என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராம நிர்வாக அதிகாரி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
- மன உளைச்சலில் விபரீதம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 38). இவர் மின்னல் கிராமத்தின் வி.ஏ.ஓ. ஆக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்யும்போது அது வேறு ஒருவரின் பெயருக்கு மாறி உள்ளது.
சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் இது சம்பந்தமாக அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமாவிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முகமது இலியாஸிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பட்டாவை மாறுதல் செய்து கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் முகமது இலியாஸ் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை திடீரென்று பாத்ரூமில் சத்தம் கேட்டது.
அப்போது அக்கம்பக்க த்தனர் ஓடிச் சென்று பார்த்தபோது இலியாஸ் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இலியாசை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து இலியாஸ் எதற்காக தற்கொலை செய்ய முயற்சி செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






