என் மலர்

  நீங்கள் தேடியது "pregnant death"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 108 ஆம்புலன்சில் உயிரிழந்த பரிதாபம்
  • போலீசார் விசாரணை

  ஆற்காடு:

  ஆற்காடு அடுத்த வளவனூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி, விவசாயி.இவரது மனைவி கல்பனா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 12 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கல்பனா தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.

  கல்பனாவுக்கு அடிக்கடி வலிப்பு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை கல்பனாவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

  அவரை உடனடியாக புதுப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது வழியிலேயே கல்பனா பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்பனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே மர்மமான முறையில் இறந்த 7 மாத கர்ப்பிணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  ஆண்டிப்பட்டி:

  ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி காலனியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 29). இவருக்கும் லெட்சுமிபுரம் காலனியைச் சேர்ந்த நந்தினி (வயது 19) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நந்தினி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

  பாண்டியராஜன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் நந்தினி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுவார், அக்கம் பக்கத்தினர் சமரசம் செய்து வைத்தும் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்தது. பாண்டியராஜன் குடிப்பழக்கத்தை விடாததால் நந்தினி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

  நேற்று இரவு நந்தினியின் தாய் குமுதாவிடம் தங்கள் மகள் தூக்குபோட்டு இறந்து விட்டார் என பாண்டியராஜன் தரப்பினர் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குமுதா விரைந்து வந்து பார்த்தபோது மகள் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

  இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் அளித்த புகாரில் கூறியதாவது:- பாண்டியராஜன் தரப்பினர் அடிக்கடி வரதட்சணை கேட்டு எனது மகளை துன்புறுத்தினர். இன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர். ஆனால் நந்தியின் சாவில் மர்மம் இருக்கிறது. எனவே இது குறித்து விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

  இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் பாண்டிய ராஜன் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து நந்தினி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  ×