சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சட்ட தன்னார்வலர் கோட்டைச்சாமி முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சட்ட விழிப்புணர்வு முகாம்
Published on

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தினையத்தூர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும் ராமநாதபுரம் மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும், திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வழக்கறிஞர் வினோத்குமார் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு பற்றி பேசினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். சட்ட தன்னார்வலர் கோட்டைச்சாமி முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com