என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ேவறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடந்தது
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த பரதராமி கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரும் அதே கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இளம்பெண்ணை அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

    இந்த நிலையில் இளம் பெண்ணுக்கு தெரியாமல் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் வாலிபருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.அவர்கள் திருமணம் நேற்று ஆற்காடு அடுத்த விளாரி கூட்ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.

    இது குறித்து தகவலறிந்த வாலிபரின் காதலி நேற்று திமிரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். போலீசார் திருமண மண்டபத்திற்கு சென்று மணமகனை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    இதனால் களைகட்டி இருந்த திருமண மண்டபம் களை இழந்து திருமணத்திற்கு வந்தவர்கள் சோகத்தில் மூழ்கினர். நேற்று நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

    மேலும் இது குறித்து தொடர்ந்து போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 ஆயிரம் ஆண்டு பழமையானது
    • சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள மிகவும் பழமையான சிவன் ஆலயம் ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 2000 ஆண்டுகள் தொன்மையானது என கூறப்படுகிறது.

    இந்தக் கோவிலில் உள்ள கொடிமரம் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது, கோவிலில் சாமி சிலைகள் சிற்பங்கள் பச்சைக் கற்சிற்பங்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் வரலாற்று பிரதானமாக பாதுகாக்கப்பட வேண்டிய ஆலயங்கள் சிதிலம் அடைந்து செடி, கொடிகள், முட்புதர்கள் மண்டி கேட்பாரற்று கிடக்கிறது.

    இந்தக் கோவிலில் பூஜைகள் எதுவும் நடைபெறாமல் எப்போதும் நடை சாத்தப்பட்டு உள்ளது.

    இந்த ஆலயம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பக்தர்கள் கோவிலை புணரமைத்து மீண்டும் மக்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    மேலும் இந்த கோவில் குளத்தில் குப்பைகள் பாலித்தின் கவர்கள், பாட்டில்கள் போன்றவை வீசப்பட்டு குப்பையாக காட்சியளிக்கிறது.

    அறநிலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளர்.

    • அமைப்பு செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் வன்னிய குல சத்திர மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.

    இதில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் மா கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட செயலாளர் கலந்து கொண்டு ஒன்றிய ஊராட்சி கிழக்கழக நிர்வாகிகளுக்கு ஒற்றுமையாக செயல்பட்டு ஒவ்வொரு கிராமம் தோறும் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்ற வேண்டும் என கூறினார்.

    தமிழ்நாட்டில் தமிழ் மொழி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் வருவதாகவும் அதனை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

    இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள் காவேரிப்பாக்கம் நகர செயலாளர் ராமு, தட்சிணாமூர்த்தி, நெமிலி ஒன்றிய நிர்வாகிகள் திருமால், சண்முகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடஇந்தியர்களை உழைப்பதற்கு ஈடுபடுத்தி பழகிவிட்டால் பிறகு அவர்களை தவிர்க்க முடியாது.
    • திராவிட மாடல் ஆட்சி என்பது எங்களுக்கான அரசு இல்லை.

    காவேரிப்பாக்கம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாலாஜாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதத்தை வைத்து மனிதத்தை அளவிடுகிற போக்கு இந்திய நிலத்தில் தான் இருக்கிறது. உலகத்தில் எங்கும் அப்படி கிடையாது. மொழி வழியில் தான் தேசிய இனங்கள், நிலங்கள் உலகம் முழுவதும் உள்ளது. இங்கு தான் மதத்தை வைத்து சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என கூறுகின்றனர்.

    இஸ்லாமிய மக்களை எதிர்ப்பதை தவிர, பா.ஜ.க.வுக்கு வேறு கோட்பாடு, கொள்கை எதுவும் கிடையாது. நான் இருக்கும் வரை 8 வழி சாலை போட முடியாது. பரந்தூர் விமான நிலையம் கட்ட முடியாது. சிப்காட் தொழிற்சாலைகள் தொடங்க முடியாது. அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கலாம், கட்டுங்கள் பார்ப்போம். இருக்கின்ற விமான நிலையத்தில் பறக்க விமானம் இருக்கிறதா?. விமான நிலையத்தை எங்கு வேண்டுமானாலும் உருவாக்கலாம். விளைநிலத்தை உருவாக்க முடியுமா?. எதிர்காலத்தை கணிக்கின்ற நீங்க ஏன் ஆற்று மணலை விற்கிறீர்கள். மலையை உடைக்கிறீர்கள்.

    வட மாநிலத்தவர்கள் எப்படி ரெயில்களில் தொடர்ச்சியாக வருகிறார்களோ, நான் வந்தால் அதே மாதிரி இரண்டு மாதத்தில் போய்விடுவார்கள். என்னுடைய மக்களுக்குள்ளே ஒரு உளவியல் நோயை உருவாக்கியது இந்த திராவிட கட்சிகள் தான். இலவசம், மதுவை கொடுத்து உழைக்கின்ற திறனற்று போனார்கள். உழைப்பின் தேவை இருக்கு, அதனால்தான் வட இந்தியர்கள் குறைந்த கூலிக்கு வேலைக்கு வருகிறார்கள்.

    வடஇந்தியர்களை உழைப்பதற்கு ஈடுபடுத்தி பழகிவிட்டால் பிறகு அவர்களை தவிர்க்க முடியாது. பிறகு 500 ரூபாய்க்கு வேலை செய்தவன் 5,000 ரூபாய் கேட்பான். எனக்கு வாக்கு செலுத்தி என்னை ஆட்சியில் உட்கார வையுங்கள், நான் நாட்டை பார்த்து கொள்கிறேன். நீங்கள் வீட்டில் நிம்மதியா உறங்குங்கள். குற்ற சம்பவ நிகழ்வுகள் அதிகமாக நடப்பதற்கு காரணம் வடஇந்தியர்கள் தான். உயர் காவல்துறை அதிகாரிகள் முதல்வரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இதுதான் உள்ளது. நகை பறிப்பு, கஞ்சா விற்பது வட இந்தியர்கள் தான்.

    திராவிட மாடல் ஆட்சி என்பது எங்களுக்கான அரசு இல்லை. மொழி, இனம், நிலம், மக்களின் நலன், எதிர்காலத்திற்கான அரசு இல்லை. ஒரு குடும்பம் வாழ்வதற்கும், ஆட்சி செய்வதற்கும் நாமெல்லாம் கூடி உழைக்கிறோம், ஓட்டு போடுகிறோம். அதற்கு நாம் வெட்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிரேக் இணைப்பு துண்டானது.
    • இதனால் அந்த வண்டி வாணியம்பாடியில் நிறுத்தப்பட்டது.

    ராணிப்பேட்டை:

    கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரையில் செல்லக்கூடிய தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை 6.10 மணிக்கு வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    அப்போது ரெயிலின் 6-வது பெட்டியில் இருந்த பிரேக் இணைப்பு துண்டானதால் ரெயில் நகர முடியாமல் இரண்டாவது பிளாட்பாரத்திலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த பிளாட்பாரம் வழியாக செல்ல வேண்டிய அனைத்து ரெயில்களும் மாற்றுப் பாதைகள் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது.

    இதுதொடர்பான தகவல் ஜோலார்பேட்டையில் உள்ள ரெயில்வே உயரதிகாரிகளுக்கும், காட்பாடியில் உள்ள அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் சீரமைப்புக் குழுவுடன் விரைந்து வந்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு சுமார் 8 மணியளவில் சீரமைப்பு பணி முடிவடைந்ததும் 2 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டுச் சென்றது.

    சுமார் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் அந்த ரெயிலில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டனர். ரெயில் நிலையத்தில் கழிப்பிட வசதியோ, குடிநீர் வசதியோ இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    • நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்
    • உணவுகளை தயார் செய்வது குறித்து பணியாளர்களுக்கு அறிவுரை

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்து வமனையில் மாவட்ட கலெக் டர் வளர்மதி ஆய்வு செய்தார். அப்போது பிரசவ வார்டு, பெண்கள் வார்டு, மருந்தகங்கள், இயற்கை வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதி களை பார்வையிட்டார். மேலும் அவர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    இதனைத்தொடர்ந்து மருத் துவமனையில் வழங்கப்படும் உணவு,சமையல் அறையை பார்வையிட்ட கலெக்டர் அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி மற்றும் உணவு தயார் செய்வதற்கான பொருட்க ளின் தரங்கள் குறித்து கேட்டறிந்து, சுகாதாரமான முறை யில் உணவுகளை தயார் செய்வது குறித்து சமையல் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை ஆய்வு செய்த அவர் மருத்துவர்களிடம் மருத்துவமனைக்கு தேவைப்ப டுகின்ற தேவைகள் குறித்து கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்யும் விதமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    • அதிகாரி ஆய்வில் சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த சாத்தூர் ஏரியில் திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுவதாக ஆற்காடு வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தாசில்தார் சுரேஷ், வரு வாய் ஆய்வாளர் பாரதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சாத்தூர் ஏரிக்குச் சென்றனர். அப்போது அங்கு மண் அள் ளிக்கொண்டு இருந்த நபர்கள் அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து மண் கடத்த பயன்படுத்திய டிராக் டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிக்க கலெக்டர் உத்தரவு
    • பயிற்சி கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கிராம ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுவது, ஊராட்சி மன்ற தலைவர்களின் கடமைகள், அதிகாரங்கள் குறித்து எஸ்.சி., எஸ்.டி. கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் லோகநாயகி முன் னிலை வகித்தார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    கிராம ஊராட்சி தலைவர் கள், வார்டு உறுப்பினர்கள் பெண்களாக இருக்கும் ஊராட்சிகளில் அவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அரசு வழங்கி யுள்ள பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் பெண் தலைவர்கள் பெரும்பான்மை யாகதேர்ந்தெ டுக்கப்பட்டுள் ளனர். ஆனால் பல இடங்களில் பெண் தலைவர்கள் செயல்படாமல் அவர்களின் கணவன்மார்கள், உறவினர்கள் தலைவருக்கான செயல் பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவறானது. பெண்களின் நிர்வாகத் திறமையை முடக்கும் விதமானது. இதனை அனுமதிக்கக்கூடாது.

    பெண் தலைவர்கள் தைரிய மாக தலைவர் பதவியினை செய்ய வேண்டும். அச்சம் கொள்ள தேவையில்லை. தெரியாததை கற்றுக் கொண்டு உங்கள் அதிகா ரத்தை பயன்படுத்தி கிராமத்தின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். பெண் தலைவர் கள் செயல்படுகிறார்களா அல்லது உறவினர்கள் அதில் ஈடுபடுகின்றனரா என்பதை கண்காணித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராமத்தில் குடிநீர், சாலை, சுகாதாரம், மின்சாரம் போன்ற பிரச்சினைகள், தேவைகள் குறித்து அறிந்து பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இதனை ஆண்டுதோறும் தெரிவித்து வந்தாலும் யாரும் இதனை பொருட்டாக மதிப்பதில்லை. நகரத்தை விட கிராமத்தில் தான் பிளாஸ்டிக் அதிகரித்து வருகிறது.

    அரக்கோணம், சோளிங்கர் பகுதிகளில் அதிக குழந்தை திருமணம் நடப்பது கண்டுபி டிக்கப்படுகிறது. இது தடுக்கப் பட வேண்டும். இங்கு வந் துள்ள அனைத்து தலைவர் களும் உங்கள் ஊராட்சி யினை சிறப்பாக நடத்தி மத் திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்று கிராமத் தின் பெயரை ஊரறிய செய்ய வேண்டும். உங்களால் அனைத்தும் செய்ய முடியும். ஊராட்சியின் அனைத்து வித மான கணக்குகளையும் தலை வர்கள் தெரிந்திருக்க வேண் டும். தெரியாது என்று உறுவி னர் தான் இதை பார்க்கிறார் என்று தெரிவிப்பது முற்றிலும் தவறானது.

    உங்கள் பொறுப்பில் தான் கிராமத்தை அரசு கொடுத் துள்ளது. கிராம நிர்வாகத்தில் விருப்பு, வெறுப்பின்றி சாதி, மதவேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்ட த்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற் றும் ஊராட்சி மன்ற தலைவர் கள் கலந்து கொண்டனர்.

    • உயர்நீதிமன்ற நீதிபதி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம் கிராமத்தில் திருவள்ளுவர் உருவசிலை திறப்பு விழா அமைப்பு குழு தலைவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஏகாச்சாரம் தலைமையில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழகச் செயலாளர் கண்ணப்பன் முன்னிலையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் டி.கே.மூர்த்தி, சாம்பசிவன், அருனகிரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வடிவேலு மற்றும் பலர் உடன் இருந்தனர். முடிவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டியன் நன்றி கூறினார்.

    • பழுது பார்த்த போது விபரீதம்
    • தீயணைப்பு குழுவினர் தீயை அனைத்தனர்

    வாலாஜா:

    பெங்களூரு, உசேனி மசூதி தெரு, மோடிரோடு பகுதியை சேர்ந்தவர் சுயம்பு ரஹ்மான் (வயது 41). ஏ.சி. மெக்கானிக்.

    இவர் நேற்று வாலாஜா பூசாரி பச்சையப்பன் தெருவில் சென் றபோது கார் பழுதானது. உடனே கார் மெக்கானிக்கை அழைத்து வந்து பழுதை சரி செய்தார். அப்போது திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.

    உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் கார் முழுவதும் எரிந்து நாசமானது.

    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை
    • உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த ரங்காபுரம் கூட்ரோட்டில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க நேற்று பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது பக்கத்தில் வசிக்கும் ஒருவர் தன்னுடைய பட்டா நிலத்தில் நிழற்கூடம் அமைக்க கூடாது என கூறியதாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த பகுதி மக்கள் நிழற்கூட பணியை தொடங்க வேண்டும் என்று கூறி, சோளிங்கர்-காவேரிப்பாக்கம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பிடிஓ முகமது சைபுதீன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், விஏஒ முரளி மனோகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மேசிட், யோக பிரகாஷ், ஒன்றிய பொறியாளர் ஏகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேசி மறியலை கைவிட செய்தனர்.

    மேலும், நிழற்கூடம் அமைய உள்ள இடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை மீண்டும் அளவீடு செய்து பணிகளை தொடங்க செய்தனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டது.

    • ஐசக் ஐயா வழங்கினார்
    • 300-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் பர்கூர், சயனாபுரம், சேந்தமங்கலம், பள்ளூர், அம்மனூர், கிரிபில்ஸ்பேட்டை, விண்டர் பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர். ஐசக் ஐயா அவர்கள் கலந்துகொண்டு ஏழை எளிய மக்கள் 300-க்கும் மேற்பட்டோருக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார்.

    அவர் பேசுகையில்:-

    கிறிஸ்தவ தேவாலயத்தில் பணி புரிகின்ற உபதேசியார் மற்றும் பணியாளர் நல வாரிய விண்ணப்பத்தை அந்தந்த கலெக்டர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் பெற்று அதை பரிந்துரை செய்து சிறுபான்மை மாநில இயக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் திருப்பி அனுப்பக் கூடாது.

    ஆதி திராவிட கிறிஸ்தவ சிறுபான்மை மற்றும் ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அந்தந்த கல்லூரிகளுக்கு தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றார்.

    ×