என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Love marriage. Young man suicide"

    • ேவறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடந்தது
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த பரதராமி கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரும் அதே கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இளம்பெண்ணை அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

    இந்த நிலையில் இளம் பெண்ணுக்கு தெரியாமல் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் வாலிபருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.அவர்கள் திருமணம் நேற்று ஆற்காடு அடுத்த விளாரி கூட்ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.

    இது குறித்து தகவலறிந்த வாலிபரின் காதலி நேற்று திமிரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். போலீசார் திருமண மண்டபத்திற்கு சென்று மணமகனை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    இதனால் களைகட்டி இருந்த திருமண மண்டபம் களை இழந்து திருமணத்திற்கு வந்தவர்கள் சோகத்தில் மூழ்கினர். நேற்று நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

    மேலும் இது குறித்து தொடர்ந்து போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்பை பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் இசக்கிமுத்து(வயது 29).
    • இசக்கிமுத்து சரிவர வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்ததாகவும், அதனை அவரது மனைவி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    நெல்லை:

    அம்பை பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் இசக்கிமுத்து(வயது 29). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் இசக்கிமுத்து சரிவர வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்ததாகவும், அதனை அவரது மனைவி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட இசக்கிமுத்து நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள சக்தி கோவில் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பல னின்றி நேற்று அவர் இறந்தார்.

    ×