என் மலர்
ராமநாதபுரம்
- சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- சட்ட தன்னார்வலர் கோட்டைச்சாமி முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தினையத்தூர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும் ராமநாதபுரம் மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும், திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வழக்கறிஞர் வினோத்குமார் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு பற்றி பேசினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். சட்ட தன்னார்வலர் கோட்டைச்சாமி முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.
- ஸ்ரீதரன் மாணிக்கம், பழனிக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், வட்டம், பட்டணம்காத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழக்கரை வட்டம் ரகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் 2024 வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத் தத்தை முன்னிட்டு நடை பெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், 18 வயது நிரம்பியவர்களுக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப் பித்தல் தொடர்பான பணி கள் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவ லரும், கலெக்டருமான விஷ்ணு சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்கா ளர்களின் பெயர்களை சேர்ப்பதற்காகவும், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கு 5.11.2023 மற்றும் 18, 19-ந் தேதி ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
அதனைத்தொடர்ந்து பட்டணம்காத்தான் பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தொடர்பாக வும் பொருட்களின் இருப்பு, பதிவேடுகள் தொடர்பாகவும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது வருவாய் கோட்டாட்சியர் கோபு, வட்டாட்சியர்கள் ஸ்ரீதரன் மாணிக்கம், பழனிக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- பி.வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி சார்பில் இலவச கண்-பொது மருத்துவ முகாம் நடந்தது.
- நவாஸ்கனி எம்.பி., சேர்மன் புல்லாணி தொடங்கி வைத்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ராமநாதபுரம் திருப்புல் லாணி ஈ.சி.ஆர். பள்ளப்பச் சேரி ரோட்டில் அமைந் துள்ள பி.வி.எம். மனநலக் காப்பகம் திறப்பு விழாவை முன்னிட்டு பி.வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனை மற்றும் ராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத் திய சர்க்கரை நோயாளி களுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் இன்று காலை நடைபெற்றது.
பி.வி.எம். அறக்கட்டளை போர்டு சேர்மன் சித்தார் கோட்டை முஹம்மதியா பள்ளிகளின் இணைத் தலைவரும், புருணை தொழிலதிபருமான எஸ்.டி.ஷாஜஹான் வழி–காட்டுத லின்படி, பி.வி.எம். அறக்கட் டளை நிர்வாகிகள் ஆலோச னைப்படி நடைற்ற இம்முகா மிற்கு பி.வி.எம். மருத்துவ சேவை அணியின் மாநில தலைவரும், சமூக சேவகரு மான யாசர் அரபாத் தலைமை தாங்கினார்.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் டாக்டர் ஆர்.கோகிலா ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் சிவ சுப்பிரமணியன், திருப்புல் லாணி ஊராட்சி மன்றத் தலைவர் கஜேந்திரமாலா, ஐ.மு.மு.க. மாநில செய லாளர் அன்வர் அலி, ஐ.மு.மு.க. தொண்டரணி மாநில பொருளாளர் அஹ மது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவரும், புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் எடிட்ட ரும், பி.வி.எம். அறக்கட்டளை சேர்மனும், பி.வி.எம். மன நலக்காப்பக நிறுவனருமான தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக் முகாம் அறி முக உரை நிகழ்த்தினார். ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி, திருப்புல் லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.
பி.வி.எம். மருத்துவ சேவை அணியின் மாவட்ட தலைவர் அபுல்ஹசன், மாவட்ட செயலாளர் ஷா நாஸ்கான், மாவட்ட துணைத்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் எம்.யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஹபீப் ரஹ்மான், முஹம்மது கனி, ஜாபர் ராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது யூனுஸ் கான், நகர துணைச் செயலாளர் சிவராஜா, நகர் செயலாளர் மன்சூர், நகர் பொருளாளர் சபரிநாதன், தி.மு.க. தலைமை கழக சொற்பொழிவாளர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் பங்கேற்றனர்.
மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பி.வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி ராமநாதபுரம் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வா கிகள் செய்திருந்தனர்.
- ராமநாதபுரத்தில் டீ கடைக்காரருக்கு நிதிஉதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
- டோனி, ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் டீக்கடை வைத்தி ருப்பவர் சிவலிங்கம். இவர் நேற்று வழக்கமாக கடை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இரவில் பெய்த கன மழை காரண மாக இவரது கடைக்கு அருகில் இருந்த மரம் ஒன்று சாய்ந்து டீக்கடையில் விழுந்தது.
இதில் இந்த கடை முற்றி லும் சேதமடைந்தது. இது குறித்து முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜ கண்ணப்பனுக்கு தெரிய வந்ததை அடுத்து பாதிக்க பட்ட சிவலிங்கத் திற்கு நிதிஉதவி வழங்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், தலைமையில் கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடுத்த நிதியுதவியை வழங்கினர்.அருகில் பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.
- நடுக்கடலில் ரூ. 1.50 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- இலங்கையை சேர்ந்த 5 பேர் கைது.
ராமேசுவரம்
இலங்கை தலைமன்னார் வழியாக ராமேசுவரத்திற்கு தங்கம் கடத்தல் நடைபெற உள்ளதாக தலைமன்னார் கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கடற் படையினர் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்ட னர். அப்போது சந்தேகத் திற்கு இடமாக ராமேசுவரம் நோக்கி சென்ற படகை இடைமறித்து சோதனை யிட்ட போது அதில், 2 கிலோ 150 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, தலை மன்னார் கடற்படை முகா மிற்கு படகு மற்றும் அதில் இருந்து 5 பேரை கைது செய்து மேல் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தலை மன்னார் பகுதியை சேர்ந்த வர்கள் என்பதும் தங்கத்தை நடுக்கடலில் தமிழக படகில் கொடுக்க கொண்டு செல் லப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந் துள்ளது. இது குறித்து தொடர்ந்து இலங்கை கடற் படையினர் மற்றும் போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த தங்கத்தை நடுக்கடலில் யாரிடம் கொடுக்க கொண்டு செல் லப்பட்டது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் ரகசிய விசாரணையில் ஈடு பட்டுள்ளனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1.50 கோடி மதிப்பு இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.
- கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையில் மரங்கள் சாய்ந்து, பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
- கோட்டைமேட்டில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழமையான மரம் சாய்ந்து விழுந்து மருத்துவமனையின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது.
பசும்பொன்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடலோர பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அனைத்து வகையான நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்தொடங்கி இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வானிலை ஆய்வு மையத்தின் தகவல் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த வரலாறு காணாத மழையால் வறண்டு கிடந்த பூமி செழித்துள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக தொண்டியில் 10.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதேபோல் ராமநாதபுரத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படுகிறது.
கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையில் மரங்கள் சாய்ந்து, பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக கமுதி, கிளாமரம், கீழராமநதி, கே.எம்.கோட்டை, மூலைக்கரைப்பட்டி, வடுகபட்டி, பெருமாள்தேவன்பட்டி, மண்டல மாணிக்கம், ராமசாமிபட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் 10 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.
இந்த தொடர் மழையின் காரணமாக கமுதி பெரிய கண்மாய், மண்டலமாணிக்கம் கண்மாய், வடுகபட்டி, நீராவி, பெரிய உடப்பங்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் கண்மாய்கள் நிரம்பின. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோட்டைமேட்டில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழமையான மரம் சாய்ந்து விழுந்து மருத்துவமனையின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது.
இதனை அடுத்து 10-க்கும் மேற்பட்ட கமுதி தீயணைப்புதுறை வீரர்கள் எந்திரங்கள் மூலம் சாய்ந்த மரத்தை அகற்றினர். அதே போல் அபிராமம் அடுத்துள்ள டி.வல்லக்குளம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் நேற்று பள்ளிக்கு மழையில் நனைந்தபடி மாணவர்கள் பள்ளிக்குள் சென்றனர்.
மேலும் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் வகுப்பறைக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் சம்பா சாகுடிபடியை விவசாயிகள் முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. அத்துடன் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பும் தாமதம் ஆனதால் குறுகிய கால பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் சம்பா சாகுபடியை தொடங்க விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அயத்தமாகி வருகிறார்கள்.
- மதுரையில் நடப்போம் நலம் பெறுவோம் திட்ட தொடக்க விழா நடந்தது.
- அனைத்து பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் நடை பயிற்சியில் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை நடத்தும் சுகாதார நடை பயிற்சி நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடக்க விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் தொடங்கி, ஆஷி பன்னோக்கு மருத்து வமனை, அம்மா பூங்கா, வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானம், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக பி ன்புறம், போலீஸ் சூப்பி ரண்டு முகாம், மகாத்மா காந்தி நகர், கிழக்கு கடற்கரை சாலை (Ajfan Dates), புதிய சோதனை சாவடி, காவல் கண்கா ணிப்பாளர் முகாம், அரசு விருந்தினர் மாளிகை வழியாக கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் வரை மொத்தம் 8 கி.மீ நடை பயணம் மேற்கொள்ள ப்பட்டது.அனைத்து பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் நடை பயிற்சியில் கலந்து கொண்டனர். மேலும் நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக குடிநீர், ஓய்வு நாற்காலிகள் மற்றும் வழிகாட்டி பலகைகள், நடைபயிற்சி நன்மைகள் குறித்த பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தினை இன்று காலை சனிக்கிழமை ராம நாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை,மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜீலு,சார் கலெக்டர் அப்தாப் ரசூல்,சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் அர்ஜுன் குமார் (ராமநா தபுரம்), இந்திரா (பர மக்குடி),செய்தி மக்கள் தொடர்பு அலு வலர்பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயகுமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் தினேஷ்கு மார்,மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், வாலாந்த ரவை ஊராட்சி மன்றத் தலைவர் முத்தமிழ் செல்வி பூரணவேல்,உட்பட உள்ளாட்சி பிரதிநி திகள், அரசு அலுவ லர்கள் பங்கேற்றனர்.
- திருப்புல்லாணியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
- தாதனேந்தல் ஊராட்சி மன்றத்தலைவர் டாக்டர் ஆர்.கோகிலா ராஜேந்திரன் வரவேற்றார்.
கீழக்கரை
ராமநாதபுரம்-திருப்புல்லாணி ஈ.சி.ஆர் பள்ளப்பச்சேரி ரோட்டில் பி.வி.எம் மனநலக்காப்பகம் திறப்பு விழாவை முன்னிட்டு பி.வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை 5-ந் தேதி நடக்கிறது.
ராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்தும் சர்க்கரை நோயாளி களுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நாளை நடைபெறுகிறது.
பி.வி.எம் அறக்கட்டளை போர்டு சேர்மன் சித்தார் கோட்டை முகம்மதியா பள்ளிகளின் இணைத் தலைவர், இளம் வள்ளல் புருணை தொழிலதிபர் ஹாஜி எஸ்.டி.ஷாஜஹான் வழிகாட்டுதலின் படி,
பி.வி.எம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசனை படி நடைபெறும் இந்த முகாமிற்கு பி.வி.எம் மருத்துவ சேவை அணியின் மாநில தலைவர் சமூக சேவகர் யாசர் அரபாத் தலைமை வகிக்கிறார்.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் டாக்டர் ஆர்.கோகிலா ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்த உள்ளார்.திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்பிரமணியன், திருப்புல்லாணி ஊராட்சி மன்றத் தலைவர் கஜேந்திரமாலா, ஐ.மு.மு.க மாநில செயலாளர் அன்வர் அலி, தொண்டரணி மாநில பொருளாளர் அகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவரும், புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் எடிட்டரும், பி.வி.எம் அறக்கட்டளை சேர்மனும், பி.வி.எம். மனநல காப்பகம் நிறுவனருமான தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக் முகாம் அறிமுக உரை நிகழ்த்த உள்ளார். ராமநாத புரம் தொகுதி எம்.பி நவாஸ்கனி, திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி ஆகியோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைக்க உள்ளனர்.
பி.வி.எம் மருத்துவ சேவை அணியின் மாவட்ட தலைவர் அபுல்ஹசன், மாவட்ட செயலாளர் ஷாநாஸ் கான், மாவட்ட துணைத்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் எம்.யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஹபீப் ரஹ்மான், முஹம்மது கனி, ஜாபர், ராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது யூனுஸ் கான், நகர் துணை செயலாளர் சிவராஜா, நகர் செயலாளர் மன்சூர், நகர் பொருளாளர் சபரிநாதன், தி.மு.க தலைமை கழக சொற்பொழிவாளர் முஜிபுர் ரஹ்மான் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பி.வி.எம் அறக்கட்டளை மருத்துவ சேவை அணி ராமநாதபுரம் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
- ராமநாதபுரம் கலெக்டர் வலியுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சக மும், தமிழ்நாடு அரசு கைத் தறி துறையும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவி லான சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி கண் காட்சியை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-
கைத்தறி கண்காட்சி வருகிற 9-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இதன் நோக்கம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதே ஆகும். இந்த கண்காட்சி யில் 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.
இதில் பல்வேறு ஊர்க ளில் சிறப்பு வாய்ந்த கைத்தறி ரகங்கள் கிடைக் கும். மேலும் தமிழக அரசு வாடிக்கையாளர்களுக்கு பருத்தி ரகங்களுக்கு ஆடை ஒன்று 30சதவீதமும், பட்டு ரகங்களுக்கு ரூ. 300 வரை தள்ளுபடியும் வழங்கப்படு கிறது. சங்க கமிஷனாக 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படு கின்றது. மேலும் இந்த சிறப்பு கண்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப் படுகிறது
கடந்த ஆண்டு நடத்தப் பட்ட கண்காட்சியில் ரூ.65.89 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. பண்டிகைகளுக்கு கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கைத்தறி துறை உதவி இயக்குநர் ரகுநாத், ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேதுகருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பிரபாகரன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேஷய்யன், கோதண்ட ராமன், கைத்தறித்துறை ஆய்வு அலுவலர் ரத்தின பாண்டி, கைத்தறி அலுவலர் லட்சுமி வெங்கட சுப்பிர மணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மிரட்டியதாகவும் தெரிகிறது.
- போலீஸ் ஏட்டுவுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள உறைக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுராஜா (வயது45). பனைத்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது உறவினர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாயல்குடி போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் ஜேசுராஜா பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் தலைமையில் ஏட்டு காளிமுத்து(35) மற்றும் போலீசார் ஜேசுராஜாவை கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதில் தகராறு முற்றவே, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்த ஜேசுராஜா போலீசாரை வெட்ட முற்பட்டார். இதனை ஏட்டு காளிமுத்து தடுக்க முயன்றார். அப்போது அவருக்கு கால் பகுதியில் சரமாரி வெட்டு விழுந்தது. உடனே சுதாரித்துக் காொண்ட போலீசார் சுற்றி வளைத்து ஜேசுராஜாவை பிடித்து கைது செய்தனர்.
அரிவாள்வெட்டில் காயமடைந்த ஏட்டு காளிமுத்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். போலீஸ் ஏட்டுவுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 10 படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
- சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந் தேதி மீன்பிடிக்க சென்றபோது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இதே போன்று கடந்த மாதம் சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப் படகுகளுடன் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
64 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று 10 விசைப்படகுகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள 64 மீனவர்கள், 10 படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற மீனவர்கள் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதனையடுத்து 5 நாட்களுக்கு பின் இன்று அதிகாலை முதல் ராமேசுவரத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் ராமேசுவரம் துறைமுகம் மீண்டும் பரபரப்பானது. ஆனாலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்று குறைந்த அளவே மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை பரமக்குடி, திருவாடானை, ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் சில இடங்களில் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தனுஷ்கோடியில் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
- கால்நடை காணை நோய் தடுப்பூசி முகாம் 6-ந் தேதி முதல் 21 நாட்கள் நடக்கிறது.
- தங்களது மாட்டினங்களை தவறாது அருகிலுள்ள கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கால்காணை மற்றும் வாய்காணை நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்நோயினால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலை திறன் குறைவு, கறவைமாடுகளின் சினைப்பிடிப்பு தடை படுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்றவை ஏற்படுகிறது.
எனவே, கால்நடைகளை தாக்கும் கால்காணை மற்றும் வாய்காணை நோயினை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்காணை மற்றும் வாய்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 4-வது சுற்று வருகிற 6-ந் தேதி முதல் தொடர்ச்சியாக 21 நாள்களும், விடுபட்ட கால்நடைகளுக்கு டிசம்பர் 10-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
எனவே மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கால்நடை வளர்ப்போர்கள் தங்களது மாட்டினங்களை தவறாது அருகிலுள்ள கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






