என் மலர்
நீங்கள் தேடியது "Abolition of slavery"
- பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
- உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஏ. வசந்தி தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் சத்துணவு அமைப்பாளர் கா. தமிழரசி, தற்காலிக ஆசிரியை வி. தேவிகா, பள்ளி மேலாண்மை குழு ஆசிரியை கல்பனா மற்றும் பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.






