என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலாஜா அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய போது எடுத்த படம்
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
- போலீசார் பேச்சுவார்த்தை
- போக்குவரத்து பாதிப்பு
வாலாஜா:
வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு ஊராட்சி பகுதியில் 5ஜி நெட்வொர்க் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வன்னிவேடு ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ஆத்திரமடைந்த வன்னிவேடு ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை முன்பு வாலாஜா- ராணிப்பேட்டை செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது பொதுமக்கள் கூறியதாவது:-
செல்போன் டவர் அமைப்பதற்கான எவ்வித அனுமதியும் பெறாமல் கிராம மக்களின் ஒப்புதல் கேட்கப்படாமலும் செல்போன் டவர் அமைக்க பணி நடைபெற்று வருவதாகவும் செல்போன் டவர் அமைக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான கதிர்வீச்சினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்படும் எனவும் மிகுந்த அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
எனவே குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படவிருக்கும் செல்போன் டவர் பணிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும் சம்பவத்தை அறிந்த ராணிப்பேட்டை டி.எஸ்.பி பிரபு, இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செய்தனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






