search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை காணை நோய் தடுப்பூசி முகாம்
    X

    கால்நடை காணை நோய் தடுப்பூசி முகாம்

    • கால்நடை காணை நோய் தடுப்பூசி முகாம் 6-ந் தேதி முதல் 21 நாட்கள் நடக்கிறது.
    • தங்களது மாட்டினங்களை தவறாது அருகிலுள்ள கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கால்காணை மற்றும் வாய்காணை நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்நோயினால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலை திறன் குறைவு, கறவைமாடுகளின் சினைப்பிடிப்பு தடை படுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்றவை ஏற்படுகிறது.

    எனவே, கால்நடைகளை தாக்கும் கால்காணை மற்றும் வாய்காணை நோயினை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்காணை மற்றும் வாய்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 4-வது சுற்று வருகிற 6-ந் தேதி முதல் தொடர்ச்சியாக 21 நாள்களும், விடுபட்ட கால்நடைகளுக்கு டிசம்பர் 10-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    எனவே மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கால்நடை வளர்ப்போர்கள் தங்களது மாட்டினங்களை தவறாது அருகிலுள்ள கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×