா வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

    இது குறித்து திமிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறப்பு பூஜை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலில் தொட்டாச்சி யரியார் சுவாமி பத்து நாள் உற்சவத்தில் முதல் நாள் உற்சவம் நடைபெற்றது.

    இதில் தொட்டாச்சியர் சுவாமி சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

    மங்கள வாத்தியங்களுடன் சுவாமி சன்னதி தெரு கோடி வரை வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • விவசாய நிலத்திற்கு சென்ற நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 55).

    இவர் சென்னையில் தபால் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரது விவசாய நிலம் ஐப்பேட்டில் உள்ளது. அங்கு சென்று வருவதாக நேற்று வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இந்நிலையில் இரவு 9 மணியளவில் அதே கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி. எச்சரிக்கை
    • மயானகொள்ளை விழாவைெயாட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற எஸ்பி கிரண் சுருதி நேற்று அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ள முதல்முறையாக வந்தார். அரக்கோணம் ஏ.எஸ்.பி.கிரிஷ் யாதவ் அவரை வரவேற்றார்.

    அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அரக்கோணம் உட்கோட்ட 12 காவல் நிலையத்திற்கான இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் பங்கு பெற்றனர்.

    இதில் பொதுமக்கள் மீது காவல்துறைக்கு கூடுதலான அக்கறை இருக்க வேண்டும். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் கிரிமினல்கள் (சமூக விரோதிகள் மீது) கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    வருகின்ற மயான கொள்ளை விழாவின் பொது சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    • சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே உள்ள கமல விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு கமல விநாயகருக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு கருமான் பிள்ளை யாருக்கு பால், தேன், சந்தனம், பன்னீர், இளநீர், உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பட்டு வஸ்திரம் அருகம்புல் மாலை, மலர் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் கிராமமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • போக்குவரத்து பாதிப்பு

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு ஊராட்சி பகுதியில் 5ஜி நெட்வொர்க் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வன்னிவேடு ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் ஆத்திரமடைந்த வன்னிவேடு ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை முன்பு வாலாஜா- ராணிப்பேட்டை செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது பொதுமக்கள் கூறியதாவது:-

    செல்போன் டவர் அமைப்பதற்கான எவ்வித அனுமதியும் பெறாமல் கிராம மக்களின் ஒப்புதல் கேட்கப்படாமலும் செல்போன் டவர் அமைக்க பணி நடைபெற்று வருவதாகவும் செல்போன் டவர் அமைக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான கதிர்வீச்சினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்படும் எனவும் மிகுந்த அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

    எனவே குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படவிருக்கும் செல்போன் டவர் பணிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    மேலும் சம்பவத்தை அறிந்த ராணிப்பேட்டை டி.எஸ்.பி பிரபு, இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செய்தனர்.

    இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன்,
    • சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 55).

    இவர் சென்னையில் தபால் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரது விவசாய நிலம் ஐப்பேட்டில் உள்ளது. அங்கு சென்று வருவதாக நேற்று வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இந்நிலையில் இரவு 9 மணியளவில் அதே கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
    • உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஏ. வசந்தி தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    இதில் சத்துணவு அமைப்பாளர் கா. தமிழரசி, தற்காலிக ஆசிரியை வி. தேவிகா, பள்ளி மேலாண்மை குழு ஆசிரியை கல்பனா மற்றும் பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    ×