என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
    • மாணவர்கள் களிமண், பனைஓலை, வைக்கோல், தேங்காய் நார், காகிதம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வீட்டு உபயோகப்பொருட்கள் செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர்கள் தயாரித்த நாட்டுப்புற கைவினை கலைப் பொருட்களின் கண்காட்சி நடந்தது. 8-ம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் நாட்டுப்புற கைவினைக் கலைகள் என்ற பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கைவினை கலைப் பொருட்களைச் செய்துவர தமிழாசிரியர் கிருஷ்ணவேணி மாணவர்களுக்கு செயல்திட்டம் கொடுத்திருந்தார்.

    அதன் அடிப்படையில் மாணவர்கள் களிமண், பனைஓலை, வைக்கோல், தேங்காய் நார், காகிதம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள், ஓலை கொட்டான்கள், உடுக்கை, பறவைக் கூடுகள், படகு போன்ற பொருட்களைச் செய்தனர்.

    இந்த பொருட்களின் கண்காட்சியை தலைமையாசிரியர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார். இதில் தாதனேந்தலைச் சேர்ந்த அசிகா என்ற மாணவி செய்த பனை ஓலையில் புட்டு அவிக்கும் பெட்டி, பொக்கனாரேந்தல் ரித்திகாஸ்ரீ, திருப்புல்லாணி ஆயிசத் சபா, தவுபிக் நிஷா ஆகியோர் பனை ஓலையில் செய்திருந்த ரோஜா, தாமரை பூக்கள், குருவிகள் உருவங்கள் அனைவரையும் கவர்ந்தது.

    • தேவர் ஜெயந்தி விழாவுக்கு வருபவா்களின் காலணிகளை பாதுகாக்க போலீசார் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
    • இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று ராமநாதபுரம் கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தி விழா, குரு பூஜை விழாவுக்கு வருபவா்களின் காலணிகளை பாதுகாக்க போலீசார் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் 30-ந் தேதி அன்று பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளும் போது ஒவ்வொரு ஆண்டும் காலணிகளை விட்டுச் செல்லும் பொதுமக்கள் தரிசனம் முடிந்து திரும்ப எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு இந்தாண்டு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களின் காலணி களை முன்பக்கம் விட்டு சென்று விட்டு நினை விடத்தில் தரிசனம் முடிந்து பின்பக்கம் வாசல் வழியாக காலணிகளை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

    அத்தியாவசிய அலுவலகப்பணி காரணமாக இந்தாண்டு இதற்கான பணிகள் மேற்கொள்ளவில்லை. முக்கிய பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்க காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகப் பணியாளர்கள் பணி மேற்கொண்டதாக தவறான செய்திகள் வெளிவந்துள்ளது. இத்தகைய செய்தி முற்றிலும் தவறாகும். பொதுமக்களுக்கோ, முக்கிய பிரமுகர்களுக்கோ காலணிகளை பாதுகாக்க காவல் துறையினரையோ, வருவாய் துறையினரையோ, பேரூராட்சி துறையினரையோ பணி நியமிக்கப்படவில்லை.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
    • விநாயகர், முருகன் ஆகிய பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள 13ம் நூற்றாண்டை சேர்ந்த நம்பு ஈஸ்வரர் கோவிலில் விநாயகர், முருகன் ஆகிய பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்றது. இதில் 1008 சங்குகளால் சங்காபிஷேகமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. சிவாச்சாரியார்களால் யாகம் வளர்க்கப்பட்டு, மந்திரங்கள் ஓதப்பட்டு சிவன், விநாயகர், முருகன், நந்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மண்டல பூஜை நடைபெற்றது.

    ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச தையல் மெஷின், வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தர விட்டார்.

    பெறப்பட்ட 195 மனுக்க ளில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.

    எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தெரி வித்தார்.

    தொடர்ந்து ஆதிதி ராவிடர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கியதுடன், தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வன்கொடுமை தடுப்புச்ச ட்டத்தில் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசு தாரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா 9 பயனாளிகளுக்கு வழங்கி னர்.

    இந்த கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கந்தசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 100 முதல் 200 யூனிட் வரை, 200 முதல் 500 யூனிட்வரை, 500 யூனிட்டிற்கு மேல் என்று பல விகிதங்களில் மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது.
    • தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவியுடன் தான் இந்த கருவியை வீடுகளில் மீட்டரில் பொருத்த முடியும்.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் சேகு பஷீர் அகமது. இவரது மகன் முகம்மது சமர் மரைக்கா (வயது 16). இவர் கீழக்கரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய கருவியை கண்டு பிடித்துள்ளார்.

    இதுகுறித்து மாணவர் முகம்மது சமர் மரைக்கா கூறியதாவது:-

    வீடுகளில் பல்வேறு மின் சமையல் சாதனங்களை மக்கள் உபயோகித்து வருகின்றனர். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சார யூனிட் அளவு தெரிந்து கொள்ள முடியாத நிலையில் ஏராளமானோர் இருந்து வருகின்றனர். இதனால் பயன்பாடு அதிகரித்து மின் கட்டணம் அதிகரித்து கட்டணத்தை செலுத்த முடியாத மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    மின்சார பயன்பாட்டை நுகர்வோர் முன்னதாக அறிந்து கொள்ளும் வகையில் கருவி தயாரித்து உள்ளேன். மின் பயன்பாட்டின் அளவு இலக்கை நெருங்கும்போது இந்தக் கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதன் மூலம் நாம் அதிகப்படியான மின்சார பயன்பாட்டை தவிர்த்து கொள்ள முடியும்.

    தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது, அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 100 முதல் 200 யூனிட் வரை, 200 முதல் 500 யூனிட்வரை, 500 யூனிட்டிற்கு மேல் என்று பல விகிதங்களில் மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது.

    இந்த மின்சார மீட்டரில் 90 யூனிட் வந்தவுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை ஒலி எழுப்பும். அதே போல் பல விகிதங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் வகையில் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் விழிப்புணர்வு அடைந்து மின்சார பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடியும்.

    மேலும் பல்வேறு வசதிகளை பெறும் வகையில் இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவியுடன் தான் இந்த கருவியை வீடுகளில் மீட்டரில் பொருத்த முடியும். இந்தக் கருவியை கண்டு பிடிக்க 6 மாத காலமானது. இதனுடைய மொத்த செலவு ரூ.1500 ஆகும். மின்சார பயன்பாட்டை நுகர்வோர் அறிந்து கொள்ள நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற முயற்சியில் ஆய்வு மேற்கொண்டேன்.

    தற்போது அதற்கான கருவி கண்டு பிடித்துள்ளேன். இந்த கருவியை நிறுவியவுடன் மின் கட்டணம் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஏனென்றால், அவை நாம் மின்சாரத்தை பயன்படுத்தும் அளவை எச்சரிக்கை ஒலியாக அளிக்கும்.

    நாம்தான் அதன் அடிப்படையில் மின்சாரத்தை பயன்படுத்தும் தன்மையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இதை சந்தைப்படுத்த அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் மாணவர் முகம்மது சமர் மரைக்காவை சந்தித்து வாழ்த்தினர்.

    • கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்த இளம்பெண் மண்டபம் கேம்ப் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    • மண்டபம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் முகமது சாதிக். இவரது மகள் சல்மியா பானு (வயது 26). இவரும் மண்டபம் ஏ.கே.எஸ். தோப்பு பகுதியை சேர்ந்த காசி விக்னேஸ்வரன் (28) என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் சல்மியா பானுவை தனக்கு பதிவு திருமணம் செய்து தருமாறு காசி விக்னேஸ்வரன் கேட்டுள்ளார். பெரியவர்களிடம் பேசிவிட்டு பின்னர் சொல்கிறேன் என்று கூறி அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து சல்மியா பானுவிடம் செல்போனில் பேசி வீட்டை விட்டு வருமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த காசி விக்னேஸ்வரன், சல்மியா பானு வீட்டிற்கு நேரில் வந்து தகராறு செய்துள்ளார். அப்போது தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சல்மியா பானுவின் முதுகு, வலது மற்றும் இடது கைகளில் வெட்டினார். தடுக்க வந்த முகமது சாதிக் மற்றும் அவர் மனைவியை கல்தூணில் பிடித்து தள்ளிவிட்டு, தகாத வார்த்தைகளை பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்த சல்மியா பானு மண்டபம் கேம்ப் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மண்டபம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விக்னேஸ்வரனை தேடி வருகின்றனர். வீடு புகுந்து இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராமநாதபுரத்தில் பசும்பொன் தேவர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்.
    • அனைத்து மறவர் நல கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    பரமக்குடி

    பசும்பொன் முத்துராம லிங்க தேவர் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனைத்து மறவர் நல கூட்டமைப்பு மற்றும் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் பசும்பொன்னில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற காவல் துறை ஐ.ஜி.யுமான விஜயகுமார் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி. துரைச்சாமி, செம்பிய நாடு மறவர் சங்கத் தலைவர் சி. எம். டி. ராஜாஸ் சேதுபதி, மலேசியா முக்குலத்தோர் சங்கத்தலைவர்-தொழில் அதிபர் குணாத்தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவையொட்டி ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் புகைப்படம் பொறித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டும் என்றும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், அவரின் நினைவாக ராமநாதபுரத்தில் பசும்பொன் தேவர் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்றும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து மறவர் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் செம்பிய நாடு மறவர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் வாகனம் மோதுவது போல் வந்ததை கண்டித்த வாலிபரை 10-க்கும் மேற்பட்டோர் தாக்கினர்.
    • தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தேவகோட்டை

    ராமநாதபுரம் மாவட்டம் வீரசங்கிலி மடத்தை சேர்ந்தவர் பீர்முகமது. இவரது மகன் முகம்மது ஆசிப்(23). கூலி தொழிலாளி. இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை முகமதியர் பட்டணம் பகுதியில் உள்ள தனது உறவினர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் முகமதுஆசிப் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது நகராட்சி சமுதாய கூடம் அருகில் வந்தபோது எதிரே இருசக்கர வாக னத்தில் வந்த ஒருநபர் மோதுவது போல் வந்துள்ளார்.

    இதனை முகமதுஆசிப் கண்டித்தார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் செல்போன் மூலம் சிலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முகமது ஆசிப்பை தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை பொது மக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    10-க்கும் மேற்பட்ட நபர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இதுபற்றி தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து 5-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினார்.

    • தேவர் சிலைக்கு வழங்கப்பட்ட வெள்ளி கவசம் விஷேச நாட்களில் அணிவிக்கப்படும்.
    • முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நேற்று நடைபெற்றது.

    இதில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் வெள்ளி ருத்ராட்ச மாலை அணிவித்து தீபாராதனை காட்டினார்.

    வெள்ளி கவசம்

    இதைத்தொடர்ந்து தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். அவர்களிடம் தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக புதிதாக செய்யப்பட்ட வெள்ளி கவசத்தை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். வெள்ளி கவசம் 10 ½ கிலோ எடை கொண்டதாகும்.

    வெள்ளி கவசம் வழங்கும் நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வெற்றிவேல், எம்.பி.க்கள் ரவீந்திரநாத், தர்மர், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதிதாக வெள்ளி கவசம் வழங்கியது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    இன்றைக்கு அ.தி.மு.க. சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு வெள்ளி கவசம் வழங்கியுள்ளோம். இங்குள்ள அறக்கட்டளை நிர்வாகத்தினர் அந்த வெள்ளி கவசத்தை அவர்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டு எப்போதெல்லாம் விஷேச நாட்களில் அதனை சாற்ற வேண்டுமோ அப்போ தெல்லாம் அவர்கள் முறைப்படி சாற்றுவதற்கு உரிமை கொடுத்துள்ளோம்.

    அ.தி.மு.க. ஒருங்கி ணைப்பாளர் நான் தான். அந்த அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் நான் வெள்ளி கவசம் வழங்கியிருக்கிறேன். அ.தி.மு.க.வில் 1 ½ கோடி தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மண்டபம் ஒன்றிய தி.மு.க.செயலாளர் பிரவீன் தலைமையில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மேற்கு ஒன்றிய தி.மு.க, செயலாளர் பிரவீன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம்

    பசும்பொன்னில் தேவர் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜையையொட்டி முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தந்த இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. ஆணைக்கிணங்க மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் பிரவீன் தலைமையில் மாவட்ட நிர்வாகம் அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி ஏராளமான கட்சி நிர்வாகிகள் காரில் சென்று உற்சாக வரவேற்பளித்தனர்.

    முன்னதாக அகஸ்தியர் கூட்டத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க, செயலாளர் பிரவீன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட கவுன்சி லர்கள் கவிதா கதிரேசன், ரவிச்சந்திர ராமவன்னி, பொதுக்குழு உறுப்பினர் தண்டபானி, ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி, கிளை செயலாளர்கள் கிருஷ்ணா, ராக்கு, மகேசுவரன், சங்கர், சாமி, சுகுன சீலன், சோமசுந்தரம், கோட்டைசாமி, செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
    • கழிவு நீர் கடலில் கலக்கும் முகத்துவாரத்தின் கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

    ராமேஸ்வரம்:

    ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவிலில் இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் 22 புனித தீர்த்த கிணறுகள், பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வரிசை முறை, பிரகாரங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு வசதிகள், கழிவு நீர் கடலில் கலக்கும் முகத்துவாரத்தின் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளையும் வழங்கினார்.

    பின்னர், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்தும், ஒருங்கிணைந்த பெருந்திட்டப்பணிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

    • முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தினார்.
    • அப்போது பேசிய அவர், முத்துராமலிங்க தேவருக்கு அ.தி.மு.க. சார்பில்தான் வெள்ளிக்கவசம் வழங்கினேன் என்றார்.

    ராமநாதபுரம்:

    முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய பின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சமீபத்தில் தேவர் தங்ககசம் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான் தான். அதிமுக சார்பிலேயே வெள்ளிக்கவசத்தை வழங்கி உள்ளேன். வெள்ளிக்கவசம் 10.4 கிலோ எடை கொண்டது.

    ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என தெரிவித்தார்.

    ×