என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மேடல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 37). கட்டிட மேஸ் திரி. இவரது மனைவி ரூபா வதி (30). தம்பதிகளுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

    கணவன்- மனைவி சாவு

    தீனதயாளன் நேற்று மாலை அவரது மனைவி ரூபாவதியுடன் வேடல் காந்திநகரில் இருந்து பைக்கில் அரக் கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த சரக்கு ஆட்டோ முன்னால் சென்று கொண்டிருந்த தீனதயாளனின் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தீனதயாளன் மற்றும் அவரது மனைவி ரூபாவதி ஆகிய இருவ ரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    டிரைவர் கைது

    இதில் கணவன், மனைவி இருவ ரும் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரக்கோ ணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சோளிங்கரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது சலீம் (22) என்பவரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டனர்
    • 5 மாதத்தில் தீர்ப்பு

    ஆற்காடு:

    ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் கள் அஜித்குமார் (வயது 23), சூர்யா (19). இவர்கள் இருவ ரும் மோட்டார்சைக்கிள் திருடிய வழக்கில் ஆற்காடு டவுன் போலீசாரால் கடந்த அக்டோபர் மாதம் கைது செய் யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில் அஜித்குமார் மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • பைக்கில் தப்பிய கொள்ளையன்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரத்தை அடுத்த போளிப்பாக்கம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் ஆண்டாள் (வயது 75). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஆண்டாள் வீட்டில் இருந்து பக்கத்து தெருவில் வசிக்கும் மகன் வீட்டிற்கு நடந்து சென்றார். திரவுபதி அம்மன் கோவில் அருகே சென்ற போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஆண்டாள் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட் டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

    இதுகுறித்து ஆண்டாள் பாணாவரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமூக வலை தளங்களில் வீடியோ காட்சிகள் பரவல்
    • 11-ம் வகுப்பு மாணவரிடம் போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கரிலிருந்து அரக்கோணத்திற்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.

    அந்த பஸ் பாண்டிய நல்லூர்போடப் பாறை அருகே சென்று கொண்டிருந்தபோது அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் படிக்கட்டில் நின்றவாறு வந்தார்.

    அவரை டிரைவர் பாலாஜி கண்டித்து உள்ளே வருமாறு கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவன் டிரைவர் பாலாஜியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    அவருக்கு நெற்றிப்பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதை வீடியோ பதிவு செய்து சமூக வலை தளங்களில் பொதுமக்கள் வெளியிட்ட நிலையில், வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவரிடம் போலீசார் விசாரணை செய்ய உள்ளனர்.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
    • போலீசாரிடம் மனு அளித்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஒன்றியம் மேல்பாக்கம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரேசன் கடை உள்ளது.

    இந்த ரேசன் கடை அருகே உள்ள அரசு இடத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    அவர்கள் அப்பகுதியில் கற்களைக் கொட்டியும், கழிவு நீரை வெளியேற்றியும் ரேசன் கடைக்கு வரும் மக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.

    இது குறித்து கிராம மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில் ரேசன் கடை அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

    இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ரேசன் கடையை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ரேசன் கடையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வார்டு உறுப்பினர்களிடம் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் செந்தில்குமார், ஆறுமுகம், கிராமத் தலைவர் ஹேமச்சந்திரன் மற்றும் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்றிரவு அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

    மேலும் ரேசன் கடையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தி மனு அளித்தனர்.

    மனுவைப் பெற்றுக் கொண்ட போலீசார் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்களும், பெண்களும் கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கலெக்டர் அறிவுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் தகரக்குப்பம் ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

    விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    அப்போது அங்கிருந்த பெண்களிடம் கலெக்டர் உரையாடினார். அனைவரும் விவசாயிகள் தானே என கேட்டதற்கு ஆமாம் என தெரிவித்தனர்.

    அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகமான பெண் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிய வருகிறது. இது சட்டப்படி குற்றமாகும்.18வயது நிரம்பாத பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வது குற்றமாகும். பெண் பிள்ளைகள் மனதளவில் குடும்பத்தை நடத்த தயாராக இல்லாத நிலையில் அவர்களுக்கு திருமணம் செய்து குடும்பம் நடத்திட செய்வது அவர்களின் மனதளவிலும், உடலளவிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பழைய காலத்தில் இருந்தது வேறு இன்றைய நவீன காலத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்களை உங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்பதை உணர்ந்து அவர்களை கல்லூரி படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும்.

    இதை அனைவரும் மற்றவர்களுக்கு தெரிவியுங்கள்.பெண்கள் நினைத்தால் அனைத்தையும் தடுக்கலாம்.தயவு கூர்ந்து இதை ஒவ்வொவரும் உணர்ந்து செயல்பட வேண்டுமென கலெக்டர் வளர்மதி கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின்போது இணை இயக்குனர் வேளாண்மை வடமலை, துணை இயக்குனர்கள் விஸ்வநாதன், லதா மகேஷ், உதவி இயக்குனர்கள் பெருமாள், சண்முகம், பாலாஜி, வேளாண் அலுவலர்கள் சுரேஷ் குமார், நித்யா, வேளாண் உதவி பொறியாளர்கள் ரூபன் குமார், ரவிக்குமார், உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    ஆற்காட்டில் இருந்து சிப்காட், லாலாபேட்டை, ரெண்டாடி, கல்லாலமட்குப்பம் வழியாக சோளிங்கருக்கு அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது.

    அந்த பஸ், கல்லாலமட்குப்பம் வந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த போதை கும்பல் 3 பேர் பஸ்சை வழி மறித்து நிறுத்தினர்.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது 3 பேரும் அவர்கள் வைத்திருந்த பீர் பாட்டிலால் கண்ணாடியை உடைத்து விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து சோளிங்கர் கொண்டபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வந்த போலீசார் பஸ்சை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அதில் தப்பிச்சென்ற நபர்கள் நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் (வயது 33), கோகுல் (23), அப்துல் லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (25) என்பது தெரியவந்தது.

    இவர்களில் சீதாராமன், விஜய்யை போலீசார் கைது செய்தனர். கோகுலை தேடி வருகின்றனர்.

    • 8 தொழிலாளர்கள் காயம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் திருத்தணியில் இருந்து அரக்கோ நிறுவனத்திற்கு ணம் வழியாகஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை தனியார்நிறுவன பஸ் சென்றது. திருத்தணியை சேர்ந்த நிஷாந்த் (வயது 26) பஸ்சை ஓட்டி சென்றார். அரக்கோணத்தை அடுத்த சேந்தமங்கலம் பருவமேடு பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ரோட்டின் ஓரம் நின்றுக்கொண்டிருந்த லாரியின் பின்புறமாக மோதியது.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த தொழிலாளர்கள் சிவராமன் (36), பழனிவேல் (40), சசிக்குமார் (39), செல்வம் (39), விஜயன் (24), கணேஷ்குமார் (32), சேகர் (31) உள்ளிட்ட 8 தொழிலாளர்கள் படுகாயமடைந் தனர்.

    அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • கலெக்டர் தகவல்
    • விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 21-ந் தேதி வழங்கப்படும்

    ராணிப்பேட்டை:

    தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 21-ந்தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. ராணிப்பேட்டை மாவட் டத்தில் 1 முதல் 19 வயதுடைய 2,94,284 நபர்களுக்கு அங்கன்வாடி, பள்ளி, கல்லூரிகளிலும், 20 முதல் 30 வயதுடைய 76,493 பேருக்கு வீடு வீடாக சென்று அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம, நகர சுகாதார செவிலியர்கள் மேற்பார்வையில் மொத்தம் 3,70,777 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

    இந்த மாத்திரை உட்கொள்வதால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் இத்திட்டம் வெற்றிபெற முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும். லேசான காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடற்சோர்வு மற்றும் சிறு உடல்நல பிரச்சினை உள்ள குழந்தைகள் மற்றும் வேறு காரணங்களால் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 21-ந் தேதி அன்று மாத்திரைகள் வழங்கப்படும்.

    எனவே, மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைவரும் இந்த மாத்திரை உட்கொண்டு பயனடைந்து நலமுடன் வாழ வேண்டும். இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • மின் ஒயர்களை சேதப்படுத்தி விட்டு சென்றனர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நேற்று காலை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் வந்த போது பள்ளியின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சிய டைந்து உள்ளே சென்று பார்த்தபோது பள்ளியில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    மர்ம நபர்கள் பீரோவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் பொருட்கள் எதுவும் இல்லாததால் பள்ளியின் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாருக்கு செல்லும் மின் ஒயர்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.

    இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தனியார் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ காரணத்தால் மூடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் தொழிற்சாலையில் இருந்து புகையுடன் தீ பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, என்ன காரணத்திற்காக தீ விபத்து ஏற்பட்டது என விசாரித்து வருகின்றனர்.

    • மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47) கூலி தொழிலாளி. இவரது மகன் பரத் (13) இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தந்தை மகன் இருவரும் நேற்று மாலை நந்தியாலம் ஏரியில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது பரத் எதிர்பாராத விதமாக ஏரியில் தவறி விழுந்தான். இதனைகண்ட ஆறுமுகம் தனது மகனை காப்பாற்ற ஏரியில் குதித்தார். எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கினார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு தந்தை மகன் உடல்கள் மீட்கப்பட்டன. இருவரது உடல்களும் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மீன் பிடிக்க சென்ற தந்தை மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×